10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

காலத்தால் அழியாதவை

நீர்வேலியில் இப்படியும் ஒரு பாதிப்பு

நீர்வேலியின் கிழக்குப்பகுதியான பன்னாலையில் (நீர்வேலிச்சந்தியில் இருந்து கிழக்குப்பக்கமாக செல்லும் வீதி) அண்மையில் பெய்த மழைகளால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.மழையின் போது பாதுகாப்பாக இருப்பதற்கு எந்தவிதமான வசதியுமற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியைச் சேர்ந்த வசதிபடைத்தவர்கள் பன்னாலைப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒருவர் அல்லது சிலர் இணைந்து சிறிய வீடு ஒன்றினை அமைத்துக் கொடுக்கவேண்டும்.முடிந்தால் இதனை நீர்வேலியைச் சேர்ந்த அனைவருக்கும் பகிருங்கள்.இது இணையத்தின் நேரடி அவதானிப்பின் மூலமும் அவர்களுடன் பேட்டி கண்ட பின்னர் பெறப்பட்ட தகவல்கள் ஆகும். மேலும் வாசிக்க

நடனக்கலை வித்தகிக்கு வாழ்த்துக்கள்

“பொன்சக்திகலாகேந்திரா” முதல்வரும் நடனத்துறையின் சிறந்த நடனவித்தகர்
” கலைமாமணி ” திருமதி சத்தியப்பிரியா கயேந்திரன் அவர்கள்
யாழ் பல்கலைக்கழக நடனத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளமை மிகவும் பெருமகிழ்வுக்குரியதாகும். கோவையூருக்கும் நீர்வையூருக்கும் பெருமை தருவதுடன் தனது கலைப்பயணத்தில் கலைத்துறைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து முதன்மைபடுத்தி வருவதுடன் மாணவர்கள் பலரை உருவாக்கி கலைத்துறையினை வளர்த்து வரும் எங்கள் குரு திருமதி சத்தியப்பிரியா கயேந்திரன் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நல்வாழ்த்துகள் மேலும் வாசிக்க

குருக்கள் ஐயாவின் இழப்பு நீர்வேலி மக்களுக்கு பேரிழப்பாகும்.

சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் 🌹
தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் 26/12/2020இல் இறையடி சேர்ந்து விட்டார்.
அனைவரோடும் அன்பாக பேசுவதிலும் ஆசிர்வதிப்பதிலும் அருள்நிறைந்த குருவாக திகழ்ந்த ஐயா அவர்களது மறைவு நீர்வேலி வாழ் மக்கள் அனைவரையும் மிகவும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஐயா அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் குருக்கள் ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வாய்க்காற்தரவை விநாயகப்பெருமான் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

மேலும் வாசிக்க

அத்தியார் இந்துக்கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் நிதியுதவி

நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த திரு சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தனது மனைவி அமரர்  திருமதி .கண்மணியம்மா கணபதிப்பிள்ளை மற்றும்  மகளான   அமரர் செல்வி .அபிராமி கணபதிப்பிள்ளை ஆகிய  இருவரினதும் ஞாபகார்த்தமாக அத்தியார் இந்துக்கல்லூரிக்கு ரூபா ஒரு இலட்சம் நிதியுதவியினை பாடசாலை அதிபர் அவர்களிடம் வழங்கியுள்ளார். கல்லூரியின் ஸ்தாபகர் தினத்திற்கு ரூபா பத்தாயிரமும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு ரூபா பதினையாயிரமும் கட்டுரைப்போட்டிக்காக ரூபா 25 000 ம் வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு ரூபா 50 000 ம் என்ற வகைகளுக்குள் மேற்படி ரூபா ஒரு இலட்சம் நிதியுதவியினை திரு .சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியுள்ளார். பாராட்டுக்கள் மேலும் வாசிக்க

கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு அடிக்கல்

கோப்பாய் தொகுதி(சப்ரிக் கமக்) நீறைவான-கிராமம் -அபிவிருத்திதிட்டம் -யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ அங்கயன் இராமநாதன் அவர்களினால் “நிறைவான கிராமம் “திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா நீதி ஒதுக்கீட்டில்நீர்வேலிவடக்கு j-269 கிராம பிரிவில் உள்ளகிராமசக்தி மக்கள் சங்கத்திற்கான கட்டிடத்திற்கு 11.12.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது

மேலும் வாசிக்க

ஆபத்தான இடமாக கரந்தன் கேணியடி பாதை

இது நீண்ட காலமாக பாதுகாப்பற்ற, ஆபத்தான  ஒரு இடமாக உள்ள ஒரு நீர்நிலை (கேணியடி) .
நீர்வேலியில் உள்ள கரந்தன் ஊரெழு வீதியில் உள்ளது. வீதியால் வேகமாக வருபவர்கள் இக் கேணிக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாவதற்கு சாத்தியம் அதிகமாகவே உள்ளது. இவ் வீதியினால் பயணிக்கின்றவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். விரைவாக பாதுகாப்பு வேலிகள் இடப்பட்டு துப்பரவு செய்யப்படும்பட்சத்தில் நீர்நிலை பாதுகாக்கப்படுவதுடன் மக்களுக்கு விசேடமாக சிறுவர்கள், வயோதிபர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும் தவிர்க்கலாம்.
(நன்றி- இளையதம்பி தவராசா )

மேலும் வாசிக்க

ஆத்மஜோதி ஏழாலை முத்தையா அவர்கள் நீர்வேலிக்கு வந்தபோது

சைவத்திற்கும் தமிழிற்கும் பெருமை சேர்த்த , அதற்காகவே தன்னை அர்ப்பணித்த மாகான்களில் ஒருவரே இவர். “ஆத்மஜோதி ஏழாலை முத்தையா அவர்கள்”. ஆத்மஜோதி ஏழாலை முத்தையா அவர்களும் அவரது குழுவும் எமது ஊரான நீர்வேலிக்கு பாதயாத்திரை வந்த போது எடுக்கப்பட்ட அரியபுகைப்படம்.எமது ஊரில் உள்ள எங்கள் குலதெய்வமான அம்மனை தரிசித்தபோது எடுத்த பதிவுகள் சில. காலத்தால் அழியாதவை.

மேலும் வாசிக்க