www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி தகவல்களை உலகிற்கு பரப்பும் இணையம்

நீர்வேலித்தகவல்களை உடனுக்குடன் உலகிற்கு பரப்பும் ஒரே ஒரு இணையம் இதுவாகும். 1.12.2019 இல் ஏழு ஆண்டுகளைக்கடந்து இன்று எட்டாவது அண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மேலும் பல ஆண்டுகள் எமது ஊரின் சிறப்புக்களையும் நிகழ்வுகளையும் எமது நீர்வேலி உறவுகள் அறிய தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல நீர்வேலி கந்தனை வேண்டி    வாழ்த்துகின்றேன்.

அன்புடன்

திரு.பொ.சரவணபவானந்தன் (ஆசிரியர்)

பொருளாளர்

நீர்வேலி கந்தசுவாமி கோவில்

 

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் வாழ்த்து

Congratulations!!!! NewNeervely.Com

Congratulations NewNeervely.com on your 7th Anniversary. You continue to do an astonishing job at covering Neervely related events and news. Neervelians around the world use your website regularly to stay updated on all things Neerverly related. Kudos to Team NewNeervely.Com. You have been consistently improving the website and its contents while maintaining quality. Your sincerity and dedication to our Neervely community is exceptional.
We sincerely appreciate everything you do for the people of Neervely and we wish you success in all your endeavors.

Best Wishes!!

Neervely Welfare Association – Canada

P. Jegan President மேலும் வாசிக்க

காட்சிகளையும் செய்திகளையும் கிராமிய மணம் கமழும் வகையில்

நீர்வேலியின் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என அனைத்து திசைகளிலும் அங்கு கண்ட காட்சிகளையும் கேட்ட செய்திகளையும் கிராமிய மணம் கமழும் வகையில் விழுமியம் மாறாமல் ஒன்று திரட்டித் தருவது newneervely.com   ஆகும்.  ஏழாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்து எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நீர்வேலி இணையத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்

கணேஸ் குகதாசன்

கனடா

பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இந்த இணையம்

நீர்வேலி இணையம் காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்து  வருகிறது. நீர்வேலியில் இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இந்த இணையம் ஆகும். இந்தத் தகவல் சாசனம்  ஏழு ஆண்டுகளை கடந்து எட்டாவது ஆண்டில் காலடி பதிக்கிறது இந்த நிறைவைப் பாராட்டி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
ந.மதனரூபன்
லண்டன்

நீர்வேலி தெற்கு -புளியடி அதிசயம்

இலங்கையில் சைவர்கள் செறிந்து வாழும்/வாழ்ந்த இடங்களில் பல வைரவர் கோயில்களை காணலாம். ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இவைகள் அமைக்கப்பட்டன என பலரும் கூற கேள்விப்பட்டிருக்கிறேன், உண்மையோ தெரியாது ஆனால் அவர்கள் கூறிய காரணங்கள் நம்பத்தகுந்ததாக உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்துசமய தெய்வங்களை வழிபடுவதற்கு தடைகள் இருந்ததாகவும், இப்படியாக வைரவர் சூலங்களை வைத்து வழிபட்டால் ஆங்கிலேயர்கள் வரும்போது சூலத்திலன் இருபுறமும் உள்ள கம்பிகளை வளைத்து நிலத்திற்கு சமாந்தரமாகி, அதை உடனே சிலுவையாக்கி அவர்களிடமிருந்து தப்பித்து விடுவதாகவும் கேள்வி. சூலம் அநேகமான நேரம் சிலுவையாகவும் வழிபடும் நேரம் மாத்திரம் சூலமாகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம். எப்படிப் பார்த்தாலும் எல்லாம் கடவுள் தான். மேலும் வாசிக்க

Smart Class Room கரந்தன் இராமுப்பிள்ளையில் திறப்பு

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் திறன்வகுப்பறை என அழைக்கப்படும் smart class room 29.11.2019 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

நீர்வேலியூர் மூத்த ஆங்கில ஆசிரியர் திரு த. ந. பஞ்சாட்சரம்

எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலம் ஒரு பாடமாக, மொழியாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு ஆடம்பரமாகவும், ஒரு அந்தஸ்தாகவும் பார்க்கப்பட்டது. “அடேய் , அவன் இங்கிலீசுலை கதைக்கிறானடா” என்று எட்டி நின்று வாயில் கைவைத்தவர்கள் அதிகம். இந்த நோக்கு பாடசாலை மாணவர்களிடையே மட்டுமில்லாமல் எமது சமுதாயத்திலும் பலரிடையே காணப்பட்டது. ஆங்கிலத்தை ஓரளவு எழுதிப் பேசத் தெரிந்தவர்களும், ஆங்கிலம் தெரிந்திருப்பதால் தாங்கள் சமூகத்தில் கொஞ்சம் உயர் நிலையில் இருப்பதாக போலியான மாயையில் மூழ்கியிருந்தார்கள்.

எனது பள்ளிக்காலங்களில் ஆங்கிலம் எனக்கு சிதம்பரசக்கரம் தான்! எப்பதான் இது என்னைவிட்டு தொலையுமோ என்று நான் ஏங்கிய நாட்கள் அதிகம், இதற்கு எமக்கு ஆங்கில பாடத்தை சொல்லித்தந்த ஆசிரியர்களும் ஒரு காரணம் (எல்லோரும் அல்ல), பல நேரங்களில் புத்தகத்தை வாசித்தல், சொல்வதெழுதல் இத்தோடு ஆங்கிலம் முடிந்துவிடும். சில ஆசிரியர்களுக்கு தாங்கள் சரியாக சொல்லித்தருகிறோமோ என்றே தெரியாது எனவே இவர்களிடம் படித்தால் எமது நிலைமை எப்படியிருக்கும் ? ஆங்கிலத்தில் ‘blind leading the blind’ என்று சொல்லுவார்கள், அப்படித்தான் எங்களில் பலரின் நிலை இருந்தது. மேலும் வாசிக்க