10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மரண அறிவித்தல் -திரு சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (சீனா அண்ணை)

இளைப்பாறிய இ.போ.ச. சிரேஸ்ட சாலை பரிசோதகர் – பருத்தித்துறை, மன்னார், யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகத்தலைவர்
வயது 76

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கந்தசுவாமி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கண்மணியம்மா(கிளியக்கா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

புண்ணியமூர்த்தி(பாபு- நோர்வே), கிருஸ்ணமூர்த்தி(ரூபன்- லண்டன்), சிவமூர்த்தி நகுலன்), காலஞ்சென்ற அபிராமி(இ.போ.ச கணக்காய்வாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், வள்ளியம்மை சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,

சுபத்திரா(நோர்வே), இராஜேஸ்வரி(லண்டன்), செல்வகுமாரி(ஆசிரியர்- கிளி பரந்தன் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ரத்ன வாத்தியார்), சின்னத்தம்பி(தலைவர் வலி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கம்) மற்றும் முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிராம், கீரன்(நோர்வே), சஜீதன், லக்சதன், கௌசிதன்(லண்டன்), பவித்திரா, ஹன்சிகா நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புண்ணியமூர்த்தி(பாபு) – மகன்
கிருஷ்ண மூர்த்தி(ரூபன்) – மகன்
சிவமூர்த்திநகுலன்) – மகன்
சிவரூபன் – மருமகன்

 

0 Comments