10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வியாழக்கிழமை விஜயதசமி……

12106951_1091267707557645_6450257882248221265_n

அன்றைக்கு சமீவிருக்ஷ பூஜை அதாவது வாழை வெட்டு என்று சொல்வார்களே அது எல்லா ஆலயங்களிலும் நடக்கும்..இது பற்றி இன்றைக்கு இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.. கதலி, இதரை என்று சொல்லுவார்களே எந்த வாழை வெட்டுவது என்று சர்ச்சை..என்னிடம் கேட்டார்கள்.. எனக்கு தெரியாது என்று சொன்னேன்.. அந்த நிகழ்ச்சி ஒருவாறு முடிந்தது..உங்களுக்கு தெரியுமா?முதலில் ஏன் வாழையை வெட்டுகிறார்கள்?உண்மையில் இங்கு வாழைக்கு முதன்மையே கிடையாது.. வாழை மரத்தில் செருகியுள்ள வன்னிக்கு தான் எல்லா முதன்மையும்…சமீ விருக்ஷம் என்றாலே வன்னி தான்..இன்றைக்கும் தமிழ்நாட்டில் எங்கும் விஜயதசமிக்கு வாழை வெட்டுவதில்லை…வன்னி மர கிளையை நாட்டி அம்பு போடுவார்கள்.. எல்லா திருக்கோவில்களிலும் இது நடக்கும்..மா(பெரிய) அம்பு தான் மானம்பூ என்று சொல்லப்படுகிறது..ஈழத்தில், இதனை கொஞ்சம் வித்யாசமாக வாழையில் வன்னியை செருகி அதனை வாளால் வெட்டுவார்கள்..அதனால் வன்னி வாழை என்றார்கள்.. இப்போது இருப்பவர்கள் கன்னி வாழை என்று வாழைப்பூவுடன் கூடிய வாழையை புரிதலில்லாமல் சில இடங்களில் வைக்கிறார்கள்..சிலர் மகிஷாசூரன் வாழைக்குள் ஒளித்ததால் அம்பாள் அதை வெட்டினாள் என்று கற்பனையாக ஏதோ சொல்லி திருப்திப்படுகிறார்கள்.இது இப்படியே போனால்..?

அது சரி வன்னிக்கு என்ன சிறப்பு…? அது பற்றி மஹாபாரதம் முதல் பல புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது..

ஆக, சரியான புரிதல் அவசியம்..

பகிர்வதன் மூலம் தெளிவு உண்டாக செய்வோம்..

அன்னையின் திருவடிகளை மனம், மொழி, வாக்கால் போற்றி வாழ்வோம்…

-நீர்வை தியாக.மயூரகிரிக்குருக்கள்

0 Comments