10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார். சர்வர் “சாப்பாடு 50 ரூபாய்” என்றார். முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.”கொஞ்சம் குறைந்த  சாப்பாடு இல்லையா?” என கேட்டார்.  எரிச்சலடைந்த சர்வர்,”பெருசு….தயிர் இல்லாம சாப்பிடுறியா..? 45 ரூபாய்தான்” என்றார். பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார். சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில் வைத்த போது சர்வர்  ஏளனமாக பார்த்தார்.  மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது,  முதியவர் சொன்னார்” “வச்சுக்கோ…உனக்கு தர என்னிடம்  வேறு பணமில்லை…!”

0 Comments

Leave A Reply