www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

பாலர்பகல்விடுதி மாணவர்களின் சுற்றுலா

மேலும் வாசிக்க

அத்தியார் மற்றும் கரந்தன் பாடசாலைக்கு கணனிகள் அன்பளிப்பு

நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வதியும் திரு.புண்ணிமூர்த்தி அவர்கள் தனது தாயாரின் 31 ம் நாள் நினைவு நாளான 03.01.2020 அன்று  தனது தாயாரின் நினைவாக நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு இரண்டு கணனிகளையும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு ஒரு கணனியினையும்  பாடசாலைகளின் அதிபர்களிடம்  வழங்கியுள்ளார். பாராட்டுக்கள் திரு புண்ணியமூர்த்தி அவர்களே. இதுவரை  அத்தியார் பாடசாலைக்கு 5 க்கு மேற்பட்ட கணனிகளை வழங்கியுள்ளார்.கரந்தன் இராமுப்பிள்ளை பாடசாலைக்கும் ஏற்கனவே 01 கணனியினை வழங்கியிருந்தார். இவர் அத்தியார் இந்துக்கல்லூரி கணனியகத்திற்கு இன்ரர் நெற் இனை தனது செலவில் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.  கல்வியை முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்  உதவிகளை மேற்கொண்டுவரும் திரு.புண்ணிமூர்த்தி அவர்களை அனைவரும் பாராட்ட வேண்டும். மேலும் வாசிக்க

நீர்வேலி இளைஞரின் தயாரிப்பில் ”சினங்கொள் ” திரைப்படம்

நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த கனடாவில் வதியும் றஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் தயாரிப்பில் ”சினங்கொள் ” திரைப்படம் 03.01.2020 ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் 20 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன. நீர்வேலி உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்ட இப்படத்தினை இந்தியாவில் பல சினிமாத்துறை சார்ந்தவர்கள் வாழ்த்தி இருப்பதுடன் நல்ல துறைசார்ந்த விமர்சனங்களையும் வழங்கியுள்ளனர்.”துரோகம்”, “காசுமரம்” போன்ற படத்தின் பின்னர் இயக்கும் படமிதுவாகும்.அத்துடன் றஞ்சித் ஜோசப் அவர்கள் ரோஜாக்கூட்டம் சொல்லாமலே போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு.சசி அவர்களின் கீழ் உதவி இயக்குனராக கடமையாற்றியிருந்தார்.எனவே பல நாடுகளிலும் வாழும் எமது நீர்வேலி உறவுகள் அனைவரும் ”சினங்கொள் ” திரைப்படத்தினை திரையரங்குகளிற்கு சென்று பார்வையிட்டு றஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு  எமது நீர்வேலி  இணையம் கேட்டுக்கொள்கின்றது.


மேலும் வாசிக்க

இந்து இளைஞர் மன்றத்தினால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன

நீர்வேலி தெற்கு இந்து இளைஞர் மன்றத்தினாரால் கரந்தன் வீதியில் முக்கியமான இடங்களில் மின்விளக்குகள் 28.12.2019 அன்று பொருத்தப்பட்டுள்ளன.


மேலும் வாசிக்க

நீர்வேலியில் இருந்து அவதானிக்கப்பட்ட சூரிய கிரகணம்
மேலும் வாசிக்க

நீர்வேலி இந்துமயானம் திருத்தம்- தீர்மானம் எடுக்கப்பட்டது

நீர்வேலி தெற்கு இல் “சபிரி கமக்”. சமுதாயமட்ட கிராம அபிவிருத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் (2020) கீழ் நீர்வேலி தெற்கு இந்துமயான வீதி திருத்துவதற்கு 2மில்லியன் ரூபா கிடைப்பதற்காக எல்லா பகுதி மக்களும் ஆதரவாக திட்டமுன்மொழிவைஏற்றுக் கொண்டனர். இது மிகவும் அவசியமான ஒரு செயற்பாடு ஆகும்.நீர்வேலி தெற்கு மக்கள் நீர்வேலி தெற்கு இந்துமயான வீதியை பயன்படுத்தமுடியாமல் நீண்டகாலமாக பெயன்படுத்த முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இம் முயற்சியில் ஈடும் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.


மேலும் வாசிக்க

இசைத்துறையில் சாதனைகள் படைத்துவரும் செல்வி அபிநயா

  நீர்வேலியை தாயகமாக கொண்ட பதினேழு வயதினையுடைய செல்வி அபிநயா மதனராஜா அவர்கள் இலண்டனில் இசைத்துறையில் பல வியத்தகு சாதனைகள் படைத்துவருகின்றார். நீர்வேலி வடக்கு இராஜ வீதியில் வசித்த விஜயரட்ணம் (நீர்வேலிச்சந்தியில் முன்னர் மருந்தகம் வைத்திருந்தவர்) அவர்களுடைய மகன் மதனராஜா அவர்களுக்கும் பிறேமி அவர்களுக்கும் மகளாக பிறந்த செல்வி அபிநயா அவர்கள் இது வரை ஐந்து பாடல்களை தனது சொந்தக்குரலில் பாடியுள்ளார். அதில் மட்டக்களப்பு நாககாட்டு அம்மனுக்காக பாடிய பாடல் சிறப்பு வாய்ந்தது. இசைக்குழுவில் இணைந்து பல தென்னிந்திய சினிமா பாடல்களை பாடிவரும் செல்வி அபிநயா அவர்கள் இசைக்காக பலவிருதுகளையும் வென்றுள்ளார். 2017 இல் ஆவர்த்தனா பிரியராகங்கள் கானக்குயில் இசைத்தமிழன் விருது ஆகியவற்றினையும் 2018 இல் கானக்குயில் Title Winner ஆகவும் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. A/L பிரிவில் விஞ்ஞானபாடத்தினை கற்றுவரும் அபிநயா அவர்கள் சங்கீதத்தில் 7 Grade ம் பெற்ற இவர் Piano ம் கற்றுவருகின்றார். அத்துடன் IBC தமிழ் TV இல் ”நிலவைப்பிடிப்போம் ” எனும் நிகழ்ச்சியினை செய்துவருகின்றார். செல்வி அபிநயாவின் திறமைகள் அறிந்து நீர்வேலி கிராமம் பெருமைகொள்கின்றது. மேலும் பல உயர்வுகளை பெற்று எமது ஊரின் புகழை பறைசாற்ற தங்கை அபிநயா அவர்களுக்கு இணையத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக.


மேலும் வாசிக்க