10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாழையடி வாழை விழா மாண்புற வாழ்த்துகின்றோம்

photo

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் (நீர்வைக்கிழார்) அவர்கள் வழங்கியவாழ்த்துச் செய்தி

புலத்தில் உள்ளோர் தம் நிலத்தை நினைந்து எடுக்கும் வாழையடி வாழை விழா மாண்புற வாழ்த்துகின்றோம். நீர்வைப் பதியின் பெருமைகளை இளைய சந்ததியினரும் நெஞ்சில் நிறுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள். குறிப்பாக நீர்வை மண்ணிற்குப் பெருமை சேர்த்த பெரியோர்களுக்கு முதன்மை வழங்கும் வகையில் அரங்கு அமைத்துள்ளீர்கள். நீர்வேலி சிவசங்கர பண்டிதர் நீர்வை மண்ணிற்கு அடையாளமாக வாழ்ந்தவர். கிறிஸ்தவ சமயத்திற்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரது சொந்தச் சரக்கு. ஏனையவர்கள் கிறித்தவ சமயத்தை எதிர்த்து வெளியிட்ட கருத்துக்கள் ஏற்கனவே பிறநாட்டவரால் முன்னரே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஆனால் சங்கர பண்டிதர் கிறிஸ்தவ சமயத்தை எதிர்ப்பதற்காக முன்வைத்த காரணங்கள் அவரது சொந்த அறிவுத்திறத்தின் வெளிப்பாடுகள் என சில வருடங்களுக்கு முன்னர் அத்தியார் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தி.மயூரகிரியின் நூல் வெளியீட்டு விழாவின் போது முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய அறிவுப் புலம் சார்ந்த பெரியோர்களை இளைய சமூகத்திற்கு அடையாளப்படுத்துங்கள். அவர்களது மண் பற்றை மேம்படுத்துங்கள். இளஞ் சந்ததியினரை அடிக்கடி நிலத்திற்கு அழைத்து வாருங்கள். இங்குள்ளவர்களுடனான உறவுகளை மேம்படுத்துங்கள். இப்போதுள்ள சந்ததியின் பின்னும் இந்த உறவு தொடர வேண்டும். வாழையடி வாழை சிறப்படைய நல்வாழ்த்துக்கள்.

0 Comments

Leave A Reply