10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா 2013

INDIAN GIRL LIGHTS A DEEPAWALI LAMP IN AHMEDABAD
ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை பரிசளிப்பு விழா எதிர்வரும் 24.08.2013 சனிக்கிழமை பி.ப 02.30 மணிக்கு நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்தில் தலைவர் திரு.ந.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் திரு.திருமதி கிருபாகரன்(கரன் நகைமாடம் யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக செல்வி.மா.தெய்வலக்ஸ்மி (இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் கோப்பாய்)அவர்களும் திரு.சி.கணபதிப்பிள்ளை (ஓய்வுநிலை இ.போ.ச உத்தியோகத்தர்) அவர்களும் கௌரவவிருந்தினராக திரு.சி.தயாபரன்( கிராம அலுவலர் நீர்வேலி தெற்கு)அவர்களும் திரு.சு.சண்முகவடிவேல் ( கிராம அலுவலர் நீர்வேலி மேற்கு) அவர்களும் திரு.சி.தர்மரத்தினம் அவர்களும் திருமதி காங்கேஸ் ஜெயசோதி அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சி நிரல்

 • கொடியேற்றல்
 • மங்கலவிளக்கேற்றல்
 • இறைவணக்கம்
 • ஆசியுரை
 • வரவேற்புரை
 • தலமையுரை
 • சிறப்புரை
 • கலைநிகழ்வுகள்
 • கௌரவ விருந்தினர் உரை
 • பிரதமவிருந்தினர் உரை
 • ஆசிரியர் கௌரவிப்பு
 • பரிசில் வழங்கல்
 • நன்றியுரை
 • கொடியிறக்கம்

அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply