10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரின் நினைவு நாள்… (- நீர்வை மயூரகிரி)

இன்று நீர்வேலி மண்ணில் அத்தியார் இந்துக்கல்லூரி நிறுவப்படுவதற்கு ஆதாரமாக அமைந்த திண்ணைப்பாடசாலையின் ஸ்தாபகரான ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரின் நினைவு நாள்.

சம்ஸ்க்ருத கல்வியை யாழகத்தில் பேணி வளர்த்தமையில் பண்டிதரின் பங்கும் பணியும் மிகச்சிறப்பானது..

அன்னார் தமது அகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபித்த ‘நீரவாடீபுர சம்ஸ்க்ருத வித்யாலயம்’ தந்த சம்ஸ்க்ருத பேரறிஞர்கள் பலர்..

சிவலிங்கபிரதிஷ்டாவிதி, சிவாகமசேகரம் ஆகிய நூல்களை தந்த அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் இந்த பாடசாலை தந்த உயர்ந்த மாணவரே ஆவார்..

சிவசங்கரபண்டிதர் தர்க்கசாஸ்திரத்தில் அளவற்ற புலமை வாய்ந்தவர் என்றும் இவரது கிறிஸ்துமத கண்டன நூல்களின் கருத்துக்கள் உலகளாவிய நிலையில் அக்கால கிறிஸ்தவ அறிஞர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டன என்றும் பேராயர் ஜெபநேசன் அவர்கள் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார்..

பண்டிதர் அவர்களின் பெயரில் நீர்வேலியில் நூல் நிலையம் ஒன்று செயற்பட்டு வருகிறது..

எனினும் இவரது இவரது புதல்வர் சிவப்பிரகாசபண்டிதரதும் பல தமிழ் & சம்ஸ்க்ருத நூல்கள் பல்லாண்டுகளாக பதிப்பிக்கப்படாது காண அரிய நிலையிலே இன்றுள்ளன..

ஆறுமுகநாவரின் நண்பராக, அவரது பணிகளுக்கெல்லாம் உதவியவராக, சம்ஸ்க்ருதத்தில் உரையாற்றும் வன்மை பொருந்தியவராக இவர் திகழ்ந்திருக்கிறார்..

தமிழகத்திற்கும் யாழகத்திற்கும் இடையே பெரியதொரு உறவுப்பாலமாகவும், தமிழகத்தில் பல சிஷ்யர்களுக்கு குருவாகவும் பண்டிதர் திகழ்ந்துள்ளார்.

பண்டிதர் அவர்கள் உருவச்சிலை அமைத்தும், சீரிய முறையில் திருநாளை கொண்டாடியும் நீர்வை மண்ணில் கௌரவம் செய்து வணக்கப்பட வேண்டியவராவார்.

தன்னை இழந்து சைவமும் தமிழும் வடமொழியும் சிறக்க பணி செய்த பண்டிதர் சிவசங்கரனாரின் நினைவு நாள் (குருபூஜை) இன்று புரட்டாதி சித்திரை நக்ஷத்திரமாகும்.. 02.10.2016

நாமும் அவரை போற்றுவோம்..

– நீர்வை மயூரகிரி

0 Comments

Leave A Reply