[:ta]வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்[:]
[:ta]
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை மே மாதம் வரையில் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் வெப்பத்துடனான வானிலை நிலவும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்வேலி கந்தசுவாமி கோவில் திருவிழா ஏப்ரல் 1 ம் திகதி ஆரம்பமாகின்றது. இக் காலங்களில் அதிகமான வெப்பநிலை ஆலய வீதிகளில் காணப்படும். இதனால் ஆலய விதிகளில் பகல் திருவிழாவின் போது பக்தர்கள் மோசமான வெப்பநிலையினால் பாதிக்கப்படுவர். அதுவும் வெளிநாட்டில் இருந்து நீர்வைக்கந்தன் திருவிழாவிற்காக வருகை தரும் பக்தர்கள் அவதிப்படுவதை காணக்கூடியதாக இருக்கும். எனவே நீர்வைக்கந்தன் ஆலய நிர்வாகத்தினரும் ஸ்ரீ சுப்ரமணிய இளைஞர்களும் ஆலயச் சூழலில் நிழல்தரும் மரங்களினை நாட்டி நிழலினை எதிர்வரும் காலங்களில் ஏற்படுத்தவேண்டிய கடமைப்பாடு உண்டு.
[:]
0 Comments