10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி முருகேசு சிவகுமாரன் ஆசிரியருக்கு ஊரவர்களால் மேற்கொள்ளப்படும் ”மணிவிழா” கௌரவிப்பு நிகழ்வு

12-X-18---01-copyபல  மாணவர்களை  உருவாக்கிய ஆசான் முருகேசு சிவகுமாரன் ஆசிரியருக்கு  ஊரில் உள்ள அன்பர்களினாலும்  பழைய  மாணவர்களினாலும்  மேற்கொள்ளப்படும்  மணிவிழா கௌரவிப்பு   நிகழ்வானது  எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை  20.07.2014  அன்று  பி.ப 2.30 மணிக்கு  கரந்தன்  இராமுப்பிள்ளை  வித்தியாலய  முன்றலில் பாடசாலை அதிபர் திரு.கு.வாகீசன்  தலைமையில்  நடைபெறவுள்ளது. ஆசியுரைகளை  தியாகராஜக்குருக்கள் சோமதேவக்  குருக்கள்  ஆகியோர்  மேற்கொள்ள வாழ்த்துரைகளை  திரு.இராஜேந்திரன் (மாகாணக்கல்விப்பணிப்பாளர்)  அவர்களும்  பொ.அருணகிரிநாதன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர்)  அவர்களும்  நீர்வேலியின்  பேராசான்  த.ந.பஞ்சாட்சரம் ஆசிரியரும் திரு.துரை எங்கரசு  அவர்களும் திரு.குகதாசன் அவர்களும் செ.விநாயகமூர்த்தி அவர்களும்  திரு. இராமரூபன்  அவர்களும்  திரு.லலீசன்  அவர்களும்  திரு.காந்தரூபன் அவர்களும்  மகிந்தினி  மற்றும் புஸ்பா அவர்களும் மேற்கொள்ளவுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து  கலை நிகழ்வுகளும்  நடைபெறவுள்ளது.

0 Comments

Leave A Reply