10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

காலத்தால் அழியாதவை

நீர்வைக்கந்தன் ஆலய வெளிவீதிக்கு மின்குமிழ் அன்பளிப்பு

நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறும் இக்காலத்தில் ஆலயத்தின் வெளிவீதியில் உள்ள மின்கம்பங்களில் LED தரத்திலான மின்குமிழ்கள் 13 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 123 000 ரூபா நிதி செலவிட்டு இரவுத்திருவிழாவினை சிறப்புற நிகழ  தனது பங்களிப்பினை இலண்டனில் வதியும் நீர்வேலி தெற்கினைச் சேர்ந்த  திரு. பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்கள்   செய்துள்ளார். கடந்த சில வருடங்களிற்கு முன்பு  மேற்படி மின்கம்பங்களினையும்  அதற்குரிய மின்குமிழ்களினையும் அமைத்துக் கொடுத்ததோடு குறித்த கால பாவனையின் பின்னர் தற்போது  LED தரத்திலான மின்குமிழ்கள் 13 இனை மாற்றம் செய்துள்ளார். அத்துடன் அத்தியார் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பரிசில் வழங்க 40 000 ரூபா நிதியினையும் வழங்கியிருந்தார். நீர்வேலியின் கல்வி மற்றும் ஆலய வளர்ச்சியில் பங்களிப்பாற்றி வரும் திரு. பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்களை எமது நீர்வேலி இணையம் நன்றியுடன் பாராட்டுகின்றது.

மேலும் வாசிக்க

கொடியேற்றத்திருவிழா -காணொளி (நன்றி fm)

நீர்வைக்கந்தனுக்கு நாளை கொடியேற்றம்

நீர்வைக்கந்தனுக்கு நாளை  9.4.2021 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்திருவிழா நடைபெறவுள்ளது. கொரணாவில் இருந்து உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி  கோவிலுக்கு மாஸ்க் அணிந்து வருமாறும் சமூக இடைவெளிகளை பேணுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது மேலும் வாசிக்க

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கண்காட்சியும் விற்பனையும்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு
கூட்டுறவச் சங்கம் இணைந்து நாடாத்து கண்காட்சியும் விற்பனையும்
இடம் – வலிகிழக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் தலைமை காரியலய 3/3 மண்டபம்- நீர்வேலி
காலம்- 05.04.2021 – 13.04.2021 ( தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை)
பெறக்கூடிய பொருட்கள்
வலிகிழக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் உற்பத்தி பொருட்கள்
பனை தென்னை வள அ.கூ.ச உற்பத்தி பொருட்கள்
கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கம் உற்பத்தி பொருட்கள்
சித்த மருத்துவ கூட்டுறவுச்சங்கம் உற்பத்தி
பொருட்கள் வாழைக்குலை சங்க உற்பத்தி பொருட்கள்
புடவை நெசவாளர் கூட்டுறவுச்சங்கம் உற்பத்தி பொருட்கள்
தோல் பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கம் உற்பத்தி பொருட்கள்

மேலும் வாசிக்க

எமது நீர்வேலி இணையத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தந்த வள்ளல்

எமது நீர்வேலி இணையத்திற்கு ஆரம்பகாலம் முதல் தற்போது இறக்கும் வரை மிகப்பெரிய ஆதரவாளராக காணப்பட்டு எங்களை ஊக்கப்படுத்தி வந்த திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டு சென்றமை பெருந்துயரமாகும். இலண்டனிலும் கனடாவிலும் உள்ள ஒரு சில மனநோய் பிடித்தவர்கள்   மதுபோதையிலும்  எம் இணையத்தளத்தினை பற்றியும் இதனை இயக்குபவர் பற்றியும்   அவதூறுகளை சதா எந்நேரமும் பரப்பி வரும் நிலையில் அமரர் சி.கணபதிப்பி்ளை போன்ற ஒரு சில உத்தமர்கள் யாருடைய பொய் வதந்திகளையும் நம்பாமல்  எம்மை இயக்கி வருகின்றார்களில் அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்கள்  ஒருவர். அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்களுடைய இழப்பு எங்களுக்கு ஈடுசெய்யமுடியாதது. இன்னொருவரால் அமரர் சி.கணபதிப்பி்ளை அவர்களுடைய இடத்தினை ஈடுசெய்யமுடியாது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையவேண்டும் எனவும் நீர்வைக்கந்தனிடம் சரணாகதியடையவேண்டுமெனவும் இறைவனை வேண்டுகின்றோம். மேலும் வாசிக்க

இராசுக்குருக்களை அறியாதோர் இலர்

நீர்வேலி இராஜேந்திரக்குருக்கள் என்ற இராசுக்குருக்களை அறியாதோர் இலர். வலிகாமம் கிழக்கில் நீர்வேலியில் வாழ்ந்த குருக்களை யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் வாழ்ந்த சைவமக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
இவ்வளவுக்கும் அவர் தம்மை ஒரு அமைப்பினூடாக அடையாளப்படுத்திக் கொண்டவரல்ல. பெரிய பதவிகளை வகித்தவருமல்ல.
ஈழத்தின் முக்கிய தலங்களின் கும்பாபிஷேக குருவாக திகழ்ந்தவருமல்ல. எளிமையின் வடிவமாக திகழ்ந்த ஒருவர். எனினும், அவர் மிகப்பிரபலம் பெற்று திகழ்ந்தார்.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரிடம் பல்வகை ஆலோசனைகளையும் பெறுவதற்காக நாடினார்கள். பல ஊர்களுக்கும் அழைத்து பயன்பெற்றார்கள்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்திப்பது மிகப் பொருத்தமானது. நெடிதுயர்ந்த தோற்றம் கொண்ட குருக்கள் ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர். மிக எளிமையானவர். அவரிடம் பல்துறை ஆற்றல் இருந்தது.

மேலும் வாசிக்க

மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது

மூல நட்சத்திரம்!
‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பது உண்மையா?
இந்தப் பதிவில் மூலம் எனும் மகா உன்னதமான நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.
இந்த நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 19 வது நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் தனுசு எனும் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ராசியில் இடம்பெற்றிருக்கும்.
மூல நட்சத்திரம் அனைத்திற்கும் மூலமாக விளங்கக் கூடியது. உங்கள் பரம்பரைப் பாரம்பரியம் 14 தலைமுறைக்கு நீடிக்குமா என்பது குறித்து உங்களுக்குக் தெரியுமா?
எளிமையான வழி உண்டு. உங்கள் குடும்பத்தில் மூல நட்சத்திரத்தில் ஒரு குழந்தை… ஒரேயொரு குழந்தை பிறந்திருந்தாலும் … ’என் பரம்பரை 14 தலைமுறைக்கும் நீடிக்கும்’ என்று உறுதியாகச் சொல்லலாம். உங்கள் 14 தலைமுறையைக் காணும் பரம்பரையாக உங்கள் குடும்பம் இருக்கும் என்பது சத்தியம்.
மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்கிறார்களே…
எனவே மூலம் நட்சத்திரத்தைக்கொண்டிருக்கும் பெண்ணை நிராகரிப்பது என்பது இன்னும் தொடர்கிறது. இந்த கிறுக்குத்தனம் இப்போது ஆண்களுக்கு மூலம் நட்சத்திரம் என்றாலும் வேண்டாமென நிராகரிக்கத் தொடங்கி வளர்ந்திருக்கிறது.

மேலும் வாசிக்க