10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ராகு, கேது பெயர்ச்சி 08.01.2016 முதல் 25.07.2017 வரை

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.

1.மேஷம்:

எற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது உங்களுடைய தூக்கத்தை கெடுத்து உங்களை விட்டார். ஓரு சிலர் தந்தைக்கு கர்ம காரியங்களையும். சிலர் பெற்றோர்களுக்கு நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார்கள்.

போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும்.

கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்.

இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.

கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும்.

அஷ்டமத்து சனியில் திருமணம் ஆகி கருத்து வேற்றுமையால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

அஷ்டமத்து சனி நடப்பது மட்டும் சிலருக்கு கஷ்டங்களை கொடுக்கலாம் என்றாலும் ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தொழில் நிலை யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும்.

அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

2.ரிஷபம்:

ரிஷபம் ராசி நண்பர்களே. இது வரை உங்க ராசிக்கு 5ம் இடத்திலும்,11ம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது 4ம் இடத்திற்க்கும்,10,இடத்திற்க்கும் மாறுகிறார்கள்.ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான். ஆனால் யோகத்தை கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.

காரியத்தடைகள்.தேவையில்லாத செலவுகள்,மனதெளிவு இல்லாத செயல்கள் வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை இப்படி திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார்.

9க்கும் 10க்குடைய சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்க்கு உதவுவார்கள்.

தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும்.

கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும்.சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும்.புதிய கடன் வாங்கி சுபகாரியம்.,

திருமணம்.,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும்.3ம் பார்வையாக 6மிடத்தை பார்ப்பதால் நோய் நொடி தொல்லைகள் நீங்கும்.கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும்.ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார்.

லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார்.தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

8ம் இடத்தை கேது பார்ப்பதால் போட்டி பொறாமை எதிரிகள் சூழ்ச்சிகள் மறையும்.தொழில் நிலை முன்னேற்றத்தை தரும்.யோகம் வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு விரும்பிய வண்ணம் கிடைக்கும். தீயதை விட்டு விலகி நில்லுங்கள். நல்லதை நாடி செல்லுங்கள்.நல்லதே நடக்கும்.

3.மிதுனம்

உங்களுக்கு 8.1.2016 முதல் 25.7.2017 வரையுள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய ராகுபகவான் இப்போது ராசிக்கு தைரிய ஸ்தானமான 3ல் வந்தமர்வதால் இனி கம்பீரமாகப் பேசி தடைபட்ட காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்.

மனோபலம் கூடும். ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின் சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 8.1.2016 முதல் 10.3.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். ராகுபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதி யும், விரயாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.3.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணவரவு உண்டு.

குழந்தை பாக்யம் உண்டாகும். ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். சிலரின் துரோகங்களை நினைத்து வருந்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! உற்சாகமடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணை அமையும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி திருமணம் முடியும். பெற்றோர்கள் உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பும் வரும்.

மாணவ, மாணவிகளே! கடினமான பாடங்களில்கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்ல மாணவர்களின் நட்பு கிடைக்கும். அன்னிய மொழியும் கற்றுக் கொள்வீர்கள். வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி பெறவும் வாய்ப்பு வரும். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று பரிசு, பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளே! தேர்தலில் வெற்றி உண்டு. எதிர்க்கட்சிக்காரர்களை நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் தாக்கிப் பேசி பொது மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு பட்டி தொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். சிலர் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள்.

வியாபாரத்தில் நீங்கள் போடும் கணக்கு தப்பாது. பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் வரும். பழைய பாக்கிகளும் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். உங்களுடன் பங்குதாரர்களாக பலரும் முயற்சி செய்வார்கள்.

உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அலுவலகத்தில் புதிய முடிவுகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்களுடைய பங்கு அதிகமாக இருக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து வேலைச்சுமையையும், மரியாதைக் குறைவான சம்பவங்களால் தலைக்குனிவையும், உத்யோகத்தில் நிம்மதி யற்றப் போக்கையும் தந்து கொண்டிருந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் தொலைநோக்கு சிந்தனை அதிகமாகும்.

வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள்.

பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். உங்களிடம் இருக்கும் சின்னச் சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சப்தம- ஜீவனாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 8.1.2016 முதல் 12.7.2016 வரை கேதுபகவான் செல்வதால் மனைவி உங்களுடைய குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் உண்டு. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.7.2016 முதல் 20.3.2017 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.3.2017 முதல் 25.7.2017 வரை கேதுபகவான் செல்வதால் மதிப்பு, மரியாதை கூடும் என்றாலும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டேயிருக்கும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சின்னச் சின்ன நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இந்த ராகு – கேது மாற்றம் தடுமாறிக் கொண்டிருந்த உங்களை கரைத்தேற்றுவதுடன் புதிய பாதையில் சென்று பயணிக்க வைப்பதாகவும் அமையும்.

4.கடகம்:

கடகம் ராசி நண்பர்களே. ராகு கேது பெயர்ச்சியாகி 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள்.எற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும்.

இதில் ராகு வருவதால் சொன்ன நேரத்தில் சொன்னபடி வரவு செலவுகளை பங்சுவாலிட்டியாக கடை பிடித்த உங்களுக்கு ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வரலாம்.ஆனால் கஷ்டங்களை தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும்.

பூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது.அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்பு கை கூடிவரும்.வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம்.

அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் கலகத்துடன் ஆரம்பித்து இறுதியில் சுபமாக முடியும்.

ராகு கேதுவுக்கு சொந்த வீடு இல்லை என்பதாலும் பூர்வ பூண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பார்ப்பதாலும் போன ஜென்மத்தில் செய்த பாவ பூண்ணிய கணக்குப்படி ராகுவும் கேதுவும் நல்லதை மட்டுமே செய்வார்கள் நம்பிக்கையுடன் இருங்கள். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும்.

இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் வருமானம் சிறப்பாக இருக்கும்.

5.சிம்மம்:

சிம்மம் ராசி நண்பர்களே. இது வரை ராகு கேது இருந்த இடம் 2ல் ராகு. 8ல் கேது.. அது சுமாரான இடம் தான். “ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே” என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார்.

18 வருஷம் முடிவே இல்லாத பிரச்சனைகளை ஓன்றறை மணிநேரத்தில் தவிடு பொடியாக்கி செல்வாக்கை தக்க வைத்தார். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு 6க்குடைய சனியின் பார்வையையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது.

ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார். அனைவரும் வணங்க தக்க வாழ்க்கையை கொடுத்தாலும் சிலரை கண்டாலே வெறுப்பாக இருக்கும்.

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும்.

சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.

உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.சனி 4லும்,கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம்.

ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் சில கஷ்ட நஷ்டங்களை கொடுத்தனர். அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும்.

6.6.கன்னி:

கன்னி ராசி நண்பர்களே. இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள்.இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள்.

கடந்த காலங்களில் ஏழரை சனி பாத சனியாக இருந்தது. ராகுவும் சனியும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் ராகு செய்ய வேண்டிய நல்ல பலனை சனி கெடுத்தார். சனி செய்ய வேண்டிய நல்ல பலனை ராகு கெடுத்தார்.

அதனால் பெரிதளவில் நல்ல பலனை அனுபவிக்க முடிய வில்லை. “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்” என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்க்கு ராகு கேது வருவது நல்லது தான்.

சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும். அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.

வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். இது வரை பத்தாம் வீட்டுக்கு 7ல் இருந்த கேது 6ம் வீட்டிற்க்கு வருவதால் பத்தாம் வீட்டுக்கு திரிகோணத்தில் வருவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.

நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும்.9ம் இடத்தை 5க்குடைய குரு பார்ப்பதால் தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும் வள்ளுவர் வாக்குபடி நினைத்தது நீராகி போன காலம் மாறி முயற்சி செய்யும் காரியங்களை செம்மையாக முடிப்பீர்கள்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும்.மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிட்டும்.

கிரகங்கள் மாறும் பொழுது தான் தெய்வ அனுகூலம் கிட்டும்.எந்த ஒரு காரியத்திற்க்கும் தெய்வ அனுகூலம் முக்கியம். ஆள்பலம்,படைபலம்,பணபலம் இவற்றால் எதுவும் நடக்காது.தெய்வத்தோட அனுகிரகம் தான் முக்கியம்

7.துலாம்:

துலாம் ராசி நண்பர்களே…. கடந்த காலங்களில் ராகு 12லும் கே 6லும் சஞ்சரித்தது யோகத்தை செய்யகூடிய இடங்கள் தான். கடந்த காலங்களில் ஜென்ம சனி நடந்ததால் ராகு கேது செய்ய வேண்டிய யோகபலனை சனி கெடுத்து விட்டார்.

எந்த கிரகமும் நல்ல இடத்தில் செய்ய வேண்டிய யோகத்தை செய்யாமல் இருந்திருந்தால் அடுத்து இடத்திற்க்கு வரும் பொழது முந்தைய வீட்டின் யோகத்தை வாரி வழங்குவார்கள்.

இப்பொழது சாதகமான இடத்திற்க்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான்.புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.

வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும்.பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

காரிய வெற்றியும் வாக்கு நாணயத்தையும் காப்பாற்றி கொள்ளலாம். புதிய முயற்சிகள் கை கூடும்.புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.

வார்த்தைகளால் வஞ்சித்து ஏமாற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி விடுவிர்கள்.ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி வீடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். கூடிவரும் வேலையில் தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும்.இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.11ல் வரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.

எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள்.அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை.விவாகரத்து,செக் மோசடி வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமான தீிர்ப்பை வழங்கும்.

நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். எத்தனை கும்பாபிஷேகம் நடத்தினாலும்,யாகம் ஹோமம் நடத்தினாலும் கர்மவால் வரும் நோயும்,பாவமும் நம்மை விட்டு விலகாது. 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

8.விருச்சிகம்:

விருச்சிகம் ராசி நண்பர்களே…

இது வரை 5ல் கேதுவும் 11ல் ராகுவும் இருந்து இப்பொழுது கேது 4ல் ராகு 10ல் வருகிறது. ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். விரைய சனியில் ராகு கேது மாறியது. அதனால் தொட்டது துலங்க வில்லை.கௌரவ பிரச்சனைகளால் கை நிறைய சம்பாதித்து குடும்பத்தினரை சந்தோசபடுத்தியவர்கள் எல்லாம் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் கணவன் மனைவி உறவு கசந்து சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும்.

கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும்.

10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம்.காலிமனைகள் வாங்கும் வசதி வரும்.சிலருக்கு தாங்கள் இருக்கும் வீடு ராசி இல்லை என்பார்கள்.

மனசுல குறை இல்லாமல் இருந்தால் எல்லா வீடும் ராசியான வீடுதான்.சென்ற காலங்களில் மறைமுக எதிர்ப்பு வேண்டாத விமர்சனங்களுக்கு ஆளாகி கெட்ட பெயர் எடுத்த உங்களுக்கு உங்களின் அருமை என்ன என்பதை புரிய வைப்பீர்கள்.

கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். ஏழரைசனியால் மான அவமானம் தோல்விகள் நிலைகுலைந்து போக செய்யும் கால நிலையில் துடுப்பில்லாத படகு போல தத்தளித்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். வேண்டாதது கோபம்,வேண்டுவது பொறுமை.

10.தனுசு:

தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓன்றறை வருஷமாக ராகு 10லும். கேது 4 லும் இருந்தார்கள்.பொதுவாக ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான்.

கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம், வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஏழரை சனி நடக்கும் பொழது தகப்பன் ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை பெறுவதால் தந்தையாருக்கு உடல் நிலை பாதிக்கலாம்.

ராகுவுடன் குரு சேருவதால் பெரியோர்களின் தலையிட்டு சமாதானம் ஆகலாம். ராகு கேதுவுக்கு குருபார்வை சேர்க்கை பெறுவதால் ஏழரை சனி பாதிப்பை ராகு கேது சரிசெய்வார்கள்.

குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொருப்புகள் தேடி வரும்.நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.

வருமானம் திருப்தி தரும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆடு பகை குட்டி உறவு என்பது போல் சில குடும்பத்தில் பிள்ளைகள் மருமகள் பகையாக இருப்பார்கள்.

பேரன் பேத்தி உறவாக இருப்பார்கள். அந்த நிலைமாறி குடும்பம் ஓற்றுமை ஏற்படும்.மொத்தத்தில் இது வரை நிங்கள் நினைத்த காரியம் கை கூடும்.

ஏழரை சனியால் மனக்கோளாறு,புத்திபேதலிப்பு உடல் நலத்தில் குறைபாடு மனைவி மக்கள் நட்பு உறவு பிரிவுகள், போலீஸ் வம்பு வழக்கு சந்தித்தவர்களுக்கு ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார் என்பது உறுதி.

10.மகரம்:

மகரம் ராசி நண்பர்களே. இது வரை 3 ல் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்க்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்க்கும் வருகிறார்கள்.

ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த ஸ்தானத்திற்கு சுபகிரகம் வந்தால் அவற்றை வளர்ப்பார்.

பாவ கிரகம் வந்தால் அழிப்பார். அதனால் 8 ல் இருக்கும் குருவால் அவதிப்பட்ட உங்களுக்கு ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெருமை புகழையும் தருவார்.

ராசி நாதன் பார்வை பெற்ற ராகு திறமையை வெளிபடுத்தி புது முயற்சிகளை கையாண்டு முன்னேற்றத்திற்கு வழி காண்பிப்பார். ராகு சூது கிரகம் என்பதால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார்.

இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம்.

இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். தொழிலில் நிலையான தன்மை கிடைக்கும். வருமானம் சேமிப்பு உயரும்.

சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராசி நாதன் ராசியை நெருங்குவதால் முதலில் இடம் வாங்கி போட்டு அப்புறம் வீடு கட்டி அதற்கு மேல் இரண்டு வீடு போட்டு வாடகைக்கு அமர்த்தி பின் கார் வாங்கும் யோகம் தான் மகர ராசிக்கு.

இந்த ராசிக்கு 30 வயது வரை எந்த முன்னேற்றமும் வராது. 30க்கு மேல் சுய உழைப்பில் புகழ் கீர்த்தி அந்தஸ்து தானாக தேடி வரும்.

ராசி கட்டத்தில் பத்தாவது ராசி. பாட்டன் முப்பாட்டன் எதையும் தேடி வைக்க மாட்டாங்க. உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.

ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். வருவது தானாக வரும் வருவது மட்டுமே வரும். குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்க மாட்டிங்க. உழைப்பை மட்டுமே நம்புவீர்கள் நல்லது நடக்கும்.

11.கும்பம்:

கும்பம் ராசி நண்பர்களே….

இது வரை 2 ம் இடத்தில் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள்.

ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.

தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும்.

12 வருஷத்துக்கு ஓரு முறை சிம்ம ராசிக்கு குரு வரும் காலம் எதாவது நல்லது நடக்கும். அந்த வகையில் கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும். தேவைகள் பூர்த்தியாகு.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும் அதனால் கடன் பட்டாலும் சுபகடனாக அதாவது வட்டி இல்லாமல் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

உற்றார் உறவினர் நட்பு வட்டத்தால் உதவிகளை எதிர்பார்க்கலாம். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு குருவுடன் சேருவதால் இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம்.

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாதித்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம்.

அஷ்டமத்து சனியில் திருமணம் ஆகி பெற்றோர்களுக்கு வேதனையை கொடுத்த ஆண்கள் பெண்கள் இனி கருத்து வேற்றுமை மாறி ஓன்று சேரலாம். கோர்ட்டு விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம் அஷ்டமத்து சனி முடிந்தும் இது வரை போரட்டாம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

12.மீனம்:

மீனம் ராசி நண்பர்களே இதுவரை ராசியில் கேது 7ம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது.கேந்திரத்தில் கேது ராகு இருந்தது ஓரு வகையில் நன்மை செய்ய கூடியது தான்.

ஆனால் அஷ்டமத்து சனியால் வாசல் வரை வந்த வாய்ப்புகள் கை நழவி போனது.சாதகமும் பாதகமும் இல்லாமல் பெயர்ச்சி ஆகி விட்டது. அஷ்டமத்து சனி முடிந்து மழை விட்டாலும் தூரல் நின்றபாடில்லை என்ற நிலை மாறும்.

கெட்டானை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை சம்பந்தபடுத்தி வாட்டி வதைத்தது.

தீராத குறையாக நம்பகூடாதவர்களை நம்பி விரையம் ஏமாற்றம் சஞ்சலம் வேறு. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும்.

10 ஆம் பாவத்துக்கு 9ல் ராகு வருவதால் தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும்.

பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.

மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும். வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும்.வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

இது வரை இழத்தடித்த கோர்ட்டு வம்பு வழக்குகள் சாதகமாகும். ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். அஷ்டமத்து சனியில் இழந்ததை மிண்டும் மீட்கலாம். பொதுவாக கேது 12 ஆம் பாவத்தில் இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்கள்.
முற்றிலும் எல்லோருக்கும் பொருந்தாது.

ஆசையை ஆடக்கி ஞானம் பெற்றவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். சிலர் ஏகாதசி திதியில் காலமாவார்கள். அவர்களுடைய ஜாதகத்தை பார்த்தால் 12ல் கேது இருக்கும். பொ துவாக ஜாதகம் பார்ப்பதும் சொல்லுவதும் படித்து அறிந்ததை விட அனுபவத்தில் நாம் பார்க்கும் அறியும் விசயங்கள் சொல்லும் பொழுது தான் ஜோதிட ஞானம் சித்திக்கும்.

0 Comments

Leave A Reply