10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மாலைவைரவர் கோவிலடி மக்களுக்கு உதவி

நாட்டில் தற்காலத்தில் நிலவும் இடர் நிலையைக் கருத்திற்  கொண்டு இன்றும் எமது கிராமமான நீர்வேலி மேற்கு மாலையில் அத்தியாவசியப்  பொருட்கள் அடங்கிய சுமார் 60 பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இவ் அத்தியாவசியப் பொருட்களை நீர்வேலி மேற்கு மாலைக்கிராமத்தில் வசிக்கும் நாகலிங்கம் குடும்பத்தினர் வழங்கிவைத்துள்ளனர். இதற்க்கான நிதி உதவிகளை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நாகலிங்கம் குடும்பத்தின் பிள்ளைகள்  வழங்கியிருந்தனர்.இவ் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை ஸ்ரீ சுவர்ணா சனசமூக நிலைய நிர்வாகிகளும் மாலை இளைஞர் அணியும்  இணைந்து 05.05.2020  ஸ்ரீ சுவர்ண சனசமூக நிலையத்தில் வைத்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவ் உதவிகளை வழங்கிய நாகலிங்கம் குடும்பத்தினருக்கும் ஸ்ரீ சுவர்ண சனசமூக நிலைய நிர்வகிகளுக்கும் மாலை இளைஞர்களுக்கும் பயனாளிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 Comments