10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வாழையடி வாழை 2013 சிறக்க வாழ்த்துகிறோம் – நீர்வேலியிலிருந்து வாழ்த்துக்கள்

sad 2கனடாவில் வதிந்தாலும் பிறந்த தாய் மண்ணை மறவாது எமதூரின் சிறப்புக்களையும் வழக்கங்களையும் அடுத்த சந்ததியும் அறியும் வகையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் மலர்வெளியீடுகளையும் பல செயற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா தனது ஆறாவது ஒன்றுகூடலையும் வாழையடி வாழை எனும் மலர் வெளியீட்டனையும் 26 ம் திகதி கனடாவில் கனடா நேரம் மாலை 5. மணிக்கு நிகழ்த்துகின்றது. எமதூரவர்கள் உலகில்  எங்கு வாழ்ந்தாலும் .இந்த நிகழ்வினை நினைத்து பெருமைப்படாமல் இருக்கமாட்டர்கள்.நலன்புரிச்சங்கம்- கனடா என்ற பெயரில் ஆரம்பித்து நீண்டகாலமாக இச் சங்கத்தினை தொடர்ந்தும் முனைப்புக்குறையாமல் ஆரோக்கியமாக இயக்கிவருகிறார்கள்.நீர்வேலியைச்சேர்ந்த பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியில் அதிக அக்கறையுள்ளவர்கள் இச்சங்கத்தில் அங்கம்வகிக்கின்றார்கள்.அவர்களில் இளையசமூகத்தினரும் அனுபவமிக்கவர்களும்  உள்ளனர். உங்களின் பணி சாலச்சிறந்தது.உங்களைப்போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்தசந்ததியிற்கும் எங்களின் ஊரின் பண்பாடுகளையும் பழக்கங்கள் வழக்கங்களை கடத்தவேண்டிய அவசியத்தை எமதிணையத்தளம் சார்பாக வலியுறுத்தி உங்களது நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற எமது உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்

நீர்வேலி புதிய இணையத்தளம்

www.newneervely.com

………………………………………………………………………………………………………………………………………………

mani

 மண் மகிழ நிகழும் பெரு விழா

நீர்வை மண்ணின் மகிமையை எடுத்தியம்பும் வகையில் இடம்பெறவுள்ள வாழையடிவாழை சிறக்க ஆசிகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில்மகிழ்வடைகின்றோம்.புலம் பெயர்ந்த நிலையில் தம் சந்ததியினருக்குத் தாய்மண்ணைப் பற்றியஉணர்வு உந்துகையை வழங்குவது தார்மீகக் கடமையாகும். வாழையடி வாழை இதனைச்செவ்வனே நிறைவேற்றும் என நம்பலாம்.

எங்கள் திருநீர்வையின் சமூகப்பணிகளில் எல்லாம் கைகொடுப்பதற்கு அப்பால்கனடாவிலுள்ள நீர்வேலி நலன்புரிச்சங்கம் ஊரின் பெருமையை வெளிப்படுத்தும்,இத்தகு நிகழ்வையும் நடாத்துவது இன்பமளிப்பதாயுள்ளது. இத்தகு நிகழ்ச்சியை முன்னிட்டு, புதிய  நீர்வேலி  இணையத்தளம் ஒரு சிறப்பு மலரை  தம்இணையத்தில் வெளியிடுவது அறிந்தும் மகிழ்கின்றோம். நீர்வேலியையும்புலம்பெயர் மக்களையும் உறவாடச் செய்யும் அவர்கள் தம் பணியையும் வாழ்த்துகின்றோம்..

‘நீர்வை மணி’
சிவஸ்ரீ. கு.தியாகராஜக்குருக்கள்

…………………………………………………………………………………………………………………………………………..

456

 நீர்வேலி மண்ணின் மகிமையை பறைசாற்றும் வாழையடி வாழை 2013

நீர்வேலி நலன்புரிச் சங்கம்- கனடா அமைப்பினால் வெளியிடப்படும் வாழையடி வாழை மலருக்கு வாழ்த்து செய்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம். நீர்வை மண்ணின் மகிமையைப் பறைசாற்றி நிற்கும் வாழையின் பெயரைத் தாங்கி வரும் மலர் வாழை மரம் போல் என்றும் அழியாது நிலைத்து நிற்க வாழ்த்துகின்றொம். நீர்வேலி மண்ணின் கல்விப் பயிர் செழிக்க கனடா அமைப்பின் பணிகளை வற்றாத நீர் ஊற்றாக தொடர உவகையுடன் வாழ்த்துகின்றோம்.

தலைவர்,உறுப்பினர்கள்.
நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK
இலண்டன்.

……………………………………………………………………………………………………………………………………………..

lali

 மண் மாண்புற இடம்பெறும் விழா

நீர்வை மண்ணின் பெருமையை எடுத்தியம்பும் வகையில் இடம்பெறும் வாழையடி வாழை சிறக்க நல்வாழ்த்துக்களை நவில்வதில் மகிழ்வடைகின்றோம். புலம் பெயர்ந்த நிலையில் தம் சந்ததியினருக்குத் தாய்த்திருநாடு பற்றிய உணர்வு உந்துகையை வழங்குவது தார்மீகக் கடமையாகும். வாழையடி வாழை இதனைச் செவ்வனே நிறைவேற்றும் என நம்பலாம். தாயக உறவுகள் பற்றிச் சிந்தித்தல்இ அவர்களுக்கான உதவிகளை வழங்குதல் என்பதற்கு அப்பால் நீர்வை மண் பற்றிய பிரக்ஞையை புலம்பெயர் மண்ணில் வாழும் தாயக இளம் உறவுகளிடையே விதைக்க வேண்டிய கடப்பாடு அனைவரிடமும் உள்ளது. இதற்கு இவ்விழா வகை செய்யும் என நம்புகிறேன்.

புலத்தையும் தாயகத்தையும் இணைக்கும் உறவுப் பாலமாக விளங்கும் புதிய நீர்வேலி இணையத்தளத்தின் ஊடாக நம் உறவு வலுப்பெறட்டும். புதிய நீர்வேலி இணையத்தளத்தை ஆரம்பித்து இயக்கி வரும் அன்பர்களின் முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
                                                                                                     ச.லலீசன் (நீர்வைக்கிழார்)

……………………………………………………………………………………………………………………………………………………….

j

 நீர்வேலி கிராமத்துக்கு ஆற்றி வரும் கல்விப் பணிகள் தொடரட்டும்

நீர்வேலி நலன்புரிச் சங்கம்- கனடா அமைப்பு நீர்வேலி கிராமத்துக்கு ஆற்றி வரும் கல்விப் பணிகள் இக் கிராமத்தின் உயர்வுக்கு வழிகோலி வருகிறது. இச் சங்கத்தினால் 2013 January 26 இல் வெளியிடப்படும் வாழையடி வாழை மலர் சிறக்க எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடினமான பணியை மேற்கொண்டு வரும் தலைவர் திரு ஜீவா கோபாலசிங்கம் மற்றும் உறுப்பினர்களுக்கு எமது பாராட்டும் வாழ்த்தும் உரியன.

இணைப்பாளர்கள்.
நீர்வேலி நலன் புரிச் சங்கம் – சுவிஸ்
சுவிச்சர்லாந்து.

………………………………………………………………………………………………………………………………………………….

nnn

உறவுகள் மேம்பட வாழ்த்துக்கள்

எமது ஊரின் மகிமையையும் சிறப்பையும் கனடாவில் ஓங்கி ஒலிக்கச்செய்யும் அனைவருக்கும் நீர்வைக்கந்தனின் நல்லாசிகள் உரித்தாகுக.

சுவாமிநாதக்குருக்கள்

நீர்வேலி கந்தசாமி தேவஸ்தானம்

நீர்வேலி.

…………………………………………………………………………………………………………………………………………………

gggg

 ஊர் போற்றி வாழ்வோம்

நீா்வேலியின் பெருமைகளையும் சிறப்புக்களையும் வாழையடி வாழை மூலமமும் ஒன்று கூடலின் மூலமும் வெளிப்படுத்தும் நீர்வேலியைச்சேர்ந்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் உங்களின் பணிசிறக்கவும் எல்லோரும் நலமாக வாழவும் அரசகேசரி விநாயகனின் பேரருள் கிடைக்கவேண்டுகிறேன்.

நன்றி

சோமதேவக்குருக்கள்

அரசகேசரி விநாயகர் ஆலயம்

நீர்வேலி.

…………………………………………………………………………………………………………………………………………………

Image-(2)

கல்விப்பணி தொடரட்டும்

நீர்வேலியின் கல்விஅபிவிருத்தியில் மிகுந்த அக்கறை கொண்டு எமதூர் பாடசாலைகளிற்கும் முன்பள்ளிகளிற்கும் நீண்டகாலமாக உதவிகளைசெய்து கொண்டுவரும் நீர்வேலி-நலன்புரிச்சங்கம் கனடா கிளையினர் “வாழையடி வாழை” எனும் ஒன்றுகூடலை 26.01.2013 சனிக்கிழமை இன்று நடாத்துகின்றனர்.இந்நிகழ்வு சிறப்புற அமைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

திரு.த.குணநாதன்

முன்னாள் அதிபர்

அத்தியார் இந்துக்கல்லூரி

நீர்வேலி.

…………………………………………………………………………………………………………………………………………………

paththu

 நிகழ்வு சிறப்பாக அமையட்டும்

நீர்வேலி நலன்புரிச்சங்கம் – கனடா அமைப்பு வருடாந்தம் மேற்கொள்ளும் ஒன்றுகூடல் நிகழ்வு இம்முறையும் நிறப்பாக நடைபெறவும் “வாழையடிவாழை” மலர் நீர்வை சீர்மைகளையும் எமது கலை கலாச்சார அம்சங்களை தாங்கி சிறப்பாக வெளிவரவும் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி சார்பாக வாழ்த்துகிறேன்

செ.பத்மநாதன்

அதிபர்

அத்தியார் இந்துக் கல்லூரி

நீர்வேலி.

………………………………………………………………………………………………………………………………………………

vakeeஉங்களின் இந்த இனியபணி தொடர எமது வாழ்த்துக்கள்

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பு வருடாவருடம் வெளியிடும் “வாழையடிவாழை” எனும் மலர் இன்று வெளியிடப் படுகின்றது. நீர்வேலி நலன்புரிச்சங்க கனடா அமைப்புää கனடாவில் வாழும நீர்வேலி கிராம மக்களுடன் எனைய இலங்கைவாழ் மக்களையும் ஒருங்கிணைத்து வருடாவருடம் குளிர் காலத்தில் நிகழ்த்தும் ஒன்றுகூடலில் பல்வேறு மரபுக்கலை நிகழ்வுகளையும் நடாத்தி எமது மண்ணின் பெருமையினை புலம்பெயர் மக்களுக்கு எடுத்தியம்புகின்றது.

கனடாவில் வாழும் எமது உறவுகளையும் நீர்வேலி மண்ணையும் இணைக்கும் ஓர் பாலமாக இம்மலர் திகழ்கின்றது. “வாழையடிவாழை” என்னும் இம்மலர் அதன் பெயருக்கேற்றாற் போல் இடைவிடாது தொடர்த்தும் வருடாவருடம் வெளிவர எனது வாழ்த்துக்களை எமது பாடசாலைச் சமூகம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

உங்களின் இந்த இனியபணி தொடர எமது வாழ்த்துக்கள்.

கு.வாகீசன்
அதிபர்
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
நீர்வேலி.

……………………………………………………………………………………………………………….

kkk

 அறிவாற்றல் நிரம்பிய சமூகம் உருவாகிட ஊக்கமளிப்பவர்கள்

எமது பிரதேசமக்களின் கல்வி ஏற்றம் பெறவேண்டும் அவர்கள் ஆளுமைமிக்கவர்களாக திகழவேண்டும் என்ற உயர் நோக்கத்திற்காக நீர்வேலி நலன்புரிச்சங்கம்-(கனடா) அரும்பணியாற்றிவருகிறார்கள்.அவர்களின் பணி மேன்மேலும் வளர சிறக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

 சி.தர்மரட்ணம்

நீர்வேலி வடக்கு றோ.க.த.க

நீர்வேலி

……………………………………………………………………………………………………………………………………..

Image-(9)

 கனடா நாட்டில் வதியும் நீர்வேலி மக்களினால் கனடா நலன்புரிச்சங்கம் என்ற அமைப்பினை ஏற்படுத்தி நீர்வேலி கிராமத்திற்கு கல்விசார்ந்த உதவிகளை செய்துவருகிறார்கள்.இவர்கள் ஆறாவது முறையாக “வாழையடி வாழை”என்ற நிகழ்வை நடாத்திவருகிறார்கள்.இவர்களது விழா சிறப்புற எனது கிராமஅலுவலர் பிரிவு(நீர்வேலி தெற்கு) சார்பாக வாழ்த்துகிறேன்

சு.சண்முகவடிவேல்
கிராமஅலுவலர்
நீர்வேலி தெற்கு

………………………………………………………………………………………………………………………………………..

sad 1

நன்றி

0 Comments

Leave A Reply