10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாழ்க அதிபர் திரு ரவிச்சந்திரன் சேர் அவர்களே

2014 ஆம் ஆண்டு முதல் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் அதிபராக கடமையேற்று 27.04.2021 அன்றுடன் அச்சுவேலி மத்திய கல்லூரியில் அதிபராக தனது சொந்த விருப்பின் அடிப்படையில் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்கள் மாற்றம் பெற்றுச் செல்கின்றார். தனது கடந்த ஏழு வருட சேவையில் பல அரிய சாதனைகளை பாடசாலையில் நிகழ்த்திய பெருமை மேற்படி அதிபரினை சாரும். கடந்த வருடம் க.பொ.த சாதரண தரத்தில் கூட 79 சதவீதமான சித்திகளை அத்தியாரில் காட்டி கோப்பாய் கோட்டத்தில் க.பொ.த சாதரண தரத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியை முதலாவது இடத்திற்கு கொண்டுவந்தவர். இது போல இன்னும் பல கல்விச்சாதனைகளை பாடசாலையில் நிகழ்த்தியுள்ளார். வாந்தாரை வரவேற்று வாழ்த்தி அனுப்புவதே நீர்வேலியின் பண்பாடு ஆகும். எமது நீர்வேலி இணையம் தங்களது அளப்பரிய சேவைக்கு என்றும் நன்றி கூறுகின்றது. அதிபர் அவர்களே – பாடசாலைக்கு வெளியே சிலர் தங்கள் மீது சேறு தடவினாலும் ஒட்டுமொத்த நீர்வேலி மக்களும் இவ்வாறுதான் என எண்ணி விடாதீர்கள் . உங்கள் காலத்தில் கல்வி கற்ற மாணவர்களும் உங்கள் காலத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் உங்களின் அருமையினை அறிவர் . நீங்கள் கல்வியில் கொண்ட அக்கறையினை மாணவர்கள் நிச்சயம் பறைசாற்றுவர்.
வாழ்க அதிபர் திரு ரவிச்சந்திரன் சேர் அவர்களே

0 Comments