newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

காலத்தால் அழியாதவை

பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை புனரமைத்தல்

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி அருகாமையில் உள்ள பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை புனரமைக்கப்பட்டு வருகின்றது.கௌரவ அங்கஜன் இராமநாதனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை தார் இடப்படும் பணி இடம்பெற்றுவருகின்றது. மேலும் வாசிக்க

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியில் சி.க.கூ.சங்கம் திறப்பு

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் முன்றலில்  துர்க்கா சி்க்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகம் 24.06.2020 பதன்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

நீர்வேலி வடக்கு செல்லக்கதிர்காம முருகனின் மஹோத்ஸவம்

நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகனின் மஹோத்ஸவம் எதிர்வரும் 24.06.2020 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய, சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வேதாகமோக்த பிரகாரம் இவ்விழா நிகழவுள்ளது.

உலகெங்கும் வாழும் நீர்வை கதிர்காமத்து இறைவனின் அடியார்கள் தாம் வாழும் இடங்களிலிருந்தே இச்சமயத்தில் இணைந்து பிரார்த்தனை, வழிபாடுகளை ஆற்றி கலியுக வரதனாகிய கதிர்காம பெருமானின் பெருங்கருணையை பெறுக!

ஊரில் வசிக்கும் அன்பர்கள் குறித்த நாட்களில் கலந்து கொண்டு வழிபாடாற்றி இறைவன் முருகன் திருவருள் பெற அழைக்கிறோம்.
மேலும் வாசிக்க

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு உதவி

06.07.2020 அன்று பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையை கருத்தில் கொண்டு கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்களின் சுகாதார மேம்பாட்டிற்கு இலண்டனில் வதியும்  பாடசாலையின் பழைய மாணவி நந்தகோபன் சிவப்பிரியா  ஆறாயிரம் ரூபா (6000) பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளார். அவருக்கு பாடசாலைச்சமூகம் சார்பில் நன்றிகள் தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

நீர்வேலி கந்தனில் ஸ்கந்த மஹாத்மிய மஹா ஹோமமும்

ஸ்கந்த சப்தசதி (ஸ்கந்த மஹாத்மியம்) நூல் வெளியீடும்
இடம்: நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம்

காலம: 26.06.2020 வெள்ளிக்கிழமை – குமாரஷஷ்டித்திருநாள்
காலை : 7.00 மணி முதல் பகல்  1.00 மணி வரை

கொரோனா முதலிய நோய்களும் இயற்கை அனர்த்தங்களும் அரசியல்
பொருளாதார நெருககடிகளும் நீங்கி அகில உலக மக்களும் சாந்தியுடன்  சுபிட்சமாக
வாழ வேண்டி யாழ்ப்பாணத்தின் பிரபல கந்தன் ஆலயங்களின் சிவாச்சாரிய
பெருந்தகைகள் கலநதுகொண்டு கலியுக வரதன் கந்தப் பெருமானுக்குரிய அபூர்வ
ஹோமம் ஆகிய ஸ்கந்த மஹாத்மிய ஹோமத்தை பக்திபூர்வமாக (இலங்கையில்முதன்
முதலில்) நடத்திவைக்க இருக்கிறார்கள் . தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ  இராஜேந்திர
சுவாமிநாத குருக்கள் தலைமையில் நடைபெறும்

மேலும் வாசிக்க

நீர்வேலி வடக்கு குறுக்கு வீதி வேலைகள் ஆரம்பம்

நீண்டகாலமாக புனரமைக்கப்பட்டாமல் இருந்த நீர்வேலி குறுக்கு வீதி (Neervely Cross Road) இன் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆட்சியில் செயற்படுத்தப்பட்ட ஐ றோட் திட்டத்தில் இந்த வீதி புனரமைக்கப்பட இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ் வீதியானது நீர்வேலி சந்தியில் இருந்து அச்செழு மூன்று சந்தி இணையும் 4.33 கி.மீற்றர் வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இதனை china state engineering corporation இனால் புனரமைப்பு வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டமையடுத்து மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க

நீர்வேலி அத்தியார் பாடசாலைக்கு அருகில் விபத்து

தீ அணைப்பு வாகனம் விபத்து; ஒருவர் பலி. இருவர் படுகாயம்..

கடும் வேகத்தில் சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மூன்றுமுறை குத்துக்கரணம் அடித்து அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவலம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் சற்று முன்னர் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ அணைப்பு வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க