10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]மறைந்த பண்டிதர் முருகேசு அவர்களின் வாழ்க்கையைப்பற்றி…..[:]

[:ta]

மறைந்த பண்டிதர் N.S.முருகேசு அவர்கள் நீர்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சிவத்தம்பிக்கும் நாகமுத்துவிற்கும் 08-09-1908ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை சைவத்தமிழ் வித்தியாலயத்தில் பயின்றார். பள்ளிக் காலங்களில் சைவ சமயத்திலும் தமிழ் இலக்கியம் பண்பாடு விளையாட்டுக்களில்  மிகவும் நாட்டம் உள்ளவராக விளங்கினார். மேலும் கோப்பாய் சாதனா பாடசாலையில் பயின்று 1926 ம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிச்சாலைக்கு தேர்வு பெற்று சிறந்த சித்திகளுடன் தேர்ச்சியும் பெற்றார். அவர் கல்வி போதிப்பதே தன் வாழ்நாளின் நோக்கம் எனக் கருத்தில் கொண்டு வாழ்ந்தார். முதலில் தின்னவேலி ஆசிரிய கலாசாலையிலும்  பின் சிறுகாலம் சைவத்தமிழ் வித்தியாலயத்திலும்   பணியாற்றினார்.  அதைத் தொடர்ந்து 01-12-1932 ல் இருந்து 30-03-1965 வரையும் உரும்பிராய் சந்திரோதயா வித்தியாலயத்தில் அதிபராகவும் ஆசிரியராகவும் முற்பத்திமூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அவர் கடமை  கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர். தனது போக்குவரத்து சாதனமாக துவிச்சக்கரவண்டியை பயன்படுத்தினார். அவர் கோப்பாய் கிஷ்ணர் கோவில் சந்தியில் போகும்போது அங்கிருக்கும் மக்கள் பண்டிதர் போகிறார் காலை 7:05 நிமிடம் ஆகிவிட்டது என்று மணி பார்க்காமல் கூறுவார்கள். அந்தளவுக்கு அவர் தன் கடைமையில் நேரத்தைக் கடைப்பிடித்தார். பின்பு 1965ல் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பிரதம பகுதிக்கு அதிபராக நியமனம் பெற்று மூன்று ஆண்டுகள் சேவை செய்து 07-09-1968ம் ஆண்டு அவரது 60 ஆவது அகவையில் இளைப்பாறினார்.

[:]

1 Comment

  1. He was a nice man in Neervely south well known person he was tall man and he did somany socialwork help his people he was takecare our temple he was a president of our cooperative store he was a head master when we ware young he was very good ralationship with our family his grandcheildren are very good position his one of grandson is a famous cardiologist in Srilanka he works in kanday hospital his soul RIP ve are really prouf of it our Neervely association give him respect at VALLAIYADI VALLAI thanks

Leave A Reply