10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மாணவர் தொகை அதிகரிப்பால் இடவசதியின்றி பாலர்பகல்விடுதி

நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதியில் தற்பொழுது மாணவர்தொகை 78 ஆக உயர்ந்துள்ளது. பாலர்நிலைய நிர்வாகத்தின் திறமையான நிர்வகிப்பு மற்றும் தரமான கல்வி  பராமரிப்பு போன்ற காரணங்களினால் மாணவர்களில் புதிதாக இணைவோர் தொகை அதிகரித்துள்ளது.தூரத்தில் உள்ளவர்கள் கூட இங்கு தமது பிள்ளைகளை இணைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். பதிவின்படி மாணவர்கள் தொகை 94 ஆகவும் தினசரி பாலர்நிலையம் வருகின்ற மாணவர்கள் தொகை 78 ஆகவும் காணப்படுகின்ற அதேவேளை பெரும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் கட்டில்களும் குறைவாக காணப்படுகிறது. மாற்றுவழிகளை பாலர்பகல்விடுதி நிர்வாகம் தேடிவருகின்றது.

0 Comments

Leave A Reply