10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]மாலை வைரவர் ஆலயத்தில் நிகழ்ந்த கௌரவிப்பு நிகழ்வு[:]

[:ta]

21/03/2019 அன்று மாலை வைரவர் ஆலயத்தில் பிரான்ஸ்சில் வசிக்கும் யோ. அனிஸ்வரன், த. சுகறாச், அ. டெலக்ஸ், குகன், கனிஸ்ரன், அவர்களின் நிதிஉதவியில் க. சுபாஸ், த. நிக்சன், க. தனுசன். ஆகியோர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இளைஞர்களினதும் ஆலய நிர்பாகசபையினரதும்  ஆதரவோடு இடம்பெற்ற இன்னிசை இரவு நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வாக  ஆலயச்சூழலில்  வீதி அமைப்பதில் ஏற்ப்பட்ட இடையூறுகள் தடங்கல்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து வெற்றி கரமாக வீதியை அமைத்துக் கொடுத்த வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் திரு தி.நிரோஸ் அவர்களை வரவழைத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் விருந்தினர்களாக வரவளைக்கப்பட்ட வடமாகானசபை ஆளுநரின் மக்கள் தொடர்புச்செயலாளர் திரு செவ்வேல் ஐயா அவர்களையும் கைத்தொழில் அமைச்சின் ஊடகசெயளாளர் திரு மு. நடேசலிங்கம் அவர்களையும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களையும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அவர்களுடன் சேத்து எமது கிராமத்திற்க்காகவும் ஆலயத்திற்காகவும் பெரும்பல பணிகளைஆற்றியவர்களான சமுகசேவகர் திரு சந்திரன் அண்ணா அவர்களுக்கும் சுவர்ணா சனசமூக நிலையத் தலைவர் சுவர்ணன் அவர்களுக்கும் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த திரு க. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


மேலும் எமது ஆலயத்தின் கட்டுமானபணிகள் இடம்பெற்ற காலபகுதியில் இருந்த நிர்வாகசபை உறுப்பினர்களான தலைவர் க. ஹரீந்திரன் செயலாளர் திரு க.கனேசலிங்கம், பொருளாளர் திரு ராமேஸ்ராச்குமார் அவர்களுக்கும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

[:]

0 Comments

Leave A Reply