10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சினிமா செய்திகள்

[:ta]

விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் வரும் வில்லன் மகேந்திரன் காலமானார். தனது இறுதிக்காலத்திலும் சிறந்த நடிப்பாற்றிலை வெளிப்படுத்தியிருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

…………………………………………………………………………………………………………………

ராஷ்மிகா ஜோடியாக நடிக்கிறார்கார்த்தியின் புதிய படம் தொடங்கியது

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

கார்த்தி நடித்து கடந்த வருடம் ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும், பிப்ரவரியில் ‘தேவ்’ படமும் திரைக்கு வந்தன. தொடர்ந்து கைதி படத்தில் நடித்து வருகிறார். இதில் சிறைக்கைதி வேடத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கதாநாயகி இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்ட திகில் படமாக தயாராகிறது.

இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்த புதிய படத்துக்கு கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை. அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக பெரிய பொருட்செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திர திரையுலகில் பிரபலமாக இருக்கிறார். யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

 

கோடையில் வரும் சூர்யா, விக்ரம், கார்த்தி படங்கள்

கோடையில் வரும் சூர்யா, விக்ரம், கார்த்தி படங்கள்

கடந்த வருடம் வெளியான ஸ்கெட்ச், சாமி-2 படங்களுக்கு பிறகு கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
இது அவருக்கு 56-வது படம். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்கிறார். அக்‌ஷரா ஹாசன் கதாநாயகியாக வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. டிரெய்லரும், விக்ரமின் தோற்றமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிரடி திகில் படமாக எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
விஷாலின் அயோக்கியா படத்தையும் ஏப்ரல் மாதம் வெளியிடுகின்றனர். இதில் ராஷிகன்னா நாயகியாக வருகிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கி உள்ளார்.
சூர்யாவின் என்.ஜி.கே. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இதன் வேலைகளை துவக்கி பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது இறுதி கட்டவேலைகள் நடக்கின்றன. இதில் சாய் பல்லவி, ரகுல்பிரீத் சிங் நாயகிகளாக நடித்துள்ளனர்.
கார்த்தியின் கைதி படம் ஜூன் மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கதாநாயகி இல்லாத படம். கார்த்தி கைதி வேடத்தில் வருகிறார். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை கொண்ட திகில் படமாக தயாராகி உள்ளது.
இதைத்தவிர ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படமும் கோடை வெளியீடாக மே மாதம் திரைக்கு வருகிறது.

……………………………………………………………………………………………………………………

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம்: நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந் தேதி) ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். 2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது. தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.
…………………………………………………………………………………………………………………………………

 

சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும்…

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து, அவரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த தனசேகரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை நகரங்களில் நடைபெற இருக்கிறது.

 [:en]

காளி டைட்டில் மாறியதன் முக்கியமான காரணம் இது தான் sujee-ico

காளி டைட்டில் மாறியதன் முக்கியமான காரணம் இது தான் - Cineulagam

ரஜினிகாந்த்-ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்திற்கு முதலில் காளி என்று தான் டைட்டில் வைத்தனர்.

ஆனால், ரஜினி அந்த தலைப்பு வேண்டாம் என்று மறுத்து விட்டார். அதற்கு என்ன காரணம் என்றால் அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றையை அப்போது பெறவில்லை.

அதுமட்டுமின்றி அந்த படத்தின் படப்பிடிப்பின் போது பலவித அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாம். இதனால், செண்டிமெண்டாக ரஜினி அந்த டைட்டிலை ஒதுக்க, காளி தற்போது கபாலியாகிவிட்டது.


 

கர்நாடகாவிலும் அஜித் தான் நம்பர் 1- ஸ்பெஷல் சர்வே sujee-ico

கர்நாடகாவிலும் அஜித் தான் நம்பர் 1- ஸ்பெஷல் சர்வே - Cineulagam

அஜித் தமிழகம் மட்டுமின்றி தற்போது தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று கூகுளில் கர்நாடகாவில் அதிகம் தேடப்படும் நடிகர், நடிகை யார் என்று ஒரு சர்வே வெளியிட்டுள்ளது.

இதில் அஜித் பற்றி தகவலை தான் பலரும் தேடியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் அஜித் முதலிடம் வகிக்க, நடிகைகளில் காஜல் அகர்வால் முதல் இடத்தை பிடித்துள்ளார்.


நஸ்ரியா மீண்டும் சாதிப்பாரா? சந்தேகம் கிளப்பும் இயக்குனர்கள் sujee-ico

Kollywood-news-13391

நேரம், ராஜா ராணி என ஒரு சில படங்களில் நடித்தவுடனே தமிழில் மிக வேகமாக முன்னணி இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலை மணந்து இல்லறத்தில் செட்டிலானார். மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்காத நிலையில் தனது ரீஎன்ட்ரி பற்றி அவர் அறிவித்தார் நஸ்ரியா.

இந்நிலையில் பெங்களூர் டேஸ், ஓம் சாந்தி ஓஸ்னா படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.இது நஸ்ரியாவுக்கு புது உற்சாகத்தை தந்துள்ளது.

விருதுபெறுவதுபற்றி மகிழ்ச்சி தெரிவித்த நஸ்ரியா, ‘விரைவில் புதிய படத்தில் நடிப்பேன்’ என்றார். திருமணம் ஆன நடிகைகளுக்கு தமிழில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்று சமீபத்தில் புகார் கூறி இருந்தார் பைவ் ஸ்டார் ஹீரோயின் கனிகா. அதன்படி நஸ்ரியாவுக்கும் மீண்டும் தமிழில் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றே இயக்குனர்கள் கூறுகின்றனர். முக்கியத்துவம் இல்லாத வாய்ப்புகள் வரும் பட்சத்தில் நஸ்ரியா மலையாள படங்களில் மட்டுமே நடிப்பார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.


 

வேலாயுதம் பார்ட்-2வா? மனம் திறந்த ராஜா sujee-ico

வேலாயுதம் பார்ட்-2வா? மனம் திறந்த ராஜா - Cineulagam

விஜய் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் தடுமாறிய போது வேலாயுதம் தான் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தனி ஒருவன். இப்படத்தின் ட்ரைலர் பார்க்கையில் வேலாயுதம் சாயல் தெரிகின்றதே என சிலர் கேட்டனர்.

இதற்கு விளக்கம் அளித்த ராஜா ‘ வேலாயுதம் படத்தின் தொடர்ச்சியாக சமுதாயத்தின் மீதான இன்னொரு பார்வையாக ‘தனி ஒருவன்’ இருக்கும் மற்றப்படி அதன் இரண்டாம் பாகம் இது இல்லை. “எதை வேண்டுமானாலும் சொல். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முறையில் சொல்” என்று என் குருநாதரான என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவரது அந்த ஆலோசனையைத்தான் நான் எனது எல்லாப் படத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


அர்ஜுன் படத்தில் வரலட்சுமி சரத்குமார்! sujee-ico

Kollywood-news-13386

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் அடுத்து அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த செய்தியை ஒரு சில நாட்களுக்கு வெளியிட்டிருந்தோம். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு போலீஸ் அதிகரியாக அர்ஜுன் நடிக்கிறார். ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்க்படவிருக்கும் படமாம் இது. இப்படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.


 

மாற்றுத்திறனாளிக்கு அஜித் செய்த பெரும் உதவி?

ajith

அஜித் எப்போதும் தன்னால் முடிந்த உதவியை சத்தமில்லாமல் பலருக்கும் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் ஒரு மாற்றுத்திறனாளி அஜித்தை சந்தித்துள்ளார்.

அவரிடம் நலம் விசாரித்த அஜித், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் ஒரு மூன்று சக்கர வண்டி கூட என்னிடம் இல்லை என சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

அஜித் உடனே நீங்கள் நாளை வாருங்கள் என்று கூற, அவர் அடுத்த நாள் வருகையில் கொஞ்சம் பணமும், மூன்று சக்கர வண்டி ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.


 

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பாலிவுட் ஹீரோயின்?

013

சிவகார்த்திகேயன் அடுத்து அட்லீயின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பல முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின் படி பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை சாய்ஷா என்பவர் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.


 

நயன்தாரா திருமணத்தை அவருடன் நானே நடத்தி வைப்பேன்- சிம்பு அதிரடி

idhu_namma_aalu002

சிம்பு சமீப காலமாக மிகவும் நிதானமாக தான் பேசுகிறார். நேற்று வாலு படத்தின் சக்சஸ் மீட் நடக்க, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவாக விடையளித்தார்.

இதில் நயன்தாரா காதல் பற்றி கேட்டதற்கு ‘நாங்கள் இருவரும் கருத்து வேறுப்பாட்டால் பிரியவில்லை, அப்படி சண்டையிட்டு பிரிந்திருந்தால் எப்படி ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்திருக்க முடியும்.

மேலும், விக்னேஷ் சிவன், நயன்தாரா காதலிக்கிறார்களா என்று கேட்கிறார்கள், இருவரும் என் நண்பர்களே, அப்படி காதலித்தால் அவர்கள் திருமணத்தை நானே நடத்தி வைப்பேன்’ என்று கூறினார்.


 

விஜய்யை மட்டும் ஏன் விஷால் சந்திக்கவில்லை- வெளிவந்த உண்மை

vijay_vishal001

விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தலில் மிகவும் பிஸியாகவுள்ளார். இதற்காக ரஜினி, கமல் என அனைவரையும் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவுகளை கேட்டு வருகின்றார்.

இந்நிலையில் விஜய்யை பல மேடைகளில் விஷால் புகழ்ந்தும், அவரை மட்டும் நேரில் சந்திக்கவில்லையாம். எல்லோரும் சென்ற பார்த்த நாள் கூட விஷால் வரவில்லையாம்.

என்ன என்று விசாரித்தால் தற்போது விஷால் தனக்கு போட்டியாக விஜய்யை தான் கருதுகிறாராம். இதனாலே அவரை விஷால் சந்திக்கவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.


 

 சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!

019

சூப்பர் ஸ்டார் நடித்த கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்வி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் உடனே தன் பிரமாண்ட கூட்டணியை மாற்றி இளம் இயக்குனர் ரஞ்சித்துடன் கைக்கோர்த்துள்ளார்.

தற்போது இப்படத்திற்கு முதலில் காளி என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பின் கண்ணபிரான் என கூறினர்.

சமீபத்தில் வந்த தகவலின் படி கபாலி தான் டைட்டில் என முடிவு செய்துள்ளனர். இச்செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.


 

இளையராஜாவிற்கு தொடர்ந்து சிகிச்சை- சோகத்தில் ரசிகர்கள்

ilaiyaraaja001

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தற்போது வரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

இந்நிலையில் இவருக்கு திடிரென்று உடல் நலம் முடியாமல் சில தினங்களுக்கு முன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருக்க கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து இளையராஜாவிற்கு தொடர் சிகிச்சை நடந்து வருகின்றது. இச்செய்தி ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

ராஜமௌலியின் அடுத்த படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா- அதிர்ந்த திரையுலகம்

rajamouli001

பாகுபலி படத்தின் பிரமாண்டமான வெற்றியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தை தொடர்ந்து இவர் பாகுபலி-2 படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

இப்படத்திற்கு பிறகு ஒரு பிரமாண்டமான கதையை ராஜமௌலி ரெடி செய்து வைத்துள்ளாராம். இதை இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா சமீபத்தில் இந்த செய்தியை கூற, அது மட்டுமின்றி அப்படத்தின் பட்ஜெட் ரூ 950 கோடி என கூறியுள்ளார்.


 

சூர்யா-கௌதம் மேனன் இணைகிறார்களா? ரசிகர்கள் உற்சாகம்

gautham_menon_suriya002

காக்க காக்க, வாரணம் ஆயிரம் இந்த படங்கள் தான் சூர்யாவின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற படங்கள். இப்படங்களை இயக்கிய கௌதம் மேனன் மீண்டும் சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கவிருந்தார்.

ஆனால், அப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சூர்யாவிற்கும், கௌதம் மேனனுக்கும் சில கருத்து வேறுப்பாட்டல் படம் நின்றது. இதை தொடர்ந்து சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா, அஜித்தின் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் கமிட் ஆனார்.

தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் எடுக்க முயற்சி செய்து வருகிறாராம், சூர்யா தான் ஹீரோ என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.


 

விருது விழாக்களின் முகத்திரையை கிழித்த ஜிவி

003

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது நடிகராகவும் வெற்றி பெற்றுவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் வரவிருக்கின்றது.

சமீபத்தில் இவர் தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், விருது விழாக்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘தற்போதெல்லாம் எப்படி விருது தருகிறார்கள் என்பது எனக்கு தெரியும், அவர்களுக்கு பிடித்தவர்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கும் தான் விருது’ என வெளிப்படையாக பேசியுள்ளார்.


 

புலி பட இயக்குனரின் புதிய முயற்சி

puli007

இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இன்றைய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்புதேவன் தற்போது டுவிட்டரில்இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.


ரஜினி படத்திற்கு இதுதான் தலைப்பா?

rajini_ranjith005

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதமே மலேசியாவில் தொடங்கவேண்டிய படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது.

ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் என பல இளம் நடிகர்களை களமிறக்கிவுள்ளார் ரஞ்சித்.

படத்தின் தலைப்பு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அது பற்றிய செய்திகள் தினம்தோறும் வந்துகொண்டிருக்கிறது.

முதலில் ‘காளி’ என பெயரிடபட்டதாக கூறப்பட்டது, பின்னர் ‘கண்ணபிரான்’ என அது மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இப்போது சமீபத்தில் வந்துள்ள தகவல்படி, படத்திற்கு “கபாலி” என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.

படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரமான கபாலீஸ்வரன் என்ற பெயரை சுருக்கி “கபாலி” என பெயரிட்டுள்ளது போல தெரிகிறது. ரஜினியின் முந்தைய படமான “லிங்கா”விற்கும் இப்படி தான் செய்தார்கள்.


வாலு ரிலீஸூக்குப் பின்பு ரஜினியிடம் ஆசிபெற்ற சிம்பு

str

மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிம்பு படம் வெளியாகிவிட்டது. கடைசிநேரம் வரை வருமா வராதா என்கிற பதட்டத்தை ஏற்படுத்திவிட்டு வெளிவந்திருக்கிறது படம்.

இதனால் காலையிலேயே சென்னையிலுள்ள காசி திரையரங்குக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிம்பு. உடனே அங்கிருந்து கிளம்பிப் போய் ரஜினியைச் சந்தித்ததாகத் தெரிகிறது. நான் தலைவர் ரஜினியைச் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றேன் என்று சிம்பு தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

வாலு படத்துக்குச் சிக்கல் என்றபோது, என்ன சிக்கல்? நான் உதவட்டுமா? என்று ரஜினி கேட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இப்போது படம் வெளியான கையோடு அவரைச் சந்தித்திருக்கிறார் சிம்பு.

மேலும் தனது ட்விட்டர் புரொஃபைலில் கூட ‘போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்ற பிரபல ’படையப்பா’ டயலாக்குடன் கூடிய புகைப்படத்தை வைத்திருக்கிறார் சிம்பு.


 

ரஜினி படத்தை ரீமேக் செய்யும் ஜீவன்!

jeevan001

சூர்யாவின் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் ஜீவன். அதற்கு பின் அவர் நடித்த ‘நான் அவன் இல்லை’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் சற்று காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளார். இப்போது ‘அதிபர்’, ‘ஜெயிக்கிற குதிரை’ போன்ற படங்களில் நடித்து வரும் அவர், ரஜினியின் “ஜானி” படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

‘நான் அவன் இல்லை’ படமும் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 1980ல் வெளிவந்த இந்த படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தார்.


 

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

puli004

விஜய் நடித்த புலி படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

புலி படத்தை முடித்தவுடனே அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் விஜய். சமந்தா, எமி ஜாக்சன், பிரபல இயக்குனர் மகேந்திரன் என ஒரு பட்டாளமே நடித்து வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே சில பாடல்களை அவர் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், வழக்கமாக தன் படங்களில் எதாவது ஒரே ஒரு பாடலை மட்டும் பாடும் விஜய், இந்த படத்தில் இரண்டு பாடல்களை தன் சொந்த குரலில் பாடுகிறாராம்.

அதனால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.


 

வெளிவராமல் இருந்த கௌதம் மேனன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

gauthamenon_001

நடிகர் ஜெய், சந்தானம் நடிப்பில் பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் தயாரித்த படம் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது.

இடையில் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நடத்த முடியாமலே கிடந்த இந்த படத்தை கடந்த ஆண்டு முடிவில் முழு படப்பிடிப்பையும் முடித்தார் பிரேம் சாய். தற்போது வந்த தகவல் படி கௌதம் மேனன் இப்படத்தை வருகிற செப்டம்பர் 11ம் தேதி வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

அதே தேதியில் ஆர்யாவின் யட்சன் திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


 

வாலு வெளியீட்டுக்கு கைகொடுத்த சந்தானம் – நெகிழ்ச்சியான சம்பவம்

vaalu001

படம் வருமா, வராதா என்ற நிலையில் இருந்த தருணத்தில் பல இன்னல்களை மீறி நேற்று முன்தினம் தமிழகமெங்கும் வெளியானது வாலு.

வாலு படத்துக்கு ரிலீஸ் ஆக கடைசி நேரம் வரை பிரச்சனை இருந்தது, அதனால் காலை ஸ்பெஷல் காட்சி கூட பல திரையரங்குகளில் நிறுத்தப்பட்டது. ஏன் கடைசி நேரத்தில் கூட பிரச்சனை என்று விசாரித்தால் சந்தானம் கொடுத்த ஒரு கடிதம் தான் என்று தகவல் கிடைத்தது.

அதில் சந்தானத்துக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை படம் வெளியாகும் போது கொடுத்துவிடுவேன் என்று தயாரிப்பாளர் மற்றும் சந்தானம் இருவரும் கையொப்பமிட்டு இருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கவில்லை.

இதனால் லேபிலிருந்து சம்மதம் கிடைக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வந்தனர். உடனே விஷயம் சிம்புவின் காதுக்கு போக, அவர் சந்தானத்திடம் பேசினார். உடனே சந்தானம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை படத்தை முதலில் ரிலீஸ் செய்ய விடுங்கள் என்று லேப்புக்கு தொலைபேசியில் தெரவித்துள்ளார்.

அதன் பிறகே படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது.


 

திட்டிய ரசிகைக்கு அதிரடி பதிலளித்த சிம்பு

005

பல இன்னல்களுக்கு பிறகு சிம்புவின் வாலு படம் சுதந்திர தின ஸ்பெஷலாக நேற்று உலகமெங்கும் வெளியானது. இதனையொட்டி இன்று பிரபல தொலைக்காட்சிகளில் வாலு படக்குழு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது.

இந்நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சிம்பு வை பிடிக்காத ஒரு பெண் ஏன் சிம்பு பிடிக்க வில்லை என்று அவரிடமே சொல்கிறார்.

சிம்பு பற்றி பல சர்ச்சையான கேள்விகளை எடுத்துவைத்தார். ஆதில் நீங்கள் அடிக்கடி படப்பிடிப்பை கட் செய்கிறீர்களாக என்ற கேள்விக்கு சிம்பு “சினிமா தான் என் உலகம், எனக்கு எப்படி சினிமா பிடிக்காது போகும்.

மேலும் என்னை பற்றி எழுதுபவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் அதில் இருக்கும் விஷயத்தை நம்புவதனால் தான் எனக்கு மன வருத்தம் ” என்றார்.


 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா

ilaiyaraaja001

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தனக்காகன பிரத்யேக இணையதளத்தை நேற்று தொடங்கினார்.

இந்நிலையில் நேற்று இரவு திடிரென உடல்குறைவு ஏற்பட்டதால் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, ‘இதய நோய்’ பாதிப்பு உள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். காலை, ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ என்ற சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின், ‘உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில், வீடு திரும்புவார்’ என்றும் டாக்டர்கள் கூறினர்.


 

ஒரு க்ளைமாக்ஸுக்கு 4 கோடி செலவு?

ram_charan_new_stills

தெலுங்கு டாப் நடிகர் ராம் சரண் நடிப்பில் ’மை நேம் ஈஸ் ராஜு’ என்ற படத்தை ஸ்ரீனு வைட்ல இயக்கி வருகிறார். ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயை எட்டியுள்ளன.

இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 350 மில்லியன்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 35 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகிவருகிறது. இசை தமன். இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் 4 கோடிகள் செலவு செய்துள்ளனர்.

ஏன் அவ்வளவு செலவு அப்படி என்ன சீன் என்று கேட்ட விசாரித்ததில், ஒரு கப்பலையே இந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காக வாடகைக்கு எடுத்துள்ளதாம் படக்குழு. அந்த கப்பலின் ஒரு நாள் வாடகை 16 லட்சமாம். கிட்டத்தட்ட 10 நாட்கள் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட இருக்கிறதாம்.எனவே தான் அவ்வளவு செலவாம். அப்போ தமிழுக்கு அடுத்த தெலுங்கு டப்பிங் ரெடின்னு சொல்லுங்க.


 

வாலு படம் எப்படி?

1405593386_Vaalu-Movie-Stills-12

சிம்பு ஒரு  ப்ளஸ்டூ பெயிலான  வெட்டி ஆபிசர், அவருக்கு ரெண்டு ப்ரெண்ட்ஸ். அது சந்தானம், விடிவி கணேஷ்ன்னு தனியா சொல்லத் தேவையில்லை. வெட்டிப் பசங்க என்ன பண்ணுவாங்களோ அதைத்தான் சிம்புவும் பண்றார்.

சிக்னலில் ஹன்சிகாவை சந்திக்கிறார் க்ரஷ் வருது, அடுத்து ஆக்ஸிடென்ட்ல சந்திக்கிறார் லவ் வருது. 10 நாளில் லவ் பண்ண வைக்கிறேன்னு சந்தானத்துக்கிட்ட சபதம் போடுறார். சபதத்துல ஜெயிச்சாராங்கிறதுதான் க்ளைமாக்ஸ்.  இந்தப்படத்துக்கு முன்னாடி, சிம்புவே இது மாதிரி அஞ்சாறு படத்துல நடிச்சிட்டாரு.

படம் பாக்குற எல்லாப் பசங்களுக்கும் சிம்புவுக்கு அப்பாவா வர ஆடுகளம் நரேன் மாதிரி நம்ம அப்பாவும் இருக்கக்கூடாதான்னு பொறாமையா இருக்கும்.

சிம்புக்கு தினமும் பாக்கெட் மணி, ஊர் சுத்த பைக், எல்லாம் வாங்கிக் கொடுத்து ” நீ நல்லவன் எப்போதாவது ஒரு நாள்தான் தண்ணியடிப்பேன்னு தெரியும்”ன்னு  கொஞ்சுறாரே.

ஹன்சிகா சம்பளம் டெய்லி பேஸிக்ஸ்ல வாங்கியிருப்பாங்க போல அவங்க வர்ற போர்ஷன்ல மட்டும் அப்படியே இருக்காங்க. மத்த எல்லோரும் பல கெட்டப்ல வர்றாங்க. அதுலேயும் சந்தானம்லாம் இடைப்பட்ட மூணு வருஷசத்துல என்னனென்ன படம் பண்ணினாரோ அந்தந்தப் படங்களின் கெட்டப்பிலெல்லாம் வர்றாரு.

இசை பத்தி பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல.

வில்லனா வர்ற கன்னட ஹீரோ ஆதித்யா அமைதியா வந்தே மிரட்டுறாரு. சந்தானம் , விடிவி கணேஷ் இல்லைன்னா படத்தை நினைச்சே பார்க்க முடியலை.

வாலு எப்படா வரும்ன்னு ரசிகர்கள் காத்திருந்தாங்க, நாம எப்படா முடியும்ன்னு காத்திருக்க வேண்டியிருக்கு, ஏன்னா படத்தோட நீளம் 3 மணி நேரம்.

சிம்புவை முழுமையாக நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் புதுஇயக்குநர் விஜய்சந்தர், நாயகன் முக்கியம்தான் அதோடு திரைக்கதைக்கும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.


 

மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்- வெற்றி யாருக்கு?

sivakarthikeyan_vijay_sethupathi001

சிவகார்த்திகேயன் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கின்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களாகவே தான் நடித்து வருகிறார்.

முதன் முறையாக இவர் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் நானும் ரவுடி தான். இப்படத்தை தனுஷ் தயாரிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 2ம் தேதி வர, இதே தேதியில் தான் ரஜினிமுருகன் திரைப்படமும் வரவிருக்கின்றது. ஏற்கனவே இவர்கள் நடிப்பில் சூதுகவ்வும், எதிர் நீச்சல் படங்கள் மோதி இரண்டுமே வெற்றி பெற்றது. தற்போது வெற்றி யாருக்கு என்று பார்க்க காத்திருப்போம்.


 

சிவகாசியில் தொடங்கி சிகரமே தொட்ட ஸ்ரீதேவி

sridevi001

ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. தமிழக மக்களால் அழகுமயில் என அழைத்து ரசிக்கப்பட்ட சிறந்த ஒரு நடிகையாக தமிழ்ப்படங்களில்தான் வலம் வந்தவர். பிறகு, கோலிவுட்டை மறந்துவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டது அந்த கோல மயில்.

பாலிவுட்டுக்கு போன பிறகு தனது குண்டு மூக்கை ஒரு குறையாக கருதி ப்ளாஸ்டிக் சர்ஜரியும் செய்துகொண்டார்.

ஹிந்தி படவுலகில் தனது அழகாலும் நடிப்பாலும் உச்சத்தையே தொட்டார். மும்பை வாலாக்கள் ஸ்ரீதேவியின் தற்போதைய முகத்தை வியந்து ரசித்தாலும், அந்த குண்டு மூக்கோடு தமிழ்ப் படங்களில் இருந்த அழகு தான் மனங்களில் அழுத்தமாய் பதிகிறது என்பதும் பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய வாக்கெடுப்பில், இந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் சிறந்த நடிகையாக முதல் இடத்தில் ஸ்ரீதேவியை தேர்வு செய்திருந்தனர்.

அவர் அதிக அளவிலான ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்ட இந்திய நாயகி என்பதுக்கு இதைவிட வேறு என்ன தகுதி இருக்க முடியும்.

1963 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் பிறந்தார். ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன் என்ற பெயருடைய ஸ்ரீதேவி துணைவன் என்ற பக்திப் படத்தில் குழந்தை முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

1975 ல் ஜூலி என்ற இந்தி படத்தில் கதாநாயகி லட்சுமியின் கடைசி தங்கையாக ஸ்ரீதேவியின் நடிப்பு பேசப்பட்டதால், அதுவே பாலிவுட்டுக்கு பிள்ளையார் சுழியானது.

1975 ல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, 1976 ல் தனது 13 வது வயதில் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

நடிகைகள் வயதை குறைத்து சொல்வதுதான் வழக்கம் ஆனால், தனது 14வது வயதில் தான் ஸ்ரீதேவி 16 வயதினிலே படத்தில் நடித்தார். அடுத்தடுத்து சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம்பிறை, போக்கிரிராஜா, சந்திப்பு என கமல், ரஜினி, சிவாஜியோடும் ஜோடியாக நிறைய வெற்றிப்படங்களில் நடித்தார்.

அதிலும், கமல், ஸ்ரீதேவி ஜோடி தமிழ் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு மும்பை சென்ற ஸ்ரீதேவி.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி ஹீரோக்களோடு நடித்தார். ஹிம்மத்வாலா, மாவாளி, கர்மா, மிஸ்டர் இண்டியா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து புகழடைந்தார்.

இந்திய அரசின் உயர்வான பத்மஸ்ரீ விருதும் 5 முறை பிலிம்பேர் விருதும் இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஸ்ரீதேவி 1996 ல் போனிகபூரை மணந்தார். அதன்பிறகு சினிமாவிலிருந்து 15 வருடங்கள் விலகியிருந்தார். பிறகு, மீண்டும் 2012ல் இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை மீண்டும் பெற்றது, அந்த படத்தின் வெற்றியிலேயே தெரிந்தது. பாலிவுட்டில் அதுவரை, 15 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு வந்து, நடித்து ஜெயித்த நடிகை இல்லை.

ஸ்ரீதேவி மும்பை சென்ற பிறகு, 1980 களில் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு நான் அடிமை இல்லை என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு, தற்போதுதான் வளரும் படமான ’புலி’ என்ற விஜய் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்த பிறந்த நாளில் வாழ்த்து சொல்வதோடு இன்னும் நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் ரசிகர்கள் சார்பில் வைப்போம்.


 

விஜய்க்கு நன்றி, சிம்புவிற்கு ஆறுதல்- ஹன்சிகாவின் உருக்கமான கருத்துக்கள்

vijay_str_hansika001

சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலித்து பின் பிரிந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் கூட்டணியில் வாலு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது.

காதல் பிரிவிற்கு பிறகு சிம்பு-ஹன்சிகா முன்பு போல் பேசாமல் இருக்க, தற்போது டுவிட்டரில் ஹன்சிகா, சிம்புவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படத்தை வெளியிட காரணமாக இருந்த விஜய் மற்றும் TR அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


 

அஜித் எதற்கு பேச வேண்டும்- சிம்பு அதிரடி

ajith_simbu001

சிம்பு நடித்த வாலு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 800 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது. இதற்காக இவர் தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில், இந்த இத்தனை நாள் இடைவேளியில் என் எதிரிகளை அறிந்து கொண்டேன் என கூறியுள்ளார். மேலும், அஜித் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ”இந்த விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’என தைரியம் கொடுத்ததே அஜித் சார் தான்’ என கூறியுள்ளார்.


 

10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம் இரட்டை வேடமா ?

10_endrathukulla_tl002

‘கோலிசோடா’ இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘10 எண்றதுக்குள்ள’. சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

நேற்று வெளியிடப்படப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து இன்று இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது, இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மழுப்பியபடி பதிலளித்திருக்கிறார்கள் இயக்குனர் விஜய் மில்டனும், விக்ரமும். ஆனால், விக்ரம் இப்படத்தில் இரண்டு வேடங்களில்தான் நடித்திருக்கிறார் என்ற பேச்சும் அங்கு அடிபட்டது.

ஒருவேளை ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் பட்சத்தில், இரட்டை வேடத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.


 

மீண்டும் நடிக்க வருகிறார் ஜெனிலியா!

genelia_looks-1024x768

ஹா…ஹா.. ஹாசினி இந்த ஒற்றை வார்த்தையில் தமிழ் சினிமா நெஞ்சங்களைக் கொள்ளைக்கொண்டவர் ஜெனிலியா. ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து ‘சச்சின்’, சந்தோஷ் சுப்ரமணியன்’, ‘உத்தம புத்திரன்’ என பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என ஜெனிலியா நான்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இடையில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்தவர் குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த துவங்கினார். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தையும் கடந்த 2014 நவம்பரில் பிறந்தது.

இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார். அவர் நடிக்க வருகிறார் என்றவுடன் காத்திருந்த சினிமா உலகம் உடனே மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டது. ’இட்’ஸ் மை லைஃப்’ , ’ராக் த ஷாடி’, மற்றும் ’ஹூக் யா க்ரூக்’  என மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் ஜெனிலியா.

மேலும் நீண்ட நாட்கள் கழித்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ள மகிழ்ச்சியை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ’படப்பிடிப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன்…3 வருடங்கள் ஆகின்றன எனது கடைசி ஷாட் எடுத்து. இந்த நாள் மிக நல்ல நாளாக அமையும் என உணர்கிறேன்’ என ட்வீட் செய்ய அதை ஜெனிலியாவின் கணவர் ரீட்வீட் செய்து ‘ இது சிறந்த நாளாக அமையும். நீ அதற்காக தான் பிறந்திருக்கிறாய்’ என வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.


 

தேசிய விருது இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி

001 (1)

விஜய் சேதுபதி நடித்தாலே அது தரமான படமாக தான் இருக்கும் போல, அந்த வகையில் தற்போது ஒரு தேசிய விருது இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை, சிறுவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி கொடுத்த காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் தான்.

இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


 

இத்தனை கோடிக்கு விலைப்போனதா சூர்யா படம்? ஆச்சரியத்தில் கோலிவுட்

008

சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த அஞ்சான், மாஸ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி தான். இதனால் எப்படியாவது ஹிட் அடித்துவிட வேண்டும் என்று விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் குமாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. அதேபோல் சமந்தா, சூர்யாவிற்கும் ஓரளவிற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இதனால், இப்படத்தை தெலுங்கில் தற்போதே ரூ 20 கோடி கொடுத்து வாங்கி விட்டார்களாம். சூர்யா திரைப்பயணத்தில் அதிக தொகைக்கு விலைக்கு போன படம் இது தானாம்.


 

முஸ்தபாவை திருமணம் செய்கிறார் ப்ரியாமணி- அவர் யார் தெரியுமா?

priyamani001

பருத்திவீரன், மலைக்கோட்டை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா மணி. பாரதிராஜா, மணிரத்னம், அமீர் என பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தாலும் தற்போது மார்க்கெட் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தான் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் மும்பையை சார்ந்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் முஸ்தபா ராஜ் என்கிற அவரது நண்பரையே திருமணம் செய்ய விருக்கின்றாராம்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ’என்னுடைய இன்பம், துன்பம் என அனைத்திலும் என்னுடன் இருந்தவர் அவர், அதனால் தான் என்னுடைய வாழ்க்கை துணையாக அவரை தேர்ந்தெடுத்தேன்’ என கூறியுள்ளார்.


 

ரஜினி, விஜய் படங்களில் சத்யராஜ் நடிக்க மறுத்தது எதனால்?

400sathyaraj-wallpaper-09002

பிசியான குணச்சித்திர நடிகர் என்றால் அவர் சத்யராஜ் தான். அதிலும் சத்யராஜுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் தான் அதில் அதிகம். நம்மூர் சிவகார்த்திகேயன் முதல் பாலிவுட் கிங் கான் வரை இவர் தான் மாமனார். ‘பாகுபலி’ படத்தின் அடுத்த பாகம், ஜாக்ஸன் துரை, நைட் ஷோ, என சத்யராஜ் ஹீரோக்களுக்கு நிகராக கை நிறைய படங்களுடன் இப்போது வலம் வருகிறார்.

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் நயன்தாராவின்  அப்பா கேரக்டர் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மிக ஸ்டைலான, அதே சமயம் எதார்த்தமான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் அள்ளியவர். அடுத்ததாக கட்டப்பா என்ற ஒற்றை கதாபாத்திரத்தால் ஏன் , எதற்கு , என சினிமா ரசிகர்களின் மண்டையைக் காய விட்டுவிட்டு விட்டார்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் சத்யராஜ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் வாய்ப்பை நிராகரித்தார். அதே போல் ரஜினி படத்திலும் நடிக்கவில்லை என உறுதியானது. என்ன காரணம் என நெருங்கிய வட்டங்களில் விசாரித்தபோது ‘பாகுபலி’ படத்திற்காக மட்டும் சுமார் 100 க்கும் மேலான நாட்களை சத்யராஜ் ஒதுக்கியுள்ளாராம்.

மேலும் விஜய் அஜித் படம் என்பதால் கண்டிப்பாக ஈடுபாடுகள் அதிகம் செலுத்த வேண்டிவரும் ஒரே சமயத்தில் அது முடியாது என்பதாலேயே சத்யராஜ் மறுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும் ரஜினியுடன் இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் 30 வருடங்களுக்குப் பிறகு நல்ல காம்பினேஷனில் படம் கிடைத்திருக்கும்.


 

சென்னையை காலி செய்த வடிவேலு- அதிர்ச்சியில் கோலிவுட்

001

வடிவேலு இந்த பெயரை கேட்டாலே பலரும் சிரித்து விடுவார்கள். ஆனால், இவரின் அரசியல் வாழ்க்கை ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை தமிழகம் இழக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடித்த எலி படம் படுதோல்வியடைய, இனி வடிவேலு மார்க்கெட் அவ்வளவு தான் என்று பல தயாரிப்பாளர்கள் அவர் வீட்டிற்கு சென்ற வேகத்தில் திரும்பி விட்டார்கள்.

தற்போது நான் சம்பாதித்ததே எனக்கு போதும் என்று சென்னையை விட்டு காலி செய்து மதுரைக்கு வந்து விட்டாராம். இச்செய்தியை அறிந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


 

அஜித்திடமிருந்து வந்த போன்- அசந்து போன சிவகார்த்திகேயன்

ajith_sivakarthikeyan002

அஜித் அவர் வேலையில் மட்டும் தான், வளரும் இளைஞர்களை கவனிக்க மாட்டார் என்பதெல்லாம் இந்த செய்தி உடைத்து விட்டது. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்திற்கு ஷாலினி தங்கச்சி ஷாம்லியை தான் முதலில் ஹீரோயினாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால், அவர் இந்த படத்திற்கு செட் ஆகவில்லை என்று கூற, அஜித் ஏதும் நினைத்து கொள்வாரா? என போன் செய்துள்ளனர். படப்பிடிப்பு பிஸியால் அஜித்தால் பேச முடியவில்லை.

பின் அவரே அழைத்த போது சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டுள்ளார், அதற்கு அஜித் ‘எதற்கு மன்னிப்பு, படத்திற்கு எது சரி வருமோ, அதை தான் செய்ய வேண்டும், பழகினவர்கள் என்பதற்காக சான்ஸ் எல்லாம் கொடுக்க கூடாது, அது நம்மை மட்டுமில்லாமல், நம்மையே நம்பியிருக்கும் தயாரிப்பாளரையும் பாதிக்கும்’ என கூறியுள்ளார். இதை கேட்ட சிவகார்த்திகேயன் அசந்து தான் போய் விட்டாராம்.


 

ஷங்கருக்கு தான் எங்கள் ஆதரவு- பிரபல இயக்குனர்கள்

shankar003

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர் ஷங்கர். இவர் தற்போது எந்திரன் -2 படத்தின் திரைக்கதை அமைக்கு பணியில் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் ராஜமௌலி இயக்கிய பாகுபலி ஒரு பெரிய வசூல் புரட்சியையே செய்துள்ளது. இதனால், இந்தியாவின் நம்பர் 1 பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை ஷங்கரிடம் இருந்து ராஜமௌலி தட்டிப்பறித்ததாக கூறப்படுகின்றது.

ஆனால், கோலிவுட்டின் பல முன்னணி இயக்குனர்கள் கூறுகையில் ‘இதெல்லாம் தற்போது செய்யலாம், ஆனால் 90களிலேயே ஷங்கர் பல கிராபிக்‌ஸ் காட்சிகளை செய்து காட்டியவர், அவருடைய படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும் அவர் தான் நம்பர் 1’ என தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.


 

யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் இணைகிறாரா விஜய்?

vijay_sad001

இளைய தளபதி விஜய் அட்லீ படத்தை முடித்த கையோடு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதே தற்போதைய கேள்வி. இந்நிலையில் குஷ்பு சமீபத்தில் மீண்டும் ஒரு குழப்பத்தை உண்டு செய்துள்ளார்.

ஏனெனில் சுந்தர்.சி எப்போதும் அஜித் படத்தை தான் இயக்கப்போகிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கும், இந்த நேரத்தில் விரைவில் சுந்தர்.சி, விஜய்யை இயக்குவார் என குஷ்பு கூறியுள்ளார்.

அப்படி இது நடந்தால் விஜய்-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவாக தான் இருக்கும்.


 

தாமிரபரணி பானுவுக்குக் கல்யாணம்- பின்னணிபாடகியின் சகோதரரை மணக்கிறார்

Tamil-Actress-Banu-002

ஹரி இயக்கத்தில் உருவான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகுக்கு வந்தவர் பானு (முக்தா). தொடக்கத்தில் பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லையென்றாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

அவருக்குத்  திருமணம் நடக்கவிருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக விளங்கும் ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை மணக்கவிருக்கிறார்.  இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ஆம் தேதி கேரளா, கொச்சியில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இம்மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.

ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் ஆர்யாவின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களில் பானு நடித்துள்ளார். இவைதவிர சகுந்தலாவின் காதலன் என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். நிறைய கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறாராம்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என் நடிப்பு தொடரும் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார். வாழ்த்துகள் பானு.


 

சினேகா-பிரசன்னா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

she 1

நடிகை சினேகா – பிரசன்னா தம்பதிக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இருவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். காதலித்து  பெற்றோர்களின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்

திருமணத்திற்குப் பிறகு சினேகா, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இருப்பினும் சில படங்களில் மட்டும் நடித்துவந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே சினிகா எந்த படப்பிடிப்பிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் கர்ப்பமாக இருப்பதாக பிரசன்னா ட்விட்டரில் ட்விட் செய்து குழந்தை பிறக்கப்போவதை உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் பிரசன்னா – சினேகா தம்பதியருக்கு நேற்றிரவு அழகான ஆன்குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “ என் ஏஞ்சல் சினேகா ஆழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்” என்று ட்விட் செய்துள்ளார்.

குழந்தை பிறந்ததால், நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களது உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


 

சினிமா தயாரித்து மொத்தப் பணத்தையும் இழந்த நடிகையின் பரிதாபக்கதை

boomika-1

விஜய் ஹீரோவாக நடித்து வெளியான பத்ரி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பட வாய்ப்புகள் அமையாமல் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் தெலுங்கில் ஓரிரு படங்களைத் தயாரித்தார். தான் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் செலவழித்து படம் தயாரித்ததில் அவருக்கு 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பட வாய்ப்பும் இல்லாமல், பண நஷ்டமும் ஏற்பட்டதால் சில மாதங்களாகவே அவரை கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில்  காணமுடியவில்லை.

தற்பொழுது அவரும் கணவர் பரத்தும் துபாயில் வசிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு யோகா பள்ளி நடத்துவதாகச் சொல்லப்படுகிறது. சினிமாவில் நடித்துச் சம்பாதித்த பணம் எல்லாம் போனதோடு நிறையக் கடன்களும் இருப்பதால் விட்ட  யோகா பள்ளி நடத்துகிறாராம். மன அமைதியோடு பணமும் சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் இதில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  நடிகைகள் என்றால் செல்வாக்கானவர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.  மாறாக இவ்வாறு கஷ்டப்படுகிறவர்களும் சரிபாதிக்கு மேல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


தன்னை இகழ்ந்தவரையும் பெருந்தன்மையாக வாழ்த்திய சிவகார்த்திகேயன்

012

ஒரு நடிகர் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஹிட் கொடுத்தால் மட்டும் போதாது. சில நற்குணங்கள் அவரிடம் யாரும் கூறாமலேயே இருக்க வேண்டும்.

அதேபோல் தான் சில வருடங்களுக்கு முன் சிம்பு ஒரு பேட்டியில் தற்போது உள்ள நடிகர்களில் சிலர் ஒரு பெரிய நடிகரின் போர்வைக்குள் இருந்து வெற்றி பெறுகிறார்கள் என சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கினார்.

ஆனால், நேற்று வாலு படத்திற்காக சிம்புவிற்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு சிம்புவும் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 

விஜய், விக்ரம் வேண்டாம் அஜித் தான் என் சாய்ஸ்- பிரபல இயக்குனர்

ajith_vijay_vikram002

கோலிவுட்டின் பல இயக்குனர்களுக்கு அஜித்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தான் விருப்பம் போல, சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சண்டி வீரன்.

இப்படத்தின் இயக்குனர் சற்குணம் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் தொகுப்பாளர் ”‘விஜய், அஜித், விக்ரம்’ இதில் ஒருவருடன் பணிபுரிய வேண்டும் என்றால் யார் உங்கள் விருப்பம்?” என்று கேட்க, அதற்கு அவர் ‘கண்டிப்பாக அஜித் சார் தான்’ என்று பதில் அளித்துள்ளார்.


 

Micromax  நிறுவனர் ராகுல் சர்மாவை மணக்கிறார் நடிகை அசின்!

Asin- husbend

இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கம்பெனியான மைக்ரோ மேக்ஸ் உரிமையாளரும், பெரும் தொழிலதிபருமான ராகுல் ஷர்மாவை, நடிகை அசின் திருமணம் செய்ய இருக்கிறார்.

சத்தியன் அந்திக்காடு இயக்கிய, ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ என்ற மலையாளபடம் மூலம் 2001 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். நடிகை அசின், ஜெயம் ரவியின் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தார்.

மலையாளம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். கஜினி இந்தியில் எடுக்கபட்டபோது அமீர்கான் ஜோடியாக  நடித்தார். தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இந்தி படங்களில் நடிக்கும்போது, மைக்ரோ மேக்ஸ் மொபைல் கம்பெனி நிறுவனர் ராகுல் சர்மாவுடன் (39) காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை அந்த நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை அசினும் உறுதிபடுத்தியுள்ளார்.

மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் பிரபலமான செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமாகும். ராகுல் சர்மா, விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா, ராஜேஷ் அகர்வால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. 2000ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் உதயமானது.


 

மகேஷ் பாபு, விஜய்க்கு செய்தது நியாயமா?

maheshbabu,,,,,vijay

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா,சதீஷ் நடிப்பில் சென்ற வருட தீபாவளி அன்று  வெளியாகி 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்த படம் ‘கத்தி’. படத்தின் கதைப்படி ஒரு குளிர்பான கம்பெனி கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அதை விஜய் போராடித் தடுப்பார். இதுதான் படத்தின் கரு.

இதே பாணியில் தான் சமீபத்தில் வெளியான செல்வந்தன்,  தெலுங்கில் ஸ்ரீமந்துடு படமாக வெளியாகியுள்ளது. விவசாயம், ஊரில் தண்ணீர் பிரச்னை. ஊருக்காக தன் நலத்தைக் கூட பொருட்படுத்தாத ஹீரோ இடையில் செருகப்பட்ட குளிர்பான கம்பெனி விவகாரம் என இந்தப் படத்தின் கதையும் ஓரளவு ‘கத்தி’ படத்தின் கதைதான்.

ஏற்கனவே ‘கத்தி’ படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க முதன்முதலில் மகேஷ் பாபுவிற்குதான் கதை சொல்லப்பட்டது.  நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை எனக் கூறி மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து பவன் கல்யாணிடம் பேசப்பட்டது அவரும் மறுக்கவே இப்போது படம் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘செல்வந்தன்’ படம் ‘கத்தி’ படத்தின் கதையை ஒத்திருக்கும் பட்சத்தில் பின்னர் ஏன் ‘கத்தி’ ரீமேக்கிற்கு மகேஷ் பாபு சம்மதிக்கவில்லை என  கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் ’கத்தி’ படத்தின் கதையைக் கேட்டு அதிலிருந்து கதையை உருவி இந்த ‘செல்வந்தன்’ படத்தின் கதையை உருவாக்கி விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இனி இந்த செல்வந்தன் வெளியானதால் அதே மாதிரியான கதையை மீண்டும் தெலுங்கில் எடுக்க முடியுமா. ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளரின் நிலைதான் என்ன? இனி எந்த ஹீரோ நடிப்பார் இப்படி பல குழப்பங்கள் உருவாகியுள்ளன.


 

பிரம்மாண்ட ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி!!!

collage

பிரம்மாண்ட பொருட்செலவில் அமெரிக்க விளையாட்டு சார்ந்த படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘வாரியர்’. காவின் ஓ கோனர் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதைப்படி மூன்று ஹீரோக்கள் என்பதால் தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விக்ரம், கார்த்தியிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபகாலமாக மலையாள, மற்றும் ஹாலிவுட் ரீமேக் என பெருகி வரும் நிலையில் இது ஆச்சர்யப்படும் விஷயம் அல்ல என்றே சொல்லலாம்.

எனினும் இவர்கள் மூவரும் நடிக்கிறார்களா, அல்லது வேறு யாருமா என்பதும் மற்ற இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


 

அஜித்தையும் கவர்ந்த சிறுவர்கள்

ajith

அஜித் எப்போதும் தன்னுடன் நடிக்கும் அனைவரையும் சமமாக தான் நடத்துவார், இதனால் என்னவோ அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

தற்போது தல-56 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கும் அஜித், ஓய்வு நேரத்தில் காக்கா முட்டை படத்தை பார்த்துள்ளார்.

இதில் சிறுவர்களின் நடிப்பு அஜித்தை மிகவும் கவர்ந்ததால், உடனே படக்குழுவினர்களுக்கு போன் செய்து தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். விரைவில் அந்த சிறுவர்களை அஜித் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


 

வாய்த்துடுக்கால் கிடைத்த படத்தை இழந்த நடிகர்

unnamed1(2)

கே.ராஜாராமன் என்கிற புதியஇயக்குநரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம் வீரா. இந்தப்படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவே படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது. அந்த அறிவிப்பு வந்ததற்குப் பலமான பின்னணிக்காரணம் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் நாயகனாக நடிக்க, பிரபலஇயக்குநரின் தம்பி, தயாரிப்பாளரின் மகன் ஆகிய அடையாளங்களைக் கொண்ட நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்குப் போகிற நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்குள் நடிகரின் வாய்த்துடுக்கு இந்தப்பட வாய்ப்பைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடிகர் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த படம் அண்மையில் தயராகியிருக்கிறது.

அந்தப்படத்தைப் பார்த்தவர்கள், இந்தப்படத்துக்குப் பிறகு நீங்கள் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று சொன்னார்களாம். உடனே சிலிர்த்துக்கொண்ட நடிகர், இந்தப்படத்தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு, ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை மாற்றி எனக்கு அதிகச்சம்பளம் கொடுக்கிற மாதிரி புதுஒப்பந்தம் போடவேண்டும் என்று சொன்னதாகத் தெரிகிறது. அப்படி அவர் கேட்ட தொகை சிலகோடிகள். இதனால் அதிர்ச்சியான தயாரிப்புத்தரப்பு உடனே பாபிசிம்ஹாவைத் தொடர்புகொண்டு கதையைச் சொல்லி அவருக்கும் பிடித்ததால் அவரே நாயகன் என்று அறிவித்துவிட்டார்களாம்.

அந்த அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியான நடிகர், தயாரிப்புத்தரப்பை சமாதானப்படுத்தி மறுபடி ஒரு படவாய்ப்பைப் பெறப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தயாரிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றித் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று பாராட்டிக்கொண்டிருப்பதாகத் தகவல்.[:]