10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வேண்டியதைப் பெற்றிட அருள்தா முருகா…..[:]

[:ta]தாய் தந்தையிலும் மேலாய்
அணைப்பவன் நீ
ஆசானாய் தந்தைக்கு
உபதேசம் செய்தவன் நீ
ஆணவமகற்ற அண்டத்தை
அதிர வைத்தவன் நீ !

பச்சைக் குழந்தையாய் உனைப்
பார்க்கும் போதும்
துச்சமென மயில்மீதமர்ந்து
ஆடும் போதும்
ஒவ்வொரு அழகும் புது
அலங்காரம் அழகா !

போன வழியெல்லாம்
கல்லு முள்ளு
வேகுமென் வேதனையை ஆற்றிட
முருகாவுன் பெயர் சொன்னாலடுத்து
வரும் சுகம் என்றாரே ! வேலவா !

தேரேறும் மருகாவுன் பதம்காண
பக்தர்கள் பறந்தோடி
வடம்பிடித்து வலம்வந்து வாயர வாழ்த்தியுன்னை
வேண்டியதைப் பெற்றிட அருள்தா
நீர்வைமண் வாசா ! முருகா !

** நீர்வை நடனம்.

[:]

0 Comments

Leave A Reply