வெளிப்புற கவின்நிலையை வேண்டிநிற்கும் பாலர் பகல்விடுதி
நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதி வர்ணம் பூசப்பட்டு மிளிர்கிறது.அத்துடன் வெளிப்புற கவின்நிலையை ஏற்படுத்தவேண்டிய தேவையும் காணப்படுகிறது..அதனுடன் மாணவர்கள் முன்பள்ளியில் கற்கும் போது விளையாட்டுடன் சேர்ந்தே கற்றலில் ஈடுபடுவது யாவரும் அறிந்தவிடயமாகும்.எனவே அழகிய பூங்கா உள்ளே அமைவதுடன் அதன்நடுவே காணப்படும் விளையாட்டு உபகரணங்களும் புனரமைக்கப்படவேண்டும்.புதிய விளையாடடு உபகரணங்களும் ஏற்படுத்தப்படவேண்டிய தேவையும் காணப்படுகிறது.அனைவரும் இணைந்து இந்தப்பாலர் பகல் விடுதியினை மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்துவதுடன் எமது பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் அனைவரும் வலுவான கற்றல் அடித்தளம் அமைப்பதற்கான இடமாக மாற்ற வேண்டும்.இதற்கு நீர்வேலியின் அனைத்துத்தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமாகும்.
0 Comments