10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மாணவர்கள் வெறுப்பது படிப்பை அல்ல…….[:]

[:ta]

ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்? மாணவர்களைப் பற்றி, ஒரு செய்தி, நாய்களில் முரட்டு நாயை ஒருவர் வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு டாபர்மேன் என்று பெயர். அப்படிப்பட்ட நாயை ஒருவர் வளர்த்து வந்தார். அந்தநாய்க்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே அதற்கு மருந்து தருவதற்காக அந்தப் பணக்காரர், கால்நடை மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி வருகிறார். வீட்டிலுள்ள பலரையும் அழைத்து நாயை அமுக்குங்கள் என்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இறுக்கி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். மருந்தை எடுத்து அந்த நாயின் வாயில் ஊற்றினால், அந்த நாய் நாலு பேரையும் தள்ளிக் கொண்டு மருந்தையும் தட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு மருந்தைக் கொண்டு வந்தார். இந்த நாய் இப்படித் தட்டிவிட்டதே என வருத்தப்பட்டு, மீண்டும் திரும்பினார். ஓர் இன்ப அதிர்ச்சி! மெதுவாக உயர் நடைபோட்டு வந்து அதுவாகவேநிதானமாக நக்கிக் குடிக்க ஆரம்பித்தது. அவர் ஆச்சரியமடைந்தார். இச்சம்பவத்தில் நாய் மருந்து குடிப்பதை வெறுக்கவில்லை. ஆனால் மருந்து கொடுத்த முறையை வெறுக்கிறது. மாணவர்கள் வெறுப்பது படிப்பை அல்ல, கற்பிக்கும் முறையைத்தான் வெறுக்கிறார்கள்.

[:]

0 Comments

Leave A Reply