10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]7 பரம்பரைக்கு பாவம் துரத்தும் ………[:]

[:ta]தற்போது பல உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் போது பணம் சம்பாதிக்கும் குறுகிய எண்ணங்களுடனே உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. இதன்போது எந்தவித சமூக அக்கறையை கருத்தில் எடுப்பது கிடையாது. இவ்வாறு பல இடங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்திசெய்யும்போது நடைபெறும் பொதுவான செயற்பாடுகளைக் கேள்விப்படும்போது எமது எதிர்காலமும் கேள்விக்குறிதான்…
உதாரணமாக சில உணவகங்களில் மதிய உணவான சோறு சமைக்கும்போது பாக்கு போட்டு அரிசியை அவியவைப்பார்கள். கேட்டால் கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டதுபோல இருக்குமாம். அதிக அரிசியும் போடத்தேவையில்லையாம் என்பார்கள். இப்படி ஒவ்வொரு உணவு தயாரிப்பிலும் மிச்சம் பிடிப்பதற்காக பல முறைகளை திருட்டுத்தனமாகக் கையாழ்வார்கள்.
இதேபோல அண்மைய நாட்களில் பொரியல் வகைகள் அதாவது மரவள்ளிப்பொரியல் வகைகள் தயாரிக்கும்போது கொதிக்கும் எண்ணெயில் பொரியலைப்போடுவதற்கு முன்னமாக 2 அல்லது 3 பிளாஸ்ரிக் பெப்சி சோடா போத்தல்களைப் போட்டு அது இறுதிமட்டும் எண்ணெயில் உருகவிடுகிறார்களாம். பின்னா்தானாம் பொரியலைப்போட்டு பொரிக்கிறார்களாம். இவ்வாறு பல இடங்களில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கேட்டால் பொரியல் சைனிங் ஆகவும், அதிக நாட்களுக்கு பழுதடையாமல் வடிவாகவும் இருக்குமாம்.
ஏன் பெரிய உற்பத்திப் பொருட்களிலும் அதாவது அன்றாடம் சிறுவர் முதல் பெரியோர்வரை உண்ணும் பிஸ்கற் வகைகள் தயாரிக்கும்போதும் இவ்வாறான பிளாஸ்ரிக் ரெக்னிக் திருட்டுத்தனமாக இடம்பெறுகிறது.
இதேபோல் ஒருமுறை பொரிப்பதற்காக சூடாக்கப்படும் எண்ணெயை ஒருமுறை மட்டும்தான் பாவிக்கவேண்டும். உதாணமாக முதல்நாள் றோல் பொரிப்பதற்காக அல்லது வடை அல்லது மீன் வகைகள் பொரிப்பதற்காக கொதிக்கவைத்த எண்ணெயை மறுநாளும் திரும்பவும் கொதிக்கவைத்து உருவாக்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடுவதால் நிச்சயமாக கான்சர் போன்ற அபாய நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கும் உணவு வகைகளை இலகுவாக இனங்கான முடியும். அதாவது றோல் என்றால் கறுப்பு கறுப்பாக புள்ளிப் புள்ளியாக இருப்பதைக் காணலாம். காரணம் முதல்நாள் கொதிக்க வைக்கும்போது எண்ணெயில் கொட்டுப்பட்ட மா தூள் மறுபடியும் கொதிக்க வைக்கும்போது கறுப்பாக படியும்.
இதைவிட ஒருமுறை பருத்தித்துறைப் பகுதிக்குச் சென்றிருந்தபோது கருவாடு மலிவு வாங்கிப்போங்கள் என்றார்கள். நானும் வாங்கலாம் என்றுவிட்டு விற்கின்ற வீடுகளிற்கு சென்று பார்த்தேன். அப்போது ஒரு இடத்தில் பெரிய பரலில் தோய்த்து தோய்த்து பெரிய கருவாடுகளை வெய்யிலில் வைப்பதைக் கண்டேன். என்ன செய்து காய வைக்கிறீர்கள் என்றேன்?? முதல் சற்றுத் தயங்கிவிட்டு அது கனநாட்கள் வைத்திருந்துவிட்டோம் பங்கஸ் பிடித்துவிட்டது அதுதான் பெற்றோலில ஊறவைச்சு காயவிட்டால் பங்கசும் இருக்காது, பெற்றோலும் ஆவியாகிடும் என்றார். அப்ப பெற்றோல் மணக்காதா என்றபோது??? இல்லை ஆவியாகிடும்தானே பிறகு ஏன் மணக்குது என்றார்… அத்துடன் இதை யாருக்கும் சொல்லிப் போடாதேங்கோ தம்பி… உங்களுக்கு தாறது புதிது பயப்படாம வாங்குங்கோ என்றார்…
இதேபோல்தான் மரக்கறி, பழ வகைகள் உற்பத்தி செய்யப்படும் போதும் அதிக விளைச்சலைக் கருத்தில்கொண்டு அதிக கிருமி நாசினி மருந்துகளைப் பிரயோகித்து பெரிதாக வரவைத்து சந்தைப்படுத்துகின்றார்கள். இது பார்ப்பதற்கு வடிவாகவும், பெரிதாகவும் இருப்பது விற்பதற்கும் இலகுவாக இருக்கின்றது… உடலில் நோய்களை வர வைப்பதற்கும் இலகுவானது…
இவ்வாறு பொருட்களை திருட்டுத்தனாக உற்பத்தி செய்வது இலகுவானது ஆனால் மனிதன் பல கஸ்டங்களைச் சந்தித்து உழைப்பது வயிற்றுப் பசிக்கான உணவிற்குத்தான் இந்த உணவில் விசத்தை வைப்பது 7 பரம்பரைக்கு பாவம் துரத்தும் என்று முன்னோர்கள் கூறுவது நினைவிருக்கு…. அத்துடன் இதனைப் பரிசோதிக்க வேண்டிய, மேற் பார்வை செய்யவேண்டிய சுகாதார பரிசோதக உத்தியோகத்தார்கள் சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருப்பதும் மனித உயிர்களுக்குச் செய்யும் பாரிய குற்றமாகும்…

-மஹாதேவன் நடனதேவன்[:]

0 Comments

Leave A Reply