10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

38 ஆண்டுகளாக சேவை செய்து வரும் சுகந்தினி வைத்தியசாலை

IMG_2645jjjநீர்வேலி  தெற்கு  நீர்வேலியில் 38 ஆண்டுகளாக  சேவை செய்து வரும் சுகந்தினி  வைத்தியசாலை வைத்தியர் குணரத்தினம் விக்கினேஸ்வரன்  அவர்களை நாம்  மறந்து விட முடியாது. எல்லோருக்கும் நன்கு அறிந்தவரும் எல்லோராலும் விரும்பப்படுபவருமான வைத்தியர் குணரத்தினம் விக்கினேஸ்வரன்  அவர்கள்  தனது மென்மையான வைத்தியத்தினால் நீர்வேலி  தெற்கில் மட்டுமல்ல நீர்வேலியின் அனைத்துப் பகுதியிலும் நன்கு அறியப்பட்டவர். ஏழாலையை சொந்த  இடமாகக் கொண்டு 38 வருடங்களாக நாட்டுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நீர்வேலிக்கு வருகை தந்து எமது ஊர் மக்களுக்கு சேவை புரிந்த வைத்தியர் குணரத்தினம்  விக்கினேஸ்வரன் அவர்கள். 1977 ம் ஆண்டு முதன் முதலாக நீர்வேலி பருத்தித்துறை  வீதியில் பீடிக்கம்பனிக்கு முன்பாக உள்ள வீட்டில் தனது சேவையைத் தொடங்கினார். அதன்பின்னர் 1980 ஆண்டு முருகேசு வாத்தியார் வீட்டிலும் 1985 ஆண்டு முதல் தற்போது வரை திரு.சபேசன் அவர்களுடைய வீட்டிலும் மிகக்குறைந்த வசதிகளுடன் எளிமையாக வைத்தியசாலையினை நடாத்திவருகிறார். தொடர்ந்து வரும் காலங்களிலும் இவரது சேவை தொடர  எமது இணையம் வாழ்த்திநிற்கிறது. வைத்தியரின் தொலைபேசி இல 0776630622

IMG_2648

IMG_2650IMG_2647IMG_2646IMG_2645IMG_2646

1 Comment

  1. 38 Years! What can I say? no word will do enough justice for your tireless service to our village for such a long period. Not many people enjoyed the luxury of having a great doctor in-house, I was one of them. Many thanks for all your help over the years, particularly when my dad was seriously ill. We will never forget you.

    ‘It is health that is real wealth and not pieces of gold and silver.’ you have given lots of people good health.

    God Bless You.

Leave A Reply