10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

“வரம்தரும் அருளோசை” என்ற பக்தி இசைப் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா

நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் புகழ் பாடும் ‘வரம்தரும் அருளோசை’ என்ற பக்தி இசைப் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா இன்று 21.07.2015 செவ்வாய் இரவு இடம்பெற்றது.
.யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு வண. ஆ.சந்திரசேகரக் குருக்கள் ஆசியுரையையும் வண. சா.கோபாலசர்மா திருமுறை பாராணயத்தையும் மகோற்சவ குரு வண. ஜெகந்நாதக் குருக்கள் வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞர்னசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளுரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன் வாழ்த்துரையையும் பாடலாசிரியர்களில் ஒருவரான சைவப்புலவர் பொன். சுகந்தன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர். 07.
நீர்வேலியின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய நோக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் சிறப்புரை ஆற்றினார். ஆலயக் குரு வண. சோ.பிட்சாடன சர்மா நன்றியுரை வழங்கினார்.

05
.
தமிழகத்தின் பிரபல பாடகர்களான சீர்காழி சிவசிதம்பரம், உன்னிமேனன் உள்ளிட்டோரால் பாடப்பட்ட பாடல்களுக்கு தமிழக இசையமைப்பாளர் மு.பார்;த்தீபன் இசையமைத்துள்ளார். இசை இறுவட்டை க.கணபதிப்பிள்ளை வெளியிட்டு வைக்க பவானி களஞ்சிய உரிமையாளர் பொ.உதயன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
04

வண.கு.தியாகராஜக் குருக்கள், வண. சா.சோமதேவக் குருக்கள், வண. இ.சுவாமிநாதக் குருக்கள் ஆகியோர் கௌரவப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
.
ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் க.ஆனந்தராசா, சாரங்கா நகைமாட உரிமையாளர் ப.சிவபாஸ்கரன், மாருதி ரேடர்ஸ் உரிமையாளர் அ.உமைநேசன், உமாகளஞ்சிய உரிமையாளர் எஸ். இந்திரகுமார், ஓய்வுநிலை கிராமிய வங்கி முகாமையாளர் க.முருகையா கிராம அலுவலர் சு.சண்முகவடிவேல், சிறுப்பிட்டி நா.மயில்வாகனம், அச்செழு சி.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் இறுவட்டின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

03
.
இறுவட்டுப் பிரதி ஒன்றின் விலை 200 ரூபா எனத் தெரிவிக்கப்பட்டது.

02

01

0 Comments

Leave A Reply