10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மாலைவைரவர் கோவில்- ஆலயத்தி்ன் சுற்றுக்கொட்டகை

ஆலயத்தி்ன் சுற்றுக்கொட்டகை அமைப்பதர்கான அடித்தளமிடப்பட்டு பலஅடியவர்களின் நிதிப்பங்களிப்பின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களினதும் நிதிப்பங்களிப்பின் கீழ் ஆரம்பகட்டமாக சுற்றுக் கொட்டகைக்கான தூண்கள் வில்லு வளைவு கொண்ட இணைப்பு இளுவைத்தூண்கள் வீம் என்பன முமழுமையாக அமைக்கப்பட்டிருந்த போதிலும் கூரை அமைபபதற்கான நிதி பற்றாக்குறை காரணமாக கூரை அமைத்தல் தடைப்பட்டிருந்த சந்தர்பத்தில் எமது கிராமத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துக் காலமான அமரர் நாகலிங்கம் ஆனந்தராஜா அவர்களின் நினைவாக இக்கூரையை முற்று முழுதாக அமைத்துத்தருவதற்கு அவரது மனைவி ஆனந்தராஜா நந்தினி முன்வந்தார் இதற்காக அவர் சுமார் முப்பது இலட்சம்  இலங்கை ரூபா பணத்தொகையை ஆலயநிர்வாக சபையினரிடம் வழங்கியிருந்தார். இதற்க்கமைய கூரை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தறுவாயை எட்டியுள்ளதென்பதை அறியதருவதோடு புகைப்படங்கள் சிலவற்றையும் புலம்பெயர் அடியவர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்கின்றது.

0 Comments

Leave A Reply