மிகத்தரமான முன்பள்ளியாக வளர்ந்து வரும் ”பாலர்பகல் விடுதி”
நீர்வேலியில் அமைந்துள்ள பாலர்பகல் விடுதி தற்போது மிகத்தரமான வளர்ச்சிகண்டு வருகிறது.ஒரே வகையான ஆடைகளும்(uniform) இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.கணனியகம் ஒன்று தற்போது திறக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் கணனிக்கல்வியினையும் இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டுத்திடல்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபடுகின்றனர்.வருடாந்த விளையாட்டு விழாவும் மிகச்சிறப்பாக அண்மையில் நடைபெற்றதுவருகின்ற மாதம் நான்காம் திகதி கலைவிழாவும் நடாத்தப்படவுள்ளது.மாணவர்களுக்கு கவின்நிலையினை உணரும் வகையில் மரங்களாலும் வர்ணக்கன்றுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.தற்போது மாணவர் தொகையானது கணிசமான அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இதனால் நீர்வேலியைச் சேர்ந்த பெற்றோர்கள் மடடுமல்ல அயல் ஊரவர்களும் பாலர்பகல் விடுதியில் தங்கள் பிள்ளைகளை இணைக்க முன்வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் பாலர் பகல்விடுதிக்கென தனியான இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதற்கு தரவேற்றவேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.விரைவில் வெளியிடப்படவுள்ளது.புதிய நிர்வாகம் பொறுப்பேற்று கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.விரைவில் பாலர்பகல் விடுதி யாழ்ப்பாணத்தில் முக்கியமான எல்லோராலும் விரும்பக்கூடியதான ஒரு நிலையமாக இருக்கும் என்பது திண்ணம்
Beautiful photos, thanks for opting them.
It is a hard work but is very beautiful