10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மிகச்சிறப்பாக இயங்கி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா[:]

[:ta]

நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் கடந்த இருபது ஆண்டுகளிற்கு மேலாக மிகச்சிறப்பாகவும் திறமையாகவும் இயங்கி வருகின்றது. ஒரு வருடத்தில் மழலைகளுக்கான    மொழிப்பரீட்சைகள் கோடைகால கடற்கரைக் கொண்டாட்டம் வசந்தகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் அத்துடன் மிகப்பெரிய விழாவான வாழையடி வாழை என பல நிகழ்வுகளை நடாத்தி கனடா வாழ்  நீர்வேலி மக்களை ஒருங்கிணைக்கும் உன்னத பணியை ஆற்றி வருகின்றது. ஜனநாயக ரீதியில் குறுகிய காலத்தில் பொதுக்கூட்டங்களை நடாத்தி புதிய நிர்வாகங்கள் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கி மிகச்சிறப்பாகவும் திறமையாகவும் இயக்கிவரும் நிர்வாகத்தினருக்கு எமது இணையம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. அதற்கு மேலாக ஆலோசனை  சபை அமைக்கப்பட்டு  அவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியுடனேயே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடும்பம் வேலை நெருக்கடி என இருக்கும் எம்மவரிடையே எல்லோருடனும் தொடர்பு கொண்டு அனைவரையும்  ஒருங்கிணைத்து ஒரு நிகழ்வினை வெளிநாட்டில் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பது என்பது ஒரு சாதாரண விடயமன்று. அந்தவகையில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் தலைவர் திரு.ப.ஜெகன் அவர்களையும் நிர்வாகத்தினர்களையும் ஆலோசனை சபையினரையும் நீர்வேலி மக்கள் சார்பாக பாராட்டபட வேண்டியவர்கள். வாழ்த்துக்கள் திரு ப.ஜெகன் அவர்களே. தொடரட்டும் உங்கள் அனைவரினதும் உன்னதபணிகள்.

[:]

0 Comments