27 ஆண்டுகளாக அத்தியாரில் சேவை புரிந்த தயாராணி ரீச்சர்
அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை கற்பித்து ஆளாக்கிய அனைவரது மதிப்புக்கும் உரிய தயாராணி ஆசிரியர் 01.01.1957 ஆம் ஆண்டு பிறந்தார்.ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை தொடர்ந்தார். பின்னர் 1982.02.17 இல் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.அதன் பின்னர் 1989.04.01 அன்று அத்தியார் இந்துக்கல்லூரியில் கடமைப்பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் 27 ஆண்டுகள் அயாராது உழைத்தார். அத்துடன் ஆசிரியர் ,பகுதித்தலைவர், உப அதிபர் என பல பதவிகளை வகித்தார். இன்னும் ஒரு சில தினங்களில் அவரது சேவை நிறைவுக்கு வருவது அனைத்து அத்தியார் இந்துக்கல்லூரிச்சமூகத்திற்கும் கவலை தருகின்ற விடயமாகும். இன்னும் சில ஆண்டுகள் இவரது சேவைக்காலம் நீடிக்காதா என மாணவர்கள் ஏங்குகின்றனர். எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்களின் ஓயு்வு காலம் சிறப்பாக அமையவும் நீண்டகாலம் நோயின்றி வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகினே்றோம்.(அன்புடன் நீர்வேலி இணையம்)
Best wishes to Thayarani Teacher, all the very best in her retirement.
HI Thayarani, enjoy your retirment with your family, friends and relation, wish you good future life and good newyear starting with easychair
திருமதி. தயாராணி அவர்களின் ஓயு்வு காலம் சிறப்பாக அமையவும் நீண்டகாலம் நோயின்றி வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகினே்றோம்.
you’re staring a new journey and exceptional chapter of your life. may your days be filled with elation and triumph. we thank you for your integrity and dedicated for the services. congratulation on your retirement teacher. god bless u miss.
kajan
teacher
attiar hindu college
All the best and wishes for a happy life.