10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

‎நீர்வேலி‬ வருகிறார் ‪ஜனாதிபதி‬…..

12498834_1499283060099285_1224562970_nவிதைகள்‪ அத்தாட்சிப்படுத்தும்‬ நிலையம் திறப்பு‬. நீர்வேலி தெற்கு பூதர்மடம் வீதியில் புதிதாக  அமைக்கப்பட்ட‪ விதை அத்தாட்சிப்படுத்தும்‬  பிராந்திய சேவை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இந்த நிலையம் திறந்து வைக்கும் நாள் பற்றி தற்போது உறுதியாக சொல்லமுடியதுள்ளதாக அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

எனினும் 15 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அன்றைய தினம் திறக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.மத்திய விவசாய அமைச்சால் ஒதுக்கப்பட்ட 35 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை நிலையம் 2006 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தின் கட்டடத்தல் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் செயற்பட்டு வந்தது.

இதே சமயம் புதிய கட்டம் திறந்து வைப்பதற்கா ஜனாதிபதியின் வருகைக்காக நீர்வேலி பூதர்மடம் சந்தியில் இருந்து கட்டடத்துக்கு செல்லும் 300 மீற்றர் நீளம் கொண்ட வீதியை உடன் புனரமைப்பதற்கும் வலி.கிழக்கு பிரதேச சபை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

12506998_1499283040099287_775607780_n12498834_1499283060099285_1224562970_n12539997_1499283023432622_1130722837_n12512073_1499282976765960_802303113_n12510694_1499283096765948_2098002938_o

 

0 Comments

Leave A Reply