10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

காலத்தால் அழியாதவை

நீர்வைக்கந்தன் இளைஞர்களை பாராட்டுங்கள்

நீர்வைக்கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா பலத்த  கொரணா தொடர்பான சிக்கல்களுக்கு  மத்தியில்  முருகனின் திருவருளால் சிறப்பாக நடைபெற்று இன்றுடன் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகின்றது. இதற்கு பலருடைய ஒத்துழைப்புக்கள் காரணமாக இருக்கின்றன. ஆனாலும் நீர்வைக்கந்தன் இளைஞர்கள் மின்குமிழ்களால் ஆலயச் சுற்றாடலை அழகுபடுத்திய விதம் அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னுள்ள வருடங்களில் செய்தவற்றை விட இந்த ஆண்டு திருவிழாவினையொட்டி இளைஞர்கள் மேற்கொண்ட மின்குமிழ் அலங்கரிப்பு பிரமிக்க வைக்கின்றது. இந்த சேவையில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துவதுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எங்கள் நீர்வேலி தொடர்பாக ஏனைய ஊரவர்களின் பார்வையில் நீர்வைக்கந்தனின் திருவிழா தொடர்பாக உயர்ந்த மரியாதையினை ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. மேலும் வாசிக்க

பாலர் பகல்விடுதியில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்

நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் 26.04.2021 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய தலைவராக அச்செழு சைவப்பிரகாச வித்தியால அதிபர் திரு. வேலுப்பிள்ளை குணசீலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்வாழ்த்துக்கள் திரு குணசீலன் சேர் அவர்களே . இதுவரை காலமும் தலைவராக இருந்து பாலர் பகர்விடுதியினை புதிய நிலைக்கு கொண்டு  சென்றவர் திரு.செ.பத்மநாதன்  அவர்கள். இலண்டனில் உள்ள  நலன்புரிச்சங்கம் 27 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவிதமான பொதுக்கூட்டமோ உறுப்பினர்கள் மாற்றமோ செய்யாமல் இயங்குவது போல் அல்லாமல் பாலர்பகல்விடுதி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  உறுப்பினர்கள் மாற்றம் என ஜனநாயக செயற்பாடுகள் உயர்ந்த தரத்தில் பேணிவரப்பட்டன. அத்துடன்  அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்து அவசியமான செலவுகளை வினைத்திறனுடன் செய்து வங்கி நிலுவையினையும்  பாலர்பகல்நிலைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு  இட்டு அதிகமான வளங்களை பெருக்கியும்  மாணவர்கள் தொகையினை தொடர்ந்தும் அதிகமாக பேணியும் வந்துள்ளார். திரு.பத்மநாதன் அவர்கள் பொறுப்பேற்ற போது வங்கி நிலுவையானது முன்னைய நிர்வாகத்தினால் பூச்சிய நிலுவையில் வழங்கப்பட்டமை குறிப்பித்தக்கது.  எனவே இக்கால இளைஞர்கள் பாலர்பகல்விடுதியினுடைய சொத்துக்களை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் மேலும் அதிகரித்து வளம்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும்.  எனவே புதிய நிர்வாகம் பாலர்பகல்விடுதியினை  மேலும் வளர்க்க வேண்டியது அவர்களது கட்டாயமாகும். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் மேலும் வாசிக்க

தேர்த்திருவிழா நேரலைக்கு உதவி புரிந்தோர்

26.04.2021 அன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவினை நேரலையாக எமது இணையம் செய்தமை யாவரும் அறிந்ததே. அதற்கான செலவு 15 000 ரூபாய் ஆகும். இலண்டனில் வதியும் திரு.சாந்தன் அவர்கள் 5000 ரூபாயும் கனடாவில் வதியும் திருமதி காவேரி இராஜசிவம் அவர்கள் 5000 ரூபாயும் இணையத்தின் பங்களிப்பாக 5000 ரூபாயும் அன்பளிப்புச் செய்திருந்தனர்.  எமது நீர்வேலி உறவுகள் கொரணா நிலமை காரணமாக நீர்வேலிக்கு வருகை தர முடியாமல் தவித்திருக்கும் வேளையில் அந்த நேரடி ஒளிபரப்பு அவர்கள் ஏக்கத்தினை ஒரளவு நிவர்த்தி செய்திருக்கும் என நம்புகின்றோம். அந்தவகையில் நேரலைக்கு உதவி செய்தவர்கள் நன்றிக்குரியவர்கள்

நீா்வேலி கந்தசுவாமி ஆலயம் தோ்த்திருவிழா 2021 -நேரலை காலை 5.30 மணியில் இருந்து

ஆறுமுகசாமி தேர்த்திருவிழாவிற்காக உலாவரும் காட்சி

மஞ்சத்திருவிழா -முழுமையான காணெளி -Capital fm

நீர்வைக்கந்தன் ஆலயம்-மஞ்சத்திருவிழா நேரலை

18.4.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியில் இருந்து ஒளிபரப்பாகும்.