ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலைய புனரமைப்பிற்கான உதவி
நீர்வேலி வடக்கு காளிகோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலையமானது கடந்த ஆறுவருடங்களிற்கு பின் இவ்வருடம் சித்திரையிலிருந்து மீண்டும் புதிய நிர்வாக சபையின் கீழ் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. இவ் சனசமூக நிலையமானது நீண்ட காலமாக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமையினால் பல்வேறு உட்கட்டமைப்பு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவற்றிற்காக பிரேரிக்கப்பட்ட முன்மொழிவுகளில் சில:1. ஒருபக்க சுவரினை மீள அமைத்தல் (முற்றாக இடிந்து விழும் நிலையிலுள்ளது)
2. இருக்கும் சுவர் வெடிப்புக்களை புனரமைத்தல்
3. அறிவிப்பு பலகை ஒன்றினை அமைத்தல்
4. வர்ணம் பூசுதல்
5. ஏற்கனவே இருக்கும் மேசை மற்றும் வாங்குகளை சீர் செய்தல்
6. புதிதாக அலுமாரி ஒன்றினை செய்தல் – தற்போது பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை வைப்பதற்கு எவ்விதமான வசதிகளும் இல்லை
இவற்றினை அமுல்படுத்துவதற்கு புதிய நிர்வாகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க இவ்வருட வரவு செலவு ஒதுக்கீட்டு நிதியிலிருந்து வலிகிழக்கு பிரதேசசபையினால் 25000 ரூபா பணம் ஒதுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருந்தும் இந்நிதியினைக் கொண்டு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கால்பகுதியனைக் கூட நிறைவு செய்யக் கூடப்போதுமானதாகவில்லை. இவ் சனசமூக நிலையத்தின் அங்கத்தவர்கள் இன்று பல பிரதேசங்களிலிலும் சிதறி வாழ்ந்து வருகின்றனர் (உள்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில்).
எனவே 1943 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு 71 வருடங்கள் பழைமைகொண்ட சனசமூக நிலையத்தினை அழிந்து விடாமல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உங்கள் எல்லோருடமுமிருந்த இச் செயற்திட்டத்தினை செய்து முடிப்பதற்கான உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.
நிர்வாக சபையுடன் தொடர்புகளுக்கு: 077 019 4164/075 203 2957/075 869 0329
0 Comments