10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வெகுசிறப்பாக நடைபெற்ற இலண்டன் கலை மாலை நிகழ்வு – காணொளி இணைக்கப்பட்டுள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 27-10-2013 ) இலண்டனில் எமது பாடசாலையான நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் 11 வது ஆண்டு நிறைவு விழாவும் “கலை மாலை நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரித்தானிய அரசாங்கம் காலநிலை காரணமாக அங்குள்ள மக்களை வெளியே செல்லவேண்டாமென அறிவித்திருந்தும் பயத்தினையும் மீறி நீர்வேலி உறவுகள் கலைமாலை நிகழ்வில் கணிசமான அளவு பங்குகொண்டனர்.நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றதாக நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினர் அறிவித்துள்ளனர்.நிகழ்வின் வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்கு..நன்றி திரு.றஞ்சன் அவர்கள்
இலண்டன்

0 Comments

Leave A Reply