‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.
பொன்னுருக்கல்
பொண்ணுருக்கு வைபவம் என்பது தமிழர்களின் இந்துத் திருமண ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. திருமாங்கல்யம் (தாலி) செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே பொன்னுருக்கல் எனப்படும்.
நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லர் திருமாங்கல்யம் செய்வது மிக சிறந்த முறையில் வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு.
மண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
தாலி செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் உருக்குவது வழக்கமாகும். பொன்னுருக்கும் ஆச்சரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார்.
ஆச்சரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்கு கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதை காண்பிக்க வேண்டும்.
அந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
பொன்னுருக்கிய தங்கத்தை தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் அல்லது பந்தக்கால் ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.
இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
கன்னிக்கால் ஊன்றல் தொகு
இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல்லது கன்னிக்கால் ஊன்றவேண்டும். அதற்கு இப்போது கலியாண முள்முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டவேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளரவேண்டும் என்று நினைத்து கும்பத்தண்ணீரை ஊற்றலாம்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்யவேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)
முளைப்பாலிகை போடல்
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்கவேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.
நவதானியம் ஆவன நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.
பந்தல் அமைத்தல்
பந்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக்கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறைவழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.
வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்டவேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.
1 விநாயகர்
2 ஓமகுண்டம்
3 அரசாணி
8 சந்திர கும்பம்
9 அம்மி
10 7 ஈசானமூலை – சுவாமி அம்பாள்
11 மஞ்சள் பாத்திரம் – மோதிரம் போட்டெடுத்தல்
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும் (4, 5, 6, 7) சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.
குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.
மணமகன் அழைப்பு
திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறைவைக்கவேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண்வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.
கடுக்கண் பூணல்
முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகிவிட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.
தலைப்பாகை வைத்தல் தொகு
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்கவேண்டும். உத்தரியம் அணியவேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்டவேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதேபோல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப்பக்கமாக நிற்பார்.
மணமகன் புறப்படுதல்
வீட்டைவிட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடைமுறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்தவேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்கவேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும்போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.
பலகாரத் தட்டம்
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.
தேங்காய்த் தட்டம்
தேங்காய்த் தட்டம்
3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.
கூறைத்தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டைமாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்கவேண்டும்.
பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
பெண் புறப்படுதல்
பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். மணப்பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.
அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண்வீட்டார் மேளதாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).
மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.
கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.
பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.
அரசாணிக்கல்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.
அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமையவேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)
இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)
காப்புக்கட்டல்
தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.
மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.
தாலி கட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.
தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து (9, 11, ….) என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்யவேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.
மாலை மாற்றுதல்
மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.
தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள். மாலை மாற்றுதல் என்பதில் தாய் மாமன் பெறும் மரியாதை மிக முக்கியம். சில இனங்களை கானும் போது தாய் மாமன் தான் மனமக்களை தூக்கி மாலை மாற்ற செய்ய வேண்டும்.
பால்பழம் கொடுத்தல்
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிகளுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.
கோதரிசனம்
இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.
பாணிக்கரம் (கைப்பிடித்தல்)
தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவும் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் சேர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.
ஏழடி நடத்தல்
பெண்ணின் வல காலை மணமகள் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.
உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்
விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்
பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.
உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரானோம். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும். இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.
அம்மி மிதித்தல்
பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அருந்ததி பார்த்தல்
மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.
“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கேயாகும்.
அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும்.
பொரியிடல்
அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.
மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.
அக்கினி பகவானிடம் செர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.
அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.
ஆசிர்வாதம்
மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.
அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்
நிறைவு
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.
ஆரத்தி
இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன.
விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.
பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.
சில தத்துவங்கள்
தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.
திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?
முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
ஆரத்தி
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.
ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).
மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
திருமணத்தில் அறுகரிசி இடும்முறை தொகு
இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).
நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச் சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.
+2
Langes Tharmalingam and 6 others
9 Shares
Like

 

Comment
Share
Comments

 

 

Kaveri Rajashivam

  shared a memory.

 

2 Years Ago

 

 

Congratulations to my Son Malan for graduating from Sound Engineering, I am truly happy about his accomplishment!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Bala Arunasalam, Selvaratnam Suthan and 19 others

 

14 Comments

 

 

Like

 

 

 

Comment

 

 

Comments

 

View previous comments

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

+4

 

 

 

 

 

Nanthu Sharanka, Vishali Sri and 84 others

 

31 Comments

 

 

Like

 

 

 

Comment

 

Share

 

Comments

 

View previous comments
 •  

   

   

  Happy birthday bro God bless you 🎂🎂🎂

   

  •  

   Like

    

    

    

   

 • Reply
 • 3h
View 3 more comments

 

 

 

 

 

Remove viruses and bacteria & keep your home safe with the Best Air Conditioners!

Shop now at http://bit.ly/MysoftlogicAirConditioners

& get these delivered right to your doorstep.

Quick delivery within 3-5 working days 🚚📦
AC Installation Process
– Isolated areas, the installation will be carried out after it is lifted

-…

See More

 

 

 

[FB-Employee-Only] FAM is developing this carousel unit now.

 •  

  Image

   

   

  12000 BTU Twin Cool AC

   

  Rs.114,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  9000 BTU Wall Mounted AC

   

  Rs.93,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  10000 BTU Aero Series AC

   

  Rs.139,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  13000BTU Aero Series AC

   

  Rs.154,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  18000 BTU Twin Cool AC

   

  Rs.144,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  Starting from Rs.81,590/-

   

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  24000 BTU Aero Series AC

   

  Rs.259,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

   

  18000 BTU Aero Series AC

   

  Rs.214,990/-

   

  Shop Now

   

   

 •  

  Image

   

  See more at
  MYSOFTLOGIC.LK

   

 

 

 

58

 

1 Comment

 

3 Shares

 

 

 

Like

 

 

 

Comment

 

Share

 

 

 

 

 

 

 

நம்ம எப்பவும் சிரிச்சிக்கிட்டே தானா இருக்கம்

 

 

Image may contain: 3 people, including Sanjeeban Raan

 

 

 

 

 

 

Krish Âis, Nithan Sharma and 88 others

 

13 Comments

 

 

Like

 

 

 

Comment

 

Share

 

Comments

 

View previous comments