10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கில் அமைந்துள்ள மாதர்சங்கம் அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் மிகச்சிறப்பாக இயங்கி வருகின்ற ஒரு அமைப்பாகும். சமூக சேவகி  வேதவல்லி  கந்தையா அவர்கள் நீர்வேலி கிராமத்திற்கு பலசேவைகளை செய்திருந்தார். அதனை நினைவு கூரும் வகையில் அவருக்கான சிலை ஒன்றினை மாதர்சஙக வளவில் அவர்கள் குடும்பத்தினர் இணைந்து  அமைத்துள்ளனர். அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தது.நாளை   10.2.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்கு மேற்படி சிலை அமரர் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களது மகன்   கந்தையா சுகுமாரன் அவர்களாலும் திருமதி மீனலோசினி சுகுமாரன் அவர்களாலும் திறந்துவைக்கப்படவுள்ளது. அனைவரையும் தவறாது  கலந்து சிறப்பிக்குமாறு  அமரர் திருமதி வேதவல்லி கந்தையா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

 

 

[:]

0 Comments