10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]முக்கியத்துவம் இழந்து செல்லும் நீர்வேலியின் பெருங்கோவில்கள்[:]

[:ta]

இன்று வியாபார வளர்ச்சியின் காரணமாக வாடிக்கையாளர்களை  வீடு தேடிச் சென்று அவர்களை கவர்ந்து வியாபாரத்தினை முன்னெடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. பிரபல்யமான வங்கிகளே சாதாரண மக்கள் வாசலில் நிற்கின்றனர். ஏனென்றால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினை தக்க வைப்பதற்காக. அதுபோல எல்லா வணிக நிறுவனங்கள் தனியார் கல்விக் கூடங்கள் போன்றன பெரும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் கோவில்களுக்கு வரும் பக்தர்களை அவ்வாறு கவர முடியாது. நீர்வேலியில் உள்ள பெருங்கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையினை அவதானித்தால் நீர்வேலியில் உள்ள பெருங்கோவில்கள் முக்கியத்துவம் இழந்து செல்கின்றன போல உள்ளது. வியாபார நிறுவனங்களில் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினை வைத்தே அந்தந்த நிறுவனங்களின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம்.

நீர்வேலியில் 30 வருடங்களுக்கு முன்னர் நீர்வைக்கந்தன் அரசகேசரிப்பிள்ளையார்   வாய்காற்தரவைப்பிள்ளையார் கதிர்காம கோவில் ஆகிய பெருங்கோவில்களும் ஆங்காங்கே அடுத்த நிலையில் சிறிய கோவில்கள் சிலவும் காணப்பட்டன.  ஆனால் தற்போது நீர்வேலியில் பெருந்தொகையான கோவில்கள் புனரமைக்கப்பட்டும் சில புதிய கோவில்களும் என நிறைய கோவில்கள் முளைத்து விட்டது மட்டுமல்ல அக்கோவில்கள் பெரிதாக அமைத்து தேர் இழுக்கின்ற நிலை கூட பல கோவில்களில் காணப்படுகின்றது. ஆனால் நீர்வேலியின் மொத்த சனத்தொகையானது எல்லாக் கோவில்களுக்கும் பிரிக்கப்படும் போது பெருங்கோவில்கள் இழுத்து மூட வேண்டிய நிலை வரும்.   இதைப்பற்றி யாராவது யோசிக்கின்றார்களா  அல்லது எங்காவது எழுதுகின்றார்களா என்றால் ஒன்றையும் காணவில்லை. தெரிந்தோ தெரியாமலோ    இச் செயலை செய்தாலும் நீர்வேலியின் அடையாளமாக இருக்கின்ற பெருங்கோவில்கள் பக்தர்களை இழந்து திருவிழாக்காலங்களில் கூட கோவில்கள் வெறிச்சோடிய நிலமை காணப்படும். தற்போதய திருவிழாக்களில் கூட  நீர்வேலியின் பெரிய கோவில்களில் மேற்படி பாதக நிலைகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

பெருங்கோவில்களில் இருக்கின்ற நிர்வாகத்தினருக்கு பக்தர்களை கோவிலுக்கு வரவைப்பது   பெரிய சாவாலான விடயமாக  காணப்படுகின்றது. இலகுவாக அனைவரும் நிர்வாகம் சரியில்லை தலைவர் சரியில்லை பொருளாளர் சரியில்லை செயலாளர் சரியில்லை நிர்வாகத்தை மாற்றவேணும் என தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்கள். ஆனால் எந்த திறமையான நிர்வாகம் இருந்தாலும் சிறிய கோவில்கள் பெரிய கோவில்களாக வளரும் போது அதிகளவான பக்தர்களை உள்வாங்குவது கடினமான விடயமாகும். இருப்பினும் ஒரு கோவிலுக்கு அதிகளவான பக்தர்கள் வருவது நிர்வாகத்தின் செயற்பாட்டிலும் தங்கியுள்ளது. நீர்வேலியில் உள்ள பெருங்கோவில்களுக்கு அதிகளவான பக்தர்களை வரவைப்பதே இக் கட்டுரையின் நோக்காகும். இதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். நல்லூர் கந்தனில் நடைபெறும் திருவிழாவிற்கு அல்லது சன்னதி கோவில் திருவிழாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை எமது ஊரில் உள்ள நீர்வைக்கந்தனுக்கும் அரசகேசரியானுக்கும் வாய்க்காற்தரவைப்பிள்ளையாருக்கும் ஊர் மக்களாகிய நாம் கொடுக்க வேண்டும்.

நன்றி

நீர்வைக்கந்தன் அடியவன்.

……………………………………………………………………………………………………………….

மேற்பபடி கட்டுரையினை படித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீர்வைக்கந்தனில் எதிர்வரும் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு புதிய நிர்வாக சபையினை தெரிவதற்கான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இதில் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்தில் பங்கேற்று  எமது ஊரின் அடையாளமாக நுழைவாயிலாக உள்ள நீர்வைக்கந்தனின் புகழினை பறைசாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

 

[:]

0 Comments

Leave A Reply