10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூகநிலையத்தின் சாதனைகள்[:]

[:ta]

நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தின் தற்கால வளர்ச்சி நிலையினை அவதானித்து வெளிநாடுகளில் உள்ள  புலம் பெயர் நீர்வேலி மக்கள் உதவி வருகின்றனர். வாசிகசாலையில் பத்திரிகை போடுவதற்காக இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா (210 000/= ) நிதியினை தர்மசேகரம் ஜெயராணி மற்றும் தர்மசேகரம் தமயந்தி ஆகியோர் இணைந்து  வங்கியில் இட்டுள்ளனர். அதனுடைய வட்டியினை மாதாந்தம் பயன்படுத்துமாறு வழிவகைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு மைதானத்தினை திருத்தி இளைஞர்கள் பயன்படுத்துவதற்கு நீர்வேலி தெற்கைச் சேர்ந்த திரு சண்முகம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். நோர்வேயில் வதியும் கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி மற்றும் அக்காச்சியின் சகோதரன் சிவகுருநாதன் ஆனந்தன் ஆகியோர் இணைந்து ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளனர். இந்த நிதியில் 100 பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு அதன் வருமானம் வாசிகசாலைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

[:]

0 Comments

Leave A Reply