10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிகழ்வு ஒன்று பிற்போடப்பட்டுள்ளது.[:]

[:ta]

ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் 10.02.2019 அன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுபபினர் கஜதீபன் ஆகிய இருவரையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. தவிர்க்கமுடியாத காரணத்தினால் அந்நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. அத்துடன்  புலம்பெயர் நீர்வேலி உறவுகளின் வேண்டுகோளிற்கு இணங்க  சித்திரை மாத நீர்வைக்கந்தனின் பெருந்திருவிழாக்காலத்தின் போது ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தின் வைரவிழா நிகழ்வும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில்  பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுபபினர் கஜதீபன் ஆகிய இருவரையும் கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் தலைவர் திரு.சி.கணபதிப்பிள்ளை அறிவித்துள்ளார். மேலும் நீர்வைக்கந்தனின் திருவிழாக்காலங்களில்  தினமும் நடைபெறுகின்ற அன்னதான நிகழ்வில்  புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கின்ற மக்களும்  அ்ன்னதானத்தில் இருந்து உணவு அருந்த  முடியாத வயோதிபர்களுக்கும் வசதியாக இந்த முறை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தின் அறைகளில் உள்ள மேசை கதிரையில் அமர்த்தி உணவு பிரிமாற  நூல்நிலைய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

[:]

0 Comments