10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]மிகச்சிறப்பாக நடைபெற்ற நீர்வைக்கந்தன் மஹோற்சவம்[:]

[:ta]

2019 ம் ஆண்டில் புதிய நிர்வாகசபை நீர்வேலி கந்தசுவாமி கோவிலினை பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக ஆலயச் செயற்பாடுகளை சிறப்புடனும் அனைவரையும் ஒன்றினைத்து திறம்பட செய்துவரும் நீர்வேலி கந்தசுவாமி  ஆலய நிர்வாகசபையினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. அண்மையில் நடைபெற்று முடிந்த வருடாந்த திருவிழாவினை  மகிழ்ச்சிகரமாகவும் எந்தவிதமான முரண்பாடுகளும் இன்றி ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் சிறப்பாக நடைபெற அருந்தொண்டாற்றிய ஆலைய பரிபாலனசபையின் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். பாலர்பகல்விடுதி கடந்த ஆறு ஆண்டுகாலமாக சிறப்பாக இயங்குவதற்கு மிகப்பெரிய காரணமாக விளங்குவது கணக்கு வழக்கு ஆகும்.  பாலர்பகல்விடுதியினுடைய வரவு செலவுகள் சரியாக கையாளப்பட்டு மிகச்சரியாக பதிவுகளை திறம்படச் செய்யும் பொருளாளர் திரு.பொ.பவானந்தன் ஆசிரியர் அவர்கள்   நீர்வைக்கந்தன் ஆலயத்திலும் பொருளாளராக புதிய நிர்வாகத்தில் தெரிவு செய்யப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கின்றார்.அவருடைய  உயரியசேவைக்கு   நன்றிகள் . அத்துடன் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தினை திறம்பட இயக்கிவரும் அதனுடைய தலைவர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆலயத்தில் உபதலைவராக காணப்படுகின்றார். இவர் இளைஞர்களை அரவணைத்து வழிகாட்டி சனசமூக நிலையத்தோடு மட்டுமன்றி ஆலயச் சூழலிலும் இளைஞர்களை இணைத்து பல செயற்பாடுகளை செய்திருந்தார். அவரின் சேவைகளுக்கும் எமது பாராட்டுக்கள். அத்துடன் நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கும் எமது ஊரின் அருள்மிகு கடவுள் நீர்வைக்கந்தனின் புகழ்பரப்புவதற்கு புகைப்படம் எடுத்த திரு.இ.தயாபரன் மற்றும் திரு.தனுசன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. ஆலயச் சூழலில் அழகாக மின்விளக்குகளால் அலங்கரிதத்த இளைஞர்கள் ஆலயச் சூழலினை சுத்தம் செய்த இளைஞர்கள்   மற்றும் தினசரி அன்னதான நிகழ்வுகளை திறம்பட செய்து முடித்த தொண்டர்சபை இளைஞர்களுக்கும் அனைவரது சார்பாகவும் பாராட்டுக்கள்(இளைஞர்கள் அதிக எண்ணிக்கையானவர்கள் என்பதனால் பெயர் குறிப்பிடவில்லை மன்னிக்கவும்) . ஆலயச்சமூகத்தினர் அனைவரும் எமது இணையத்தின் செயற்பாடுகளுக்கு தமது இதயபூர்வவமான ஆதரவினை தந்துதவினர். அனைவருக்கும் எமது இணையம் உளங்கனிந்த  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.[:]

0 Comments

Leave A Reply