10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பாராட்டு விழா[:]

[:ta]

ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் 19.04.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற புனரமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவும் அக்கட்டடத்தினை கட்டுவதற்கு நிதியுதவி வழங்கிய அல்லது நிதி ஒதுக்கீ்ட்டம் செய்த அன்புள்ளங்களை கௌரவிக்கும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சித்தார்த்தன் அவர்களுக்கும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு.கஜதீபன் அவர்களுக்கும் மற்றும் திருவாசகம் அவர்களுக்கும் கௌரவிப்பு நடைபெற்றது. மிகப்போற்றப்படக்கூடிய பாராட்டு ஒன்றும் இடம்பெற்றது. ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்திற்காக அரும்பாடுபட்டு இவ் உலகினை விட்டு நீங்கிய அமரர் திரு வரதகுலசிங்கம் மற்றும் பத்மநாதன்(பப்பு) ஆகிய இருவரினதும் துணைவியரை நிலைய சமூகத்தினர் கௌரவித்தனர். அமரர் வரதகுலசிங்கம் மற்றும் பப்பு ஆகிய இருவரைினதும் கனவு தற்போது நனவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதய தலைவர் திரு.சி.கணபதிப்பிள்ளை மற்றும் இளைஞர்களின் உன்னதமான பணிகளால் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையம் முழுமைபெற்றுள்ளது. நிதியுதவி செய்த அன்பர்களுக்கும் CCTV camera மின்விளக்குகள் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்தையும் வழங்கிய அன்புள்ளங்களுக்கும் இந் நிகழ்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


[:]

0 Comments

Leave A Reply