10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முருகப்பெருமானின் தேர்வலத்தினை போற்றுவோம் -அந்தணச் சிவாச்சாரியர்கள்

நீர்வேலி கந்தசுவாமி கோவில் இரதோற்சவம்

nnnமுருகப்பெரமான் அடியார்களே

நீர்வேலிதனில் எழுந்தருளி பல நூற்றாண்டு காலமாக அடியவர்களுக்கு திருவருளைப் பொழிந்து வரும்  கந்தசாமியாருடைய இரதோற்சவப் பெருவிழாவினிலே பக்த பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு எம்பெருமானின்  திருவருளை  பெற்று சீரும் சிறப்புமாக அனைத்துப் பெறுபேறுகளும்  யாவரும் பெற்றிடவும் கல்வியிலும் உத்தியோகத்திலும் விவசாயத்திலும்  உயர்வுபெற்றடவும்  நாட்டில் சாந்தி சமாதானம் பொருளாதார வளர்ச்சி பெற்று மேலோங்கிடவும் எல்லோருக்கும் நல்லருள் கிட்டவும் நீர்வைக்கந்தனின் பாதாரவிந்தங்களை தழுவி பணிந்து பிரார்த்திப்பதோடு தொடர்ந்து வரும் திருவிழாக்களிலும் கலந்துகொண்டு திருவருளைப்பெறும் வவண்ணம் இறைஞ்சுகிறேன்.

”மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

ஆலய பிரதமகுரு

சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்கள்

…………………………………………………………………………………………………………………………………….

கருணை பொழியும் கடம்பக்கந்தன்
யாழ்-பருத்தித்துறை நெடுஞ்சாலையோரமாய் நீர்வை நகரின்தென்திசையில் கடம்பமரத்தின் பின்னணியில் அழகொழிரும் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு திகழ்கிறது நீர்வைக் கந்தன் திருக்கோவில்.கல்யாண வேலவர் என்று ஆலய பிரபந்தம் பேசும் வகையில் வள்ளி, தேவசேனா தேவியர்கள் இருமருங்கும் திகழ அழகன் முருகன் அருளாட்சி கொடுக்கும் அற்புதத்திருப்பதி இது.நீர்வை நகரின்தென்திசையில் கடம்பமரத்தின் பின்னணியில் அழகொழிரும் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு திகழ்கிறது நீர்வைக் கந்தன் திருக்கோவில்.இங்குள்ள ஆறுமாமுகக்கடவுள் திருவடிவம் தனித்துவமானது. அடியவர்களை பார்த்தருளும் பாவனையில் ஊர்த்வமுகம் சற்றே சரிந்திருக்கும் எழில் நயக்கத்தக்கது. கோவிலில் உள்ள குதிரையில் வீரத்துடன் விளங்கும் வீரவாகுதேவர், பழநிமலை போன்ற அமைப்பில் உள்ள சந்நதியில் எழுந்தருளியுள்ள தண்டபாணிக்கடவுள், போன்ற திருவடிவங்களும் தனித்துவமானவை.

இவ்வாலயத்தில் தென்திசை நோக்கி ஆடல் பயிலும் தில்லைக்கூத்தப்பெருமானின் எழிலும் அப்பெருமானுக்கு ஆனியிலும், மார்கழியிலும் நடக்கிற திருமஞ்ச உற்சவங்களும் தரிசிக்க வேண்டியன.

இதே போலவே, சித்திரையில் பத்தொன்பது நாட்கள் மஹோத்ஸவம் காண்கிற இத்திருக்கோவிலில் நடக்கிற திருமஞ்சஉற்சவம், வசந்தோற்சவம், கைலாசவாகன உற்சவம், காவடித்திருவிழா, மாம்பழத்திருவிழா, வயலூடே இலுப்பையடி விநாயகர் கோவில் வரை நடக்கிற வேட்டைத்திருவிழா, ஊடல் உற்சவம், சகோபுரத்திருவிழா, அன்று இரவு ஆறுமுகக்கடவுள் திருநடனம் செய்து வந்தமண்டபம் எழுந்தருளல், மறுநாள் முப்பெருந்தேர் பவனி, தீர்த்த வைபவம், திருக்கல்யாணம் என்பனவும் தனித்துவம் பொருந்தியன.

ஐப்பசி மாதம் ஸ்கந்தஷஷ்டி விழாவுக்கு கூட கொடியேறி யாகபூஜையுடன் ஏழுநாட்கள் மஹோற்சவம் நடப்பது இக்கோவிலில் தனிச்சிறப்பு. அந்த உற்சவ காலத்தில் ஐந்தாம் நாள் நடக்கிற திருப்பெருவடிவக்காட்சியும், மறுநாள் நடக்கிற வேல்வழங்கல், சூரசம்ஹாரமும் பக்தி வெள்ளத்தில் திழைக்கச் செய்வன.

இக்கோவிலின் வளர்ச்சிக்கு, இக்கோவிலில் சிவாச்சார்யராக விளங்கிய ஸ்வாமிநாத இராஜேந்திரக்குருக்களின் பங்கும் பணியும் குறிப்பிடத்தக்கன. வாகீசகலாநிதி. கி.வா ஜகந்நாதன் அவர்களும், அவர்களைப் போன்ற பலரும் குருக்களுடன் ஏற்பட்ட தொடர்பாலே நீர்வைக்கந்தன் பேரில் காதலுடையவர்களாகி, இக்கோவிலில் வழிபாடாற்றி மகிழ்ந்தனர்.

கோவிலைச் சுற்றிலும் அறப்பணி நிலையங்கள் அமைந்திருப்பதும், புனிதவிருக்ஷங்கள் சூழ்ந்திருப்பதும், ஆலயம் அறங்காவலர்களாலும், சிவாச்சார்யர்களாலும் மிகுந்த பக்தியுடனும் பேணப்படுவதும், காலத்திற்கு காலம் திருப்பணிகள் செய்து பொலிவுற்று திகழ்வதும் போற்றுதற்குரியது.

இக்கோவிலில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் காலத்தில் தொடங்கி இன்று வரை ‘கந்தபுராணபடனம்’ வருடாந்தம் தை தொட்டு பங்குனி வரை சிறப்புற நடக்கிறது.

இப்போது சித்திரைப்பெருவிழாக் காணும் இத்திருத்தல நாயகரை சேவிப்போம். அந்த வள்ளிக்கு வாய்த்த வள்ளல் பெருமானின் கடைக்கண் பார்வை நம்மைக் காத்து ரக்ஷிக்கட்டும்.

myur

 

 

 

 

நீர்வை தி.மயூரகிரி சர்மா

………………………………………………………………………………………………………………

கலியுக காலத்தில் கந்தப்பெருமானை வணங்கினால் துன்பங்கள் நீங்கும்.இறைவன் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அவதாரம் எடுத்து அருள்புரிகின்றன.

0 Comments