10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

முருகப்பெருமானின் திருப்பெருவடிவம் (விஸ்வரூப தர்ஸனம்)

14639822_1391985110819235_1232430745833025120_nமுருகன் சூரபத்மனுக்கு தானே பரம்பொருள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக போரின் இறுதிக்கட்டத்தில் திருப்பெருவடிவத்தை காட்டினான்.

அண்ட கோளமெல்லாம் தானேயாகி, தன்னுள் யாவும் நிலை பெற்று விளங்கும் தன்னிகரற்ற ஒப்பற்ற தரிசனமான இதனை சூரன் தான் செய்த தவப்பயனால் கண்டனுபவித்தான்.

கந்தபுராணத்தில் பெரிதும் பேசப்படுகிற உன்னதக்காட்சியாக இது விளங்குகிறது.

இந்த நிகழ்வை ஸ்கந்தசஷ்டிப்பெருவிழாவின் ஐந்தாம் திருநாளன்று மதியம் நீர்வேலி கந்தசுவாமி கோயிலிலும் செல்லக்கதிர்காம சுவாமி கோயிலிலும் உத்ஸவமாகச் செய்து வருகிறார்கள்.

உயரமான பீடத்தில் அல்லது திருக்கைலையில் ஷண்முகப்பெருமானை எழுந்தருளச்செய்து விசேட ஆராதனைகளை செய்வர்.

ஷண்முகார்ச்சனை, தீபாராதனை என்பவற்றுடன் விஸ்வரூபநியாசம் நடைபெறும்.

நிறைவாக, கந்தபுராணத்திலுள்ள திருப்பெருவடிவக்காட்சிப் பாடல்கள் படனம் செய்யப்படும்.

அதியுன்னதமான இந்த உத்ஸவத்தை கண்டு மனதில் திருப்பெருவடிவத்தை நினைந்து பக்தர்கள் வழிபட்டு மகிழ்வார்கள்.

இந்த உத்ஸவம் ஸ்ரீ.சுவாமிநாத. இராஜேந்திரக்குருக்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த மஹா விஸ்வரூபதர்ஸனம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் இடம்பெறும்.

இதனை அடுத்து முருகன் சக்திவேல் பெறும் திருக்காட்சியும் நிகழும்.
“வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா”

0 Comments

Leave A Reply