ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் நூல்நிலையத்திற்கு 2 இலட்சம் உதவி
ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் நூல்நிலையத்திற்கு 2 இலட்சம் ரூபா நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. 2014 மற்றம் 2015 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களும் அத்துடன் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அவர்களின் ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரைகளும் கையளிக்கும் நிகழ்வு 12.09.2015 சனிக்கிழமை நுால்நிலையத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
0 Comments