10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வில்லுமதவடி வீதி இன்று(01.02.2013) திறக்கப்பட்டது.நீர்வேலி தெற்கு மக்கள் சந்தோசத்தில்……..

7இன்று காலை 01.02.2013 அன்று 9 மணியளவில் பொதுமக்களும் இராணுவமும் இணைந்து வில்லுமதவடி வீதியை திறந்து வைத்தனர்.அச்செழு இராணுவ கட்டளைத்தளபதி அச்சுவேலி இராணுவ கட்டளைத்தளபதியும் நீர்வேலி தெற்கு மக்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அச்செழு இராணுவத்தளபதியால் இந்த வீதி திறந்து வைக்கப்பட்டது.இதனால் எம்மூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1995 ஒக்டோபர் மாதம் மூடப்பட்ட இந்த வீதியானது இராணுவமுகாமினால் மறைக்கப்பட்டு இருந்தது.சுமார் 17 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.இவ் வில்லுமதவடி வீதியைத்திறப்பதற்காக கடந்தசில நாடகளாக இராணுவமும் பொதுமக்களும் இணைந்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.இந்த வீதியால் செல்லும் போது வரும் அம்பாள் ஆலயத்தில் பொங்கல் செய்து  விசேட பூஜைவழிபாடும் இடம் பெற்று பின்னர் இரண்டு வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஏனையவர்களின் வீடுகளும் உரிமையாளர்கள் நேரில் வருமிடத்து அவர்களின் வீடுகளும் கையளிக்கப்படும் என்று நீர்வேலி தெற்கு கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிமையாளர்கள் நேரில் வருவதுடன் உறுதி மற்றும் வீட்டை தருமாறு கோரி எழுதப்பட்ட விண்ணப்பக்கடிதத்துடன் நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் திரு.சு.சண்முகவடிவேல் அவர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.அல்லது அவரின் 077 0779050335 எனும் இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் கிராமசேவையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

10

9

8

7

6

5

4

3

2

1

0 Comments

Leave A Reply