S.K.கந்தையா மாஸ்ரர் அந்தக்காலத்தில் (engine search) தேடல் இயந்திரமாக………….
[:ta]
1995ம் ஆண்டில் தான் google engine search ஆரம்பமானது. ஆனால் எமதுகிராமத்தில் 1945ம் ஆண்டில் S.K. Kandiah Master search engine ஆக அறிவில் திகழ்ந்தார். இவர் தமிழ், லற்றின், ஆங்கிலம், ரசியன், ஜேமன், போன்ற ஐந்து மொழிகளில் நன்கு எழுத, வாசிக்க, கதைக்க கூடிய வல்லுனராக திகழ்ந்தார்.எனது சிறு பராயத்தில் பாலா ரீச்சருடன் உடன் கந்தையா மாஸ்டர் வீட்டிற்கு செல்வது வழக்கம். கேற்றை திறந்ததும் விறாந்தையில் சார்மனைக் கதிரையில் இருந்து புத்தகம் வாசித்துக்கொண்டு இருப்பார். இவருடன் உரை யாடிய பின்பு வீட்டின் நுழை வாசலூடக உள்செல்லும்போது இரு பக்கமும் புத்தகங்கள் நிறைந்த அலுமாரிகள் இருக்கும் மனதில் வாசிகசாலையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதனையும் தாண்டி உள்சென்று அவரின் மனைவியார் வேதவல்லி ரீச்சரை காண்போம். எங்களை வரவேற்று இனிப்பான சிற்றுண்டிகள், தேநீர் தந்து நன்கு உபசரிப்பார். அங்கு துணிகளில் தைக்கப்பட்டு பஞ்சினால் நிரப்பப்பட்டு கண்களுக்கு தெறிகள் கட்டப்பட்ட முயல்,ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரை, மாடு, பன்றி, கரடி , குதிரை, போன்ற மிருகங்கள் கண்ணிற்கு குளிர்சியாக இருக்கும். மறுபக்கம் தக்காளி பழத்தில் ஜாம், மரவெள்ளி கிழங்கில் பணியாரங்கள். சமையல் கலை, தையல் கலை, சமூக சேவைகள் என்பவற்றை எமது கிராம மக்களுக்கு ஊட்டிய வேதவல்லி ரீச்சர், கந்தையா மாஸ்டர் என்பவர் களை என்றும் மறவோம்.
(நன்றி-பாலா அருணாசலம் -கனடா)
[:en]

[:]
0 Comments