10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]67 ஆண்டுகளுக்கு முன் நீர்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு -நினைவு மீட்பவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்[:en]65 ஆண்டுகளுக்கு முன் நீர்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு -நினைவு மீட்பவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்[:]

[:ta]

நேற்று  நீர்வேலி சென்றேன்.அங்கு நாற்சார வீடு இருந்த தரை கண்டேன்.சமையலறை இருந்ததைக்கூறும்  ஆட்டுக்கல் ஒற்றையாகிநின்றது. அந்தச்சமையலறையில்  இருந்து  வெள்ளிப் பேணிகளில்  எனக்குத் தேனீர் கொண்டு வந்த பாதையில் நடந்து பார்த்தேன்.என் மச்சி பிறந்ததும் விளையாடியதும் அழுததும் சிணுங்கியதும் அடம்பிடித்ததும் காட்சிகளாக  மனத் திரையில் ஓடின. நாற்சார வீட்டின் திண்ணைகள், திண்ணைகளைக் தாங்கிய சிற்பம் செதுக்கிய நிலைகள். நிலைகளைத் தாங்கிய அசைக்க  இறுகும் தாழ்ப்பாள்க்  கதவுகள்வீடு இருந்த  இடம் வெட்ட வெளியாக. வெற்றிளைக்  கொடிகளும் அவரைப்  பந்தல்களும் போட்டி போட்டு அந்த  வெட்டவெளியை  நிரப்ப முயன்றன.குதிரை வண்டிற் கொட்டகை மட்டும் அழியா ஓவியமாக. தொல்பொருள் சின்னமாக. அதே வளைவுப் படலை, இரட்டைப் படலை. அதே இரணைக் கப்புத் தாங்கும் பதாகை ஒன்று நிறைவாக, மற்றது உடைந்து, புண்ணானது என் நெஞ்சம், குளமாயின என் கண்கள், நெகிழ்ந்தது என் மனம், குமைந்தது என் உள்ளம், உடைந்து சுக்குநூறாகின கற்பனைகள் கனவுகள்.நீர்வேலி கண்டேன், நெஞ்சம் பதைத்தேன். என் இல்லவள் வல்லவளான ஊரல்லவா? என் காதலி கருத்தரித்த கபாடங்களல்லவா? 

 நீண்டு நெடிய பரம்பரையின் தடங்களை உரிமைப் போர் தரைமட்டமாக்கியதே?
 
நெஞ்சைவிட்டு இன்னமும் அகலவில்லை நீர்வேலி.
20573_108943472449572_7385945_a

   மறவன்புலவு க. சச்சிதானந்தன்

65 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு………………………………………………………………

குதிரை கனைத்தது. கொள்ளுக் கேட்டது. குதிரைக்காரன் வந்தான். கொள்ளுக் கலவையைக் கெடுத்தான், புல்லுக் கட்டுகளை முன் வைத்தான்.
 
சின்னத்தம்பி நிக்கிறாயே?
ஓம் நயிந்தை..
ஒருக்கா வண்டிலைக் கட்டுவமே..
எங்கையணை..?
மறவன்புலவுக்கு…
ஓ.. நயிந்தேன்ரை மோளின்றை மச்சாளிட்டை..
ஓமடா.. அங்கைதான்..
எப்பணை வெளிக்கிட..?
காலமைக்கு.. கிழக்கு வெளிக்கேக்கை..
அப்ப அங்கை போய்ச் சேரப் பங்கை வெயிலேறத்தொடங்கும்..
பின்னேரம் திரும்புவம்..
பளிச்சென்ற வெள்ளைச் சேலை. நீண்டகை வெள்ளைச் சட்டை. கையில் பொல்லு. திருமதி துரையப்பாவைக் கைத்தாங்கலாகப் பிடித்து, மிதியில் ஏற்றி, வக்கி வண்டிக்குள் மெத்தை இருக்கையில் விட்டார் அப்பையா சிவயோகம். தானும் ஒரு மிதியில் ஏறி எதிர்ப்பக்க மெத்தை இருக்கையில் இருந்தார்.
 
பனையோலைப் பெட்டி ஒன்றுக்குள் பனங்காய்ப் பணியாரம், மற்றதுக்குள் சீனியரியாரம், மற்றதுக்குள் முறுக்கு. ஒரு இதரை வாழைக்குலை அரைப் பழப் பக்குவத்தில். யாவும் வண்டிக்குள். வக்கியின் பின் கதவை மூடினார் சின்னத்தம்பி.
 
முன் இருக்கையில் சின்னத்தம்பி. பக்கத்தில் சிறுமி இராசேசுவரி. அங்கேதான் இருப்பேன் எனத் தாயிடம் அடம்பிடித்துக் கேட்க, சரி மோனை எனத் தாய் சொல்ல, முன் இருக்கைக்கு வந்தார் இராசேசுவரி. 
 
கடிவாள வார் தொய்யாமல் குறுக்கே நீள்கம்பி. முன்னே குதிரை. வாலைத் தூக்கிப் பேண்டுகொண்டிருந்தது. வண்டியிலிருந்து முன் நீண்ட இரு கைக்கோல்கள் குதிரையின் உடலில் பொருத்திய சேணத்தில் இறுகியிருந்தன. குதிரையின் முகத்தில் படாம் கண்களை மறைத்தது. பல்லிடையில் கொழுக்கிய கப்பியில் கடிவாளம்.
 
கவனம் மோனை. பக்கக் கம்பியைப் பிடி மோனை. இராசேசுவரியைச் சிவயோகம் உசுப்பிக்கொண்டிருந்தார்.
 
அவள் விழாள் நீயேன் யோசிக்கிறாய், சிவயோகத்தின் தாயார் ஆறுதல் கூறினார்.
 
வைர அட்டிகை, சிமிக்கி தொங்கும் வைரத் தோடு, மூக்கில் தொங்கி, கையிருபக்கமும் பொங்கி நின்ற மேற்சட்டை. கொய்யகமாக்கித் தாவணி எறிந்து, இடுப்பைச் சுற்றிய சிபோன் புடைவை. இறுக்கி முடிந்த கொண்டை. முற்றத்தில் கொய்த மல்லிகை மொட்டு மாலை கொண்டையில் வட்டமாக. இவை சிவயோகத்தின் அணி.
 
நடு உச்சி பிரித்து மயிரை வாரி, இறுக்கிப் பின்னிய இரட்டைச் சடை. ஊதா நிற வட்டக் கல் பதக்கம் தாங்கிய மெல்லிய தங்கச் சங்கிலி. காதில் தோட்டில் தொங்கும் சிமிக்கி. மணி மின்னும் குற்றி மூக்கில். நெற்றியில் பெரிய கறுப்புப் பொட்டு. சிவந்த சட்டையில் அழகூட்டும் சரிகைக் கரை. இராசேசுவரியின் தூக்கக் கலக்கத்தை மீறித் தாயார் சிவயோகம் அணிவித்தவை.
 
நாற்சார வீட்டு வாயிலில் குதிரை வண்டி போகக் கூடிய உயர்ந்த இரட்டைப் படலை. படலைக்கு வேலே வளைவு. வளைவுக்கு மேலே கொட்டகை. முன்பக்கத்தில் இருபுறமும் இரட்டைக் கப்புத் தாங்கிய அழகுப் பட்டைகள். 
 
அந்தக் கொட்டகைக்குள் குதிரை வண்டி புறப்படத் தயார் நிலையில்.
neervely06
 
எடு வண்டியை, திருமதி துரையப்பா.நாலு சில்லுகளில் எண்ணெய் வடியும் அச்சில் கொழுக்கிகளைச் சரிபார்த்த சின்னத்தம்பி, மீண்டும் ஒருமுறை வக்கிக் கதவைச் சரிபார்த்த பின்னர், சுருட்டிய திரைகளை இறக்கவா எனக் கேட்கிறார்.
 
என்ன பனியே பெய்யிறது? விடிஞ்சால் வெளிச்சம். திரை சுருட்டியவடியே கிடக்கட்டும் என்கிறார் திருமதி துரையப்பா.
 
ஒரே மிதியில் ஏறி முன் இருக்கையில் இருந்த சின்னத்தம்பி கடிவாள வாரைப் பிடித்து, ஏய் ஏய் எனக் குதிரை முன்னங்காலை எடுத்து வைத்து மெதுவாக வக்கி வண்டியை இழுக்கத் தொடங்கியது. 
 
வாய்க்கால் ஒழுங்கை. வண்டி வலப் பக்கமாகத் திரும்பிச் சற்று நகர்ந்து இடப்பக்கமாகத் திரும்பியது. 
 
மாடுகள். 300-350 மாடுகள். தோட்டத்தில் மேயவிட, தோட்டத்துக்கு எருவாகச் சாணமிட புலரும் அந்த மைமல் பொழுதில், நிலம் தெரியும் இருட்டில், சாய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தனர் சிலர்.
 
வேலிக்கு வேலி முட்டிக் கொண்டு மாடுகள் சென்றதால் வண்டி மெதுவாகவே செல்லவேண்டியிருந்தது. மாடு சாய்க்கிற மைமல் காலையும் பொழுது சாயும் மாலையும் கண்கொள்ளாக் காட்சி. 
neervely03
 
தத்தி நடக்கும் கடும்புகழியப் பால் ஊட்டிய நாள்கன்று, துள்ளித் துவளும் பயமறியா இளங்கன்று, கன்னி கழியா நாகுகள், கால்வீசி வாலைச் சுருட்டும் நாம்பன்கள், மடி நிறைந்த இளம் பசுக்கள், ஏறும் எருதுகள், கொம்பிகள் புள்ளியன்கள், வெள்ளைகள், சிவப்பிகள், தட்டியும் தழுவியும் முட்டியும் மோதியும் வாய்க்கால் ஒழுங்கைக்குள் பட்டிப் பசுக்கள் எருதுகளுடன் கடலாக மிதந்தன.
(நன்றி மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களே )

[:en]

[:]

1 Comment

  1. Parthipan says: - reply

    wonderful article…loved the old good feelings!

Leave A Reply