10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

காலத்தால் அழியாதவை

நீர்வேலி வயல்களில் நெல் விதைத்தவர்களின் அவல நிலை

மேலும் வாசிக்க

நீர்வேலி கந்தசாமி கோயில் தைப்பூச மஞ்சம்

28.01.2021

நீர்வேலி தெற்கு மக்களால் விதானையார் அவர்களுக்கு கௌரவிப்பு

நீர்வேலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறும் மதிப்புக்குரிய கிராம சேவையாளர் திரு.கணபதிப்பிளளை உபேந்திரன் அவர்களுக்கு 09.01.2021 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஸ்ரீ சப்பிரமணிய சனசமூகத்தில் நிலையத்தலைவர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையில் சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும் நடைபெற்றது. எங்கள் ஊரிற்கு வெளி இடங்களில் இருந்து சேவை செய்ய வந்து நீர்வேலி மக்களுக்கு உயரிய சேவையினை ஆற்றிவரும் அற்றிய அன்பர்களுக்கு நீர்வேலி மக்களின் நன்றியுணர்வும் அவர்களுக்கு மக்களால் வழங்கப்படுகின்ற கௌரவமும் விழாக்களும் அது விசேடமாக நீர்வேலி மக்களுக்கே உரிய உயரிய பண்பு ஆகும். அந்த வகையில் மதிப்புக்குரிய கிராமசேவையாளர் அவர்களுக்கு நீர்வேலி ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் அவ்விடத்து இளைஞர்களும் வழங்கிய பாராட்டு மிகச்சிறப்பாக செய்யப்பட்டதொன்றாகும். வாழ்த்துக்கள் இளைஞர்களே. நிலையத்தலைவர் அவர்களே தொடரட்டும் உங்கள் பணி மேலும் வாசிக்க

நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் -வாழ்க வளமுடன்

நீர்வேலி தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் கடந்த சில வருடங்களாக கடமையாற்றி 04.01.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வு பெறும் மதிப்புக்குரிய திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்களை நீர்வேலி தெற்கு மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம். திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் நீர்வேலி தெற்கு மக்களிற்கு தனது உயரிய சேவையை ஆற்றியிருந்தார். மக்களின் மனங்களிலும் என்றும் நீங்கா இடத்தினை திரு. உபேந்திரன் கணபதிப்பிள்ளை அவர்கள் பெற்றிருந்தார். அவருடைய ஓய்வு காலம் சிறப்பாக அமையவும் தனது குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றோம். மேலும் வாசிக்க

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் புதிய அதிபராக திரிகரன்

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் புதிய அதிபராக 11.01.2021 தொடக்கம் செயற்படுமாறு நீர்வேலியைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி திரிகரன் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.திரிகரன் நீர்வேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். சோமஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர். விஞ்ஞானத்துறைப் பட்டதாரி. கணித ஆசிரியராக வலிகாமம் கிழக்கில் புகழ்க்கொடி நாட்டியவர். அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்தவர் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் பிரதி அதிபர் – ஊரெழு ஸ்ரீ கணேச வித்தியாலய அதிபர் – அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் என அவர் சேவையாற்றிய நிலையங்களில் தனது திறன் மிக்க சேவையால் புகழ் ஈட்டியிருக்கிறார்.அதிபர் திரு.சி.திரிகரன் அவர்களுக்கு  எமது இணையம் வாழ்த்துக்களை மேலும் வாசிக்க

மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது

மூல நட்சத்திரம்!
‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பது உண்மையா?
இந்தப் பதிவில் மூலம் எனும் மகா உன்னதமான நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.
இந்த நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 19 வது நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் தனுசு எனும் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ராசியில் இடம்பெற்றிருக்கும்.
மூல நட்சத்திரம் அனைத்திற்கும் மூலமாக விளங்கக் கூடியது. உங்கள் பரம்பரைப் பாரம்பரியம் 14 தலைமுறைக்கு நீடிக்குமா என்பது குறித்து உங்களுக்குக் தெரியுமா?
எளிமையான வழி உண்டு. உங்கள் குடும்பத்தில் மூல நட்சத்திரத்தில் ஒரு குழந்தை… ஒரேயொரு குழந்தை பிறந்திருந்தாலும் … ’என் பரம்பரை 14 தலைமுறைக்கும் நீடிக்கும்’ என்று உறுதியாகச் சொல்லலாம். உங்கள் 14 தலைமுறையைக் காணும் பரம்பரையாக உங்கள் குடும்பம் இருக்கும் என்பது சத்தியம்.
மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்கிறார்களே…
எனவே மூலம் நட்சத்திரத்தைக்கொண்டிருக்கும் பெண்ணை நிராகரிப்பது என்பது இன்னும் தொடர்கிறது. இந்த கிறுக்குத்தனம் இப்போது ஆண்களுக்கு மூலம் நட்சத்திரம் என்றாலும் வேண்டாமென நிராகரிக்கத் தொடங்கி வளர்ந்திருக்கிறது.

மேலும் வாசிக்க

நீர்வேலியில் இப்படியும் ஒரு பாதிப்பு

நீர்வேலியின் கிழக்குப்பகுதியான பன்னாலையில் (நீர்வேலிச்சந்தியில் இருந்து கிழக்குப்பக்கமாக செல்லும் வீதி) அண்மையில் பெய்த மழைகளால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.மழையின் போது பாதுகாப்பாக இருப்பதற்கு எந்தவிதமான வசதியுமற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியைச் சேர்ந்த வசதிபடைத்தவர்கள் பன்னாலைப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒருவர் அல்லது சிலர் இணைந்து சிறிய வீடு ஒன்றினை அமைத்துக் கொடுக்கவேண்டும்.முடிந்தால் இதனை நீர்வேலியைச் சேர்ந்த அனைவருக்கும் பகிருங்கள்.இது இணையத்தின் நேரடி அவதானிப்பின் மூலமும் அவர்களுடன் பேட்டி கண்ட பின்னர் பெறப்பட்ட தகவல்கள் ஆகும். மேலும் வாசிக்க