10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை – வெள்ளிவிழா நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

நீர்வேலி ஸ்ரீமுருகன் அறநெறிப் பாடசாலையால் நடாத்தப்படவிருந்த வெள்ளிவிழா நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சனசமூகநிலைய கட்டிடத்திலேயே நீர்வேலி ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை இயங்கி வருகின்றது. மேற்படி கட்டிடம் திருத்தப்படுகின்றமையால் நீர்வேலி ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலையால் நடாத்தப்படவிருந்த வெள்ளிவிழா நிகழ்வும் சுமார் ஒரு மாதகால அளவிற்கு  பிற்போடப்பட்டுள்ளது. பண அன்பளிப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

உதவி செய்ய விரும்புகின்ற அன்பர்கள் பின்வரும் கணக்கிற்கு வைப்பிலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கணக்கிலக்கம் 77370351 இலங்கை வங்கி கோப்பாய்

(தகவல் ந.சிவசுப்பிரமணியம் (செட்டியார் ) தலைவர்)

0 Comments

Leave A Reply